Published:Updated:

நைஜீரிய மாணவர் தாக்கப்பட்ட விவகாரம்: வெளியுறவுத்துறை அமைச்சர் ஆறுதல்

நைஜீரிய மாணவர் தாக்கப்பட்ட விவகாரம்: வெளியுறவுத்துறை அமைச்சர் ஆறுதல்
நைஜீரிய மாணவர் தாக்கப்பட்ட விவகாரம்: வெளியுறவுத்துறை அமைச்சர் ஆறுதல்
நைஜீரிய மாணவர் தாக்கப்பட்ட விவகாரம்: வெளியுறவுத்துறை அமைச்சர் ஆறுதல்

உத்தரப்பிரதேச நொய்டாவில் தாக்கப்பட்ட நைஜீரிய மாணவர் சாதிக் பெல்லோ தன் ட்விட்டர் பக்கத்தில் எழுப்பிய கேள்விக்கு சுஷ்மா ஸ்வராஜ் பதிலளித்துள்ளார்.

நொய்டாவில் மனிஷ் காரி என்ற பள்ளி மாணவன் மரணம் தொடர்பாக நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. நொய்டாவில் இருக்கும் வெளிநாட்டு இளைஞர்களால் அங்கிருப்பவர்கள் போதைப் பழக்கத்துக்கு ஆளாவதாகவும் மனிஷ் காரி கடந்த சனிக்கிழமை அதிகளவிலான போதை மருந்தை உட்கொண்டதால்தான் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு அவர் இறந்தார் என குற்றம் சாட்டிய பொதுமக்கள் பேரணியாக சென்றனர்.

அப்போது அங்கிருந்த நைஜீரிய மாணவர்களை சிலர் தாக்கத் தொடங்கினர். இதில் காயமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் ஒருவரான மாணவர் சாதிக் பெல்லோ தனது ட்விட்டர் பக்கத்தில் , வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜிடம், 'நொய்டாவில் நாங்கள் வாழ அச்சுறுத்தல் இருக்கிறது. அரசாங்கம் உடனே இதற்குத் தீர்வு காண வேண்டும்' என்று பதிவிட்டார். அதற்கு பதிலளித்த சுஷ்மா ஸ்வராஜ், 'இந்திய அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்கும். இவ்விவகாரம் குறித்து உத்தரப்பிரதேச முதலமைச்சரிடம் பேசியுள்ளேன்' என்று கூறியுள்ளார். இதையடுத்து, உத்தரப்பிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத், நடுநிலையான விசாரணை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்துள்ளார்.