வெளியிடப்பட்ட நேரம்: 12:31 (27/03/2017)

கடைசி தொடர்பு:12:31 (27/03/2017)

‘எங்க நாடி நரம்பு ரத்தம் சதை எல்லாம் கிரிக்கெட்தான்!’ - ட்ரோல் கிரிக்கெட் தமிழ் வெர்ஷன் அட்மின்கள்!

ட்ரெண்டாகும் விஷயங்களை ஐடியாவாக வைத்து மீம் அப்லோட் பண்றது வழக்கம். அதில் பெரும்பாலும் சினிமா, கிரிக்கெட் தொடர்பானவையாக இருக்கும். அப்படி கிரிக்கெட்டுக்கு என்று பல ட்ரோல் பேஜ்கள் இருந்தாலும் ஃபேஸ்புக், ட்விட்டர் இந்த இரண்டிலும் பேமஸ் 'ட்ரோல் கிரிக்கெட் தமிழ் வெர்ஷன்' என்ற இந்தப் பக்கம்தான். பெயரை வைத்து தப்பா புரிஞ்சுக்க வேண்டாம் மக்களே... இவங்க ட்ரோல் பண்றது கிரிக்கெட்டை இல்லை... கிரிக்கெட்டில் நடக்குற சுவாரசியமான விஷயங்களையும், ரசிக்கும்படியான கலாய் நிகழ்வுகளையும் வெச்சு மீம்ஸ்களை போடுவதுதான் இவங்க குல தொழிலே. இப்போ நடந்துட்டு இருக்க டெஸ்ட் மேட்சில் கூட 'புஜாரா' முதல் 'ஸ்டீவன் ஸ்மித்' வரைக்கும் 'வெச்சு' செய்யும் அந்தப் பேஜ் அட்மின்களுள் ஒருவர் நம்மிடம் சேட்டில் சிக்கினார்.

ட்ரோல் கிரிக்கெட்

யார்யா நீங்க எனக்கே உங்களை பார்க்கணும் போல இருக்கு'?

ட்ரோல் கிரிக்கெட்

ஆரம்பிக்கும்போது 6 பேர்தான் இருந்தோம். அடுத்து பிக் அப் பண்ணி இப்போ இதுக்குன்னு ஒரு பதினாறு பேர் கொண்ட குழு இருக்கு என்றார் சிரித்தபடி. 2014-ல் இலங்கைக்கு எதிரான மேட்சில் இருந்து ஆரம்பித்ததுதான் இந்த பேஜ். அந்த மேட்சில் ரோகித் ஷர்மா 264 ரன்கள் அடித்தார். அதிலிருந்து நாங்களும் மீம்ஸ் ரெடி பண்ணி களத்தில் இறங்கி அடிக்கலாம் என்று முடிவு பண்ணோம். பின் சோஷியல் மீடியாவில் தனித்தனியாய் இருந்த சில பேஜ்களையும் அதன் அட்மின்களையும் ஒண்ணு சேர்த்து உருவான கூட்டம்தான் இந்த 'ட்ரோல் கிரிக்கெட் தமிழ் வெர்ஷன்'. ஒருவருக்கொருவர் தெரியாத முகம்தான். ஆனா, சீக்கிரமே நண்பர்கள் ஆயிட்டோம். இதில் மூணு, நாலு பேர் வேலை பாக்குறாங்க. மத்தபடி எல்லாரும் ஸ்டூடண்ட்ஸ்தான்.  

அது ஏன் குறிப்பிட்டு கிரிக்கெட்டில் களம் இறங்குனீங்க?

ட்ரோல் கிரிக்கெட்

கிரிக்கெட்னா எங்களுக்கு ரொம்ப பிடிக்கும். ஒவ்வொரு தொடர் வர வர எங்களுக்கு முரட்டுத் தீனி. அப்போ எங்களோட முக்கியமான நோக்கமே 2015 உலக கோப்பைதான். அப்புறம் ஒவ்வொரு மேட்ச்லயும் எங்க வேட்டை தொடங்குச்சு. மீம்ஸ் நல்லா ரீச் ஆனதால அப்படியே தொடர்ந்து பண்ண ஆரம்பிச்சுட்டோம். சில மீம்ஸ்களுக்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்குள்ளேயே சண்டை வரும். தோனி ரசிகர்கள் ஒரு பக்கம், கோலி ரசிகர்கள் ஒரு பக்கம்னு மோதிப்பாங்க. அந்த சண்டைகள் எல்லாம் குறையணுங்கிறதுதான் எங்க நோக்கம்.

மறக்க முடியாத பாராட்டுகள் ஏதாவது?

ட்ரோல் கிரிக்கெட் தமிழ் வெர்ஷன்

அது நிறைய வந்துருக்கு. ஒரு தடவை 'டைம்ஸ் நவ்' பேஜில் எங்க மீம் போட்ருந்தாங்க. அதை பார்க்கும்போது செம ஹேப்பி. இலங்கை நியூஸ் பேப்பர்லேயும் எங்க மீம்ஸ் போட்ருந்தாங்க. இலங்கை வரைக்கும் பேமஸ் ப்ரோ நாங்க. அட இதையெல்லாம் விடுங்க ப்ரோ, விகடன்லயும் வேர்ல்ட் கப் டைம்ல எங்க மீம்ஸ்தான் போட்டாங்க. (இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே... அடேங்கப்பா). அப்பப்போ டி.விலகூட வந்துருக்கு. நம்ம வீரேந்தர் சேவாக் கூட அவரோட ட்விட்டர் பக்கத்துல எங்க மீமை ஷேர் செஞ்சுருக்காரு ப்ரோ. அவருக்கு தமிழ் தெரியலைனாலும் ஒருத்தர் மொழிபெயர்த்து போட்ருந்ததை ரீட்வீட் பண்ணிருந்தாரு.

அடுத்த கேள்வி என்னன்னா....?

'போதும் ஜி! ரொம்ப லென்த்தா போகுது. இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் வேற போயிட்டிருக்கு. ஐ.பி.எல் மீம்ஸ் வேற ரெடி பண்ணணும். ஸோ, நாங்க உத்தரவு வாங்கிக்குறோமே' என எஸ்கேப்பானார்.

தொடர்ந்து ட்ரோல் பண்ணுங்கய்யா!  

 

- தார்மிக் லீ


டிரெண்டிங் @ விகடன்