வெளியிடப்பட்ட நேரம்: 21:14 (29/03/2017)

கடைசி தொடர்பு:21:13 (29/03/2017)

சொந்த வீட்டு கனவு நனவாக இதை அவசியம் தெரிஞ்சுக்கங்க!

வீடு

சொந்த வீடு எல்லோருக்கும் பெருங்கனவு. அதுவும் சென்னை போன்ற நகரங்களில் அது சாத்தியமில்லாத ஒன்று என்றே எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்கிறோம். எல்லோரும் வாடகைக்கு வீடு தேடியே பல நாட்களைக் கழிக்கிறோம். வாடகைக் கொடுத்த காசை வைத்து சொந்தமாக வீட்டை வாங்கியிருக்கலாம் என்று புலம்புகிறோம். சரிதான் உண்மையில் வாடகைக் கொடுப்பதற்கு பதிலாக இஎம்ஐ கட்டலாம்.

ஆனால் அதற்கு முன் சில விஷயங்களைத் தெரிந்துகொள்வோம். சென்னையில் வீடு வாங்க நினைப்பவர்கள் முக்கியமாக உணர வேண்டிய ஒரு விஷயம், தனி வீடு என்பது நகரத்துக்குள் சாத்தியமே இல்லை என்பதுதான்.அப்படியே வாங்க நினைத்தால் நிச்சயம் நீங்கள் அரசியல்வாதியாகவோ அல்லது மிகப்பெரிய பிசினஸ்மேனாகவோ இருக்க வேண்டும். ஏனெனில் நகருக்குள் தனி வீடு என்பது கோடிகளைத் தாண்டித்தான் விலை இருக்கும். எனவே நகரத்துக்குள் அடுக்குமாடி குடியிருப்பில்தான் வீடு வாங்க முடியும். விலை ரூ. 20 லட்சம் முதல் இருக்கின்றன. வீட்டின் கட்டுமான வயது, அறைகளின் எண்ணிக்கை, வீடு அமைந்திருக்கும் இடம் ஆகியவற்றைப் பொறுத்து விலை மாறும்.

எங்கிருந்தாலும் பரவாயில்லை, தனி வீடுதான் வேண்டும் என்பவர்களுக்கு நகரத்துக்கு வெளியே நிச்சயம் சாத்தியம். வெளியே வீடு வாங்கினால் நகரத்துக்குள் வந்து செல்வதற்கு சில மணி நேரம் செலவிட வேண்டியிருக்கும். அது உங்களுக்கு பிரச்னை இல்லை என்றால் தாராளமாக தனிவீடு வாங்கலாம். கொஞ்சம் பட்ஜெட் கூடுதலாக இருக்கும். குறைந்தது ரூ. 40 லட்சம் முதல் அதிகபட்சமாக ஒரு கோடி வரை.

சரி வீடு வாங்க முடிவு செய்துவிட்டோம். அதற்கான முதலீடுக்கு எங்கே போவது என்கிறீர்களா? இருக்கவே இருக்கிறது வீட்டுக்கடன். வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் உங்களுடைய சம்பளத்துக்கு ஏற்ப வீட்டுக்கடன் தர முன்வருகின்றன. அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அந்தக் கடன் தொகையிலேயே உங்களுடைய வீட்டு பட்ஜெட் அடங்கிவிட்டால் நீங்கள் அதிர்ஷ்டசாலி. இல்லையென்றால் மீதத் தொகையைப் புரட்ட வேண்டியிருக்கும். ஒரு வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்டோர் வேலைக்குச் சென்று சம்பாதிப்பவர்களாக இருந்தால் வீட்டுக்கடன் இருவரின் சம்பளத்தை வைத்தும் விண்ணப்பிக்கலாம். சுமையும் குறையும்.

சரி எந்த வங்கி, எந்த நிதி நிறுவனத்திடமிருந்து கடன் வாங்குவது என்ற கேள்வி எழும். அதற்கு இங்கு உங்களுக்கு நேரடியாக விடை தராவிட்டாலும், ஒவ்வொரு வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் வழங்கும் வீட்டுக் கடன் விவரங்களை இங்கே தந்திருக்கிறோம். அதிலிருந்து உங்களுக்கான தேர்வை நீங்களே தெரிவு செய்துகொள்ளலாம்.

வீட்டுக்கடன்

இவை தவிர வேறு சில நிதி நிறுவனங்களும் வீட்டுக்கடன்களை வழங்கி வருகின்றன. நம்முடைய பட்ஜெட்டுக்குத் தேவையான சரியான வீட்டுக்கடனைத் தேர்வு செய்து அதன் மூலம் நமது சொந்த வீட்டுக்கனவை நாம் நனவாக்கிக் கொள்ளலாம்.

கடன் நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்று சொல்வார்கள். உண்மைதான். ஆனால் பயனில்லாத கடன்களைத்தான் குறிக்கிறது. செலவழிப்பதற்காக வாங்கும் கடன் கேட்டைத்தான் தரும். ஆனால் முதலீட்டுக்காக வாங்கப்படும் கடன் நல்லது. வீட்டுக்கடனை நீங்கள் வருமான வரிச் சலுகைக்கும் கணக்கில் காட்டலாம். எனவே வீட்டுக்கடன் மேலும் நல்லது.

- ஜெ.சரவணன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்