Published:Updated:

டி.டி.வி.தினகரனுக்கு அதிர்ச்சிகொடுத்த பெண் நிர்வாகி! உறைந்துபோன ரத்தத்தின் ரத்தங்கள்  

நமது நிருபர்
டி.டி.வி.தினகரனுக்கு அதிர்ச்சிகொடுத்த பெண் நிர்வாகி!  உறைந்துபோன ரத்தத்தின் ரத்தங்கள்  
டி.டி.வி.தினகரனுக்கு அதிர்ச்சிகொடுத்த பெண் நிர்வாகி! உறைந்துபோன ரத்தத்தின் ரத்தங்கள்  
டி.டி.வி.தினகரனுக்கு அதிர்ச்சிகொடுத்த பெண் நிர்வாகி!  உறைந்துபோன ரத்தத்தின் ரத்தங்கள்  

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் டி.டி.வி.தினகரன், 'பல லட்சம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார்' என்று ஆளும் கட்சிப் பெண் பிரமுகர் தெரிவித்த பேட்டியால், ரத்தத்தின் ரத்தங்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

 ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், சசிகலா அணி வேட்பாளராக டி.டி.வி.தினகரன் போட்டியிடுகிறார். வெளி மாவட்டங்களிலிருந்து ஏராளமானவர்கள் தேர்தல் பிரசாரத்துக்கு வந்துள்ளனர். இதனால், தொகுதியில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுகிறது. கொளுத்தும் வெயிலைப் பொருட்படுத்தாமல், கட்சியினர் தொப்பி அணிந்தபடி வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்துவருகின்றனர். டீ கடை, குளிர்பானக்கடை முதல் டாஸ்மாக் கடைகள் வரை கூட்டம் அலைமோதுகின்றன. சென்னையைச் சேர்ந்த பெண் பிரமுகர் ஒருவர்,  தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். அவரிடம், தனியார் தொலைக்காட்சி சார்பில் பேட்டி எடுக்கப்பட்டது. அப்போது, டி.டி.வி. தினகரன், பல லட்சம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார் என்று அந்த பெண் பிரமுகர் தெரிவித்தார். இதைக் கவனித்த ரத்தத்தின் ரத்தங்கள், தொகுதியில் மொத்தமே 2 லட்சத்து 65 ஆயிரம் வாக்காளர்களே உள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளபோது, ஆர்வக்கோளாறு காரணமாக அந்தப் பெண் பிரமுகர் அளித்த பேட்டிகுறித்த விவரம், டி.டி.வி.தினகரன் தரப்புக்கு உடனடியாகத் தெரிவிக்கப்பட்டது. இதனால், டி.டி.வி.தினகரன் தரப்பு பேட்டிகொடுத்த பெண் பிரமுகரை அழைத்து எச்சரித்துள்ளது. அதோடு, இனிமேல் இதுபோல யாரும் அவசரப்பட்டு, உணர்ச்சிவசப்பட்டு செயல்படக்கூடாது என்றும் அறிவுரை சொல்லப்பட்டுள்ளது. 


இதுகுறித்து, பிரசாரத்தில் ஈடுபட்டுவரும் சசிகலா அணியினர் கூறுகையில், "ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரனுக்கு தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளோம். அப்போது, அங்கு வந்த தொலைக்காட்சிக்கு அந்தப் பெண் பிரமுகர் பேட்டியளித்தார். வேட்பாளர் டி.டி.வி.தினகரன், 50 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவதாகத் தெரிவித்தார். அவரே அப்படிச் சொல்லும்போது, பெண் பிரமுகர் பல லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவோம் என்று தெரிவிப்பது எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட பெண்ணிடம் கட்சியின் மூத்த நிர்வாகிகள் சில அறிவுரைகளைச் தெரிவித்தனர். பேட்டி எடுத்த தொலைக்காட்சி நிருபரிடம் அந்த வார்த்தையை நீக்கும்படித் தெரிவித்தோம். அந்தத் தொலைக்காட்சி, பிரபலமாகாதது என்பதால், இந்த விவகாரம் பிரபலமடையவில்லை. இதனால் கட்சித் தலைமை, பேட்டிகொடுக்க கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. கட்சித் தலைமை குறிப்பிடுபவர்கள் தவிர, மற்றவர்கள் பேட்டி அளிக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது" என்றனர். 
 
தொகுதி முழுவதும் வலம்வரும் சசிகலா அணியினர், வீடு வீடாகச் சென்று, தொப்பி சின்னத்துக்கு வாக்கு சேகரித்து வருகின்றனர். அப்போது, பொது மக்களின் மனநிலையை அறிந்துகொள்ளும் வகையில் சில யுக்திகளைப் பிரசாரத்தில் ஈடுபடும் பெண்கள் பயன்படுத்துகின்றனர். பிளாஸ்டிக்கான சிறிய வடிவ பொம்மைத் தொப்பிகளை, சசிகலா அணியினர் வாக்குசேகரிப்பின்போது கொடுக்கின்றனர். இது, சின்னத்தைப் பிரபலப்படுத்த வழிவகுக்கும் என்று அவர்கள் நம்புகின்றனர். இதற்கு, வேறு அர்த்தம் இருப்பதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது, பொம்மைத் தொப்பிகளை ஆர்வத்தோடு வாங்குபவர்கள் எல்லாம், 'நம்ம ஆளு' என்று சசிகலா அணி தரப்பு கணக்கிட்டுக்கொள்கிறதாம். 

நமது நிருபர்