வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (25/03/2017)

கடைசி தொடர்பு:16:00 (25/03/2017)

1GB டேட்டா இலவசம்: பி.எஸ்.என்.எல் அதிரடி!

இன்டர்நெட் பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கு, 1GB டேட்டா, இலவசமாக வழங்கப்படும் என்று பி.எஸ்.என்.எல் கூறியுள்ளது.

BSNL

ஜியோவின் வருகைக்குப் பிறகு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன. முக்கியமாக, ஜியோவின் இலவச  ஆஃபர் இந்த மாதத்துடன் முடிகிறது. இதையடுத்து, 99 ரூபாய்க்கு ஜியோ ப்ரைம் திட்டத்தில் சேர்வதன் மூலம், அதன், ஆஃபர்களை பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து அதிகரிக்கும், போட்டியால் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தினசரி,  பல்வேறு அதிரடி ஆஃபர்களை வழங்கி வருகின்றன. இந்நிலையில், பி.எஸ்.என்.எல் நிறுவனம் இன்டர்நெட் பயன்படுத்தாத, ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களை கவர புதிய ஆஃபரை வழங்கியுள்ளது. அதன்படி, அவர்களுக்கு 1GB டேட்டா, இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்டர்நெட் வாடிக்கையாளர்களை அதிகரிப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.