Published:Updated:

டி.டி.வி.தினகரனுக்கு எதிராகக் களமிறங்கியது, பன்னீர்செல்வம் அணி!

டி.டி.வி.தினகரனுக்கு எதிராகக் களமிறங்கியது, பன்னீர்செல்வம் அணி!
டி.டி.வி.தினகரனுக்கு எதிராகக் களமிறங்கியது, பன்னீர்செல்வம் அணி!

ஆர்.கே.நகர் தொகுதியில், டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள் பணப்பட்டுவாடா செய்தவாக, ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளனர். 

டி.டி.வி.தினகரனுக்கு எதிராகக் களமிறங்கியது, பன்னீர்செல்வம் அணி!


 

ஏப்ரல் 12-ம் தேதி நடைபெறவிருக்கும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அணியினர், இரட்டை மின்கம்பம் சின்னத்தை, இரட்டை இலைச் சின்னம் போன்று தவறாக பிரசாரம் செய்து வருவதாக,  டி.டி.வி தினகரன் தேர்தல் ஆணையத்தில் நேற்று புகார் அளித்தார். 

இதனிடையே, அ.இ.அ.தி.மு.க புரட்சித்தலைவி அம்மா வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து நேற்று பிரசாரத்தை துவங்கிய ஓ.பன்னீர்செல்வம், பிரசாரத்தின்போது டி.டி.வி.தினகரனை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.  மேலும், செய்தியாளர்களிடம் கூறுகையில், "தினகரனுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால்தான், தேர்தல் ஆணையத்தில் தேவையற்ற புகார் அளித்துள்ளார்" என்றார்.

இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மைத்ரேயன், கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர், இன்று காலை டெல்லி தலைமைத் தேர்தல் ஆணையத்தில், டி.டி.வி.தினகரனுக்கு எதிராக புகார் மனு ஒன்றை அளித்தனர். மனுவில், ஆர்.கே.நகர் தொகுதியில் முறைகேடுகளைத் தடுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் பணப்பட்டுவாடா செய்தவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.