லீவு விடப்போறாங்க... பயணத்திற்கு உதவும் சில ஆப்ஸும், டிப்ஸும்!

சுற்றுலா பயணம்

ஏப்ரல், மே மாதங்கள் பக்கத்திலேயே வந்துவிட்டன. இந்நேரம் சம்மர் ஹாலிடேஸை எங்கு எப்படி எல்லாம் சுற்றுலா பயணம் கொண்டாடலாம் என்று திட்டம் போட்டு வைத்திருப்பீர்கள் தானே!? எங்கு சென்றாலும் சந்தோஷமாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டுமல்லவா. அதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று தெரிந்து கொண்டால், சுற்றுலா ரொம்ப ஈசியாக இருக்கும். அப்படி நீங்கள் பெஸ்டாக ஃபீல் பண்ணி, தேர்வு பண்ண  சில ஆலோசனைகள் உங்களுக்காக இங்கே...

Gate Guru என்கிற தளம் சுற்றுலாப் பயணிகளுக்கான ஒன்று. உங்களுடைய ஒவ்வொரு தேவைகளையும் நிவர்த்தி செய்வதற்கென்றே செயல்பட்டு வருகிறது. நீங்கள் எங்கு சென்று கொண்டிருக்கிறீர்கள் என்பதை மட்டும் இதனிடம் தெரிவித்தால் போதும். தானாகவே இது உங்களை கவனித்துக் கொள்ளும். விமான நிலையத்தில் காத்திருக்கும் பொழுது, ஒரு வேளை உங்களுக்கு உணவு தேவைப்பட்டால் அதையும் செய்து தரும். அங்கிருந்து கிளம்ப வாடகைக் காரை நீங்கள் பெற்றுக்கொள்ளவும் முடியும்.  

XE CURRENCY இதுவும் ஒரு தளம் தான். ஒரு வேளை உங்களுக்கு கரன்சி மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டால் இந்த App-இடம் சொல்லுங்கள்.  180 Currency-களுக்கு மேல் தன்னைப் புதுப்பித்து கொண்டே இருக்கும். ஆகையால் நீங்கள் மாற்ற வேண்டிய Currency-ன் தற்போதைய மதிப்பை அறிந்திருக்க வேண்டியது அவசியம்.

Wifi finder பொதுவாக உங்களுக்கே தெரிந்திருக்கும் பயணத்தின்போது இந்த ‘வைஃபை’ ஆசானைக் கண்டுபிடிப்பது எவ்வளவு கடினமான ஒன்றென்று. அந்தக் கடினமான நிலையைக் களைத்தெறிய இந்தத் தளம் நமக்குப் பயன்படும். 140 நாடுகளின் 6 லட்சத்து 50 ஆயிரம் இடங்களுக்கு மேல் உள்ள  வைஃபையை உங்களுக்குத் தேடித்தரும்.  .

இனி பொதுவான சில டிப்ஸ்:-

டிரஸ்சிங் சென்ஸ்; சுற்றுலா செல்லும்போது, கதர் ஆடைகளை எடுத்துச் செல்லாமல் இருப்பது நன்று. இது சீக்கிரம் கசங்கிவிடுவதால், ஒருமுறைக்கு மேல் பயன்படுத்துவது கடினம்.  அதற்குப் பதிலாக ஸ்போர்டிவ் சின்தடிக் துணிகளை எடுத்துச் செல்வது சிறப்பு.
இந்தத் துணிகள் எளிதில் உங்களது வியர்வைகளை அகற்றிவிடும்.

• சுற்றுலா என்றாலே குறைந்தது மூன்று நாட்களுக்கு மேல் ஆகும். அதற்கு இருப்பிடம் ஒன்று அவசியம். அது ஆடம்பரமாகவும்  இருக்கலாம். கொஞ்சம் எளிமையாகவும் இருக்கலாம். ஆடம்பரமென்றால் அங்கேயே அனைத்தும் இருக்கும். இதே கொஞ்சம் மலிவு விலை ரெசிடென்ட்ஸாக இருந்தால் வசதி குறைவாகத்தானே இருக்கும். நாம் அங்கு சென்று உறங்கும் பொழுது, அந்த நாடுகளின் கால அளவு வேறாக இருக்கும். ஆகையால், அதற்குத் தகுந்தபடி தூங்கி எழ வேண்டும். எனவே அலாரம் உள்ள கடிகாரத்தை எடுத்துச் செல்லுதல் சிறப்பு. (மைண்ட்வாய்ஸ்: அதான் செல்ஃபோன் இருக்கேம்மா!)

சுற்றுலா பயணம்

• சில நாடுகளில் களவாணி பயலுக இருப்பாங்க நண்பர்களே, நீங்கள் எல்லா நேரமும் அவர்களையே கவனித்துக் கொண்டிருந்தால் சுற்றுலாவை அனுபவிக்க முடியாதல்லவா. அதனால், உங்களது பணம், கிரெடிட் கார்டுகளை எல்லாம் முன் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளுங்கள். பின் பாக்கெட்தான், பிக் பாக்கெட் காரர்களுக்கு ஈசியாம். ஆகவே உங்களது உடலின் குறிப்பிட்ட சில பகுதிகளில் பணத்தை பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனென்றால், புதிய இடத்திற்குச் செல்கிறோம். அங்கு பணம்தானே முக்கியம்.

• துடைப்பதற்கான டவல் எடுத்துச் செல்வதிலும் கவனம் வேண்டும். சிலர் காட்டன் டவல்களை எடுத்துச் செல்வது வழக்கம். அது கொஞ்சம் பல்க்-ஆக இருக்கும். அதற்குப் பதிலாக, மைக்ரோ ஃபைபர் டவல்களை எடுத்துச் செல்லலாம். தண்ணீரை ஈசியாக உறிஞ்சும்; ஸ்டைலாகவும் இருக்கும்.

• வழக்கமாக எல்லா இடங்களிலும் நம்மால் சில்லறைகளை மாற்றிக் கொண்டே இருக்க முடியாது. ஆகவே, ஒரு நாட்டின் எல்லையிலேயே அதை முடிந்தளவு செலவு செய்து விட வேண்டாம். இல்லையேல் விமான நிலையம், ரயில் நிலையம் போன்ற இடங்களில் பிச்சைக்காரர்களிடம் கூட கொடுத்து விடலாம்.

• பெரிய Ziplock -பைகளை எடுத்துச் செல்வது நல்லது. ஒரு இடத்தில் ஆடை அணிகலன்கள், இன்னொரு இடத்தில் புத்தகம், மற்றொரு இடம் சலவைத் துணிகளுக்கு என ஒதுக்கி வைத்துக் கொள்ள ஏதுவாக இருக்கும்.

• நீங்கள் செல்வது குடும்பப் பயணமாகவோ, அலுவல் ரீதியிலான பயணமாகவோ எப்படி இருந்தாலும்.. Points.com என்கிற தளத்தைப் பயன்படுத்துங்கள். இதன் மூலம் பல்வேறு விதமான நிகழ்வுகளின் வெகுமதியை உங்களால் ஒன்றிணைத்துக் கொள்ள முடியும். உங்களது மைல்களைப் பிற பயனாளர்களோடு மாற்றிக் கொள்ளவும் முடியும்; கொடுத்த பணத்தை திரும்பப் பெற்று, தேவையானவற்றை பெற்றுக் கொள்ளவும் முடியும்.

நல்லாருக்குல்ல? இப்பவே ரெடியாக ஆரம்பிச்சிட்டீங்களா. வெயிட் பண்ணுங்க, இன்னும் ஒன்றரை மாதம் இருக்கு பாஸ்!

- பா.பிரியதர்ஷினி

(மாணவப் பத்திரிகையாளர்) 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!