Published:Updated:

'போராட்டத்தைக் கைவிடுங்கள்!'- விவசாயிகளிடம் தம்பிதுரை நேரில் வலியுறுத்தல்

ர.பரத் ராஜ்
'போராட்டத்தைக் கைவிடுங்கள்!'- விவசாயிகளிடம் தம்பிதுரை நேரில் வலியுறுத்தல்
'போராட்டத்தைக் கைவிடுங்கள்!'- விவசாயிகளிடம் தம்பிதுரை நேரில் வலியுறுத்தல்
'போராட்டத்தைக் கைவிடுங்கள்!'- விவசாயிகளிடம் தம்பிதுரை நேரில் வலியுறுத்தல்

டெல்லி, ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழக விவசாயிகளை, தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு மற்றும் மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர்  இன்று சந்தித்துப் பேசினர். அப்போது அவர்களிடம், தங்களது போராட்டத்துக்கான கோரிக்கைகளை, போராட்டத்தை  ஒருங்கிணைத்திருக்கும் அய்யாக்கண்ணு எடுத்துக் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, 'விவசாயிகளின் பிரச்னையைக் கேட்டறிந்தோம். உள்துறை மற்றும் வேளாண்துறை அமைச்சர்களிடம் தமிழகத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ள நிவாரணம் போதாது என்று எடுத்துக் கூறியுள்ளோம். மீண்டும் மத்திய அமைச்சர்களைச் சந்தித்து, கோரிக்கைகளை எடுத்துக் கூற இருக்கிறோம். விவசாயம் இல்லாமல் யாரும் வாழ முடியாது. மத்திய அரசிடம் நாங்கள் காவிரி மேலாண்மை குறித்த பிரச்னையைக் கவனத்துக்குக் கொண்டுசென்றோம். உச்சநீதிமன்றத் தீர்ப்பு அமல் செய்யப்படும் என்றனர். போராட்டத்தைக் கைவிடுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். எனவே, போராட்டத்தை நிறுத்திக்கொள்ள வேண்டுமென்று விவசாயிகளைக் கேட்டுக்கொள்கிறோம்' என்று கூறினார்.

அமைச்சர் துரைக்கண்ணு, 'விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசிடம் வலியுறுத்தி இருக்கிறோம். விவசாயிகளின் போராட்டத்துக்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும். தமிழக அரசு அரணாக இருந்து விவசாயிகளைக் காத்துவருகிறது. குடிநீருக்கே தமிழகம் கஷ்டப்பட்டு வரும் நிலையில், வறட்சிக்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது' என்று தெரிவித்தார்.