Published:Updated:

அப்போலோவில் ரூ.750 கோடி அந்நிய நேரடி முதலீடு!

அப்போலோவில் ரூ.750 கோடி அந்நிய நேரடி முதலீடு!
அப்போலோவில் ரூ.750 கோடி அந்நிய நேரடி முதலீடு!

அப்போலோ மருத்துவமனைக்கு, 750 கோடி ரூபாய்  நேரடி அந்நிய முதலீடு செய்ய மத்திய அரசு பரிந்துரைசெய்திருப்பது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

அப்போலோவில் ரூ.750 கோடி அந்நிய நேரடி முதலீடு!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா, சென்னை ஆயிரம் விளக்கு, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த டிசம்பர் 5-ம் தேதி மரணம் அடைந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர். அதற்குப் பதிலளிக்கும் வகையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் குழு பேட்டி அளித்தனர்.

ஓ.பன்னீர்செல்வம், தீபா ஆகியோரின் பிரதான பிரசாரமாக,  ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான சந்தேகம் இருந்துவருகிறது. அ.தி.மு.க. தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளது. இந்தச் சூழ்நிலையில், அப்போலோவில் 750 கோடி ரூபாய் அந்நிய நேரடி முதலீடு செய்ய மத்திய அரசு பரிந்துரைசெய்துள்ளது. 

இதுகுறித்து, மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், "எப்.ஐ.பி.பி-யின் பரிந்துரைப்படி, பிப்ரவரி மாதம் நடந்த 243-வது கூட்டத்தில் ஒன்பது நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும்,  மூன்று நிறுவனங்களுக்கு அந்நிய நேரடி முதலீடுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. அதில் ஒரு நிறுவனம், அப்போலோ மருத்துவமனை. இந்த மருத்துவமனையில், 750 கோடி ரூபாய் அந்நிய நேரடி முதலீடு செய்யப்பட உள்ளது.  இந்த நிதிமூலம், அப்போலோ மருத்துவமனையின் சில்லறை (Retail) மருந்தகங்களும் மேம்படுத்தப்பட உள்ளன" என்றனர்.