Published:Updated:

பெண்களுக்கு ’நோ நைட் ஷிஃப்ட்’ - கர்நாடக அரசுக்கு பரிந்துரை

பெண்களுக்கு ’நோ நைட் ஷிஃப்ட்’ - கர்நாடக அரசுக்கு பரிந்துரை
பெண்களுக்கு ’நோ நைட் ஷிஃப்ட்’ - கர்நாடக அரசுக்கு பரிந்துரை

பாதுகாப்பு கருதி இரவு நேரப் பணிக்கு பெண்களை நியமிக்கக் கூடாதென கர்நாடக சட்டமன்ற குழு மாநில அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

பெண்களுக்கு ’நோ நைட் ஷிஃப்ட்’ - கர்நாடக அரசுக்கு பரிந்துரை

ஐடி, மற்றும் இதர பன்னாட்டு நிறுவனங்களில் இரவு நேரப் பணிக்குப் பெண்களை நியமிப்பது அவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தரும் என்பதால் ஆண்களை மட்டுமே இரவு நேர வேலைகளுக்கு நியமிக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது. கடந்த வருடம் பல ஐடி நிறுவனங்களில் ஆய்வு நடத்தி கருத்து கேட்ட பின்னர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக கர்நாடக சட்டமன்றக்குழு தெரிவித்துள்ளது.

ஐடி துறையில் பெண்களுக்கு எல்லா விதத்திலும் சம உரிமை வழங்க வேண்டும் என்ற காரணத்தால் ஐடி நிறுவனங்கள் பல பெண்களை இரவு நேரப் பணிக்கு நியமிக்கின்றனர். ஆனால் கர்நாடக அரசு இம்முடிவை பெண்களின் பாதுகாப்புக்காக மாற்றியமைக்கும்படி பரிந்துரைத்துள்ளது. 

பெண்கள் மற்றும் குழந்தைகள் நலவாரியம் தலைவர் ஹாரிஸ் தலைமையிலான குழு, இந்தப் பரிந்துரையை கடந்த திங்கட்கிழமை சட்டமன்றத்தில் முன்வைத்துள்ளது.