வெளியிடப்பட்ட நேரம்: 07:16 (26/03/2017)

கடைசி தொடர்பு:07:14 (26/03/2017)

நாளை அறிமுகமாகிறது 2017 நிஸான் டெரானோ! #Nissan #SUV

 

 

ரெனோவுக்கு டஸ்ட்டர் எப்படியோ, நிஸானுக்கு டெரானோ அப்படி. கடந்த ஆண்டு நவம்பரில், 6 ஸ்பீடு AMT கியர்பாக்ஸ் ஆப்ஷனுடன், டெரானோவின் ஆட்டோமேட்டிக் மாடலைக் களமிறக்கியது நினைவில் இருக்கலாம். இது கடந்தாண்டு மார்ச் மாதத்தில் வெளியான டஸ்ட்டரின் ஃபேஸ்லிஃப்ட்டில் இருந்ததுதான். எனவே அப்போது அந்த காரில் புதிதாகச் சேர்க்கப்பட்ட விஷயங்களை, டெரானோவில் பொருத்துகிறது நிஸான்! மாற்றியமைக்கப்பட்ட பம்பர்கள் மற்றும் க்ரில், புதிய ஃபேப்ரிக்குடன் மேம்படுத்தப்பட்ட கேபின், டச் ஸ்கிரீன் - கிளைமேட் கன்ட்ரோல் - க்ரூஸ் கன்ட்ரோல் என அதிக சிறப்பம்சங்கள், கன்ட்ரோல்களுடன் கூடிய புதிய ஸ்டீயரிங் வீல் என கணிசமான அம்சங்கள் காரில் இடம்பெறும் எனத் தெரிகிறது. இன்ஜின் - கியர்பாக்ஸ் ஏரியாவில் எந்த மாற்றமும் இருக்காது என்றாலும், காரின் விலையில் மாற்றம் இருப்பதற்கான சாத்தியம் அதிகம்!

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க