Published:Updated:

புதுவையில் தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக இடைக்கால பட்ஜெட்!

புதுவையில் தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக இடைக்கால பட்ஜெட்!
புதுவையில் தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக இடைக்கால பட்ஜெட்!
புதுவையில் தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக இடைக்கால பட்ஜெட்!

புதுச்சேரி சட்டப்பேரவை, இன்று 10.30 மணிக்கு கூடுகிறது. நிதித்துறை பொறுப்புவகிக்கும் முதல்வர் நாராயணசாமி, நான்கு மாத செலவினங்களுக்கான இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல்செய்கிறார். புதுச்சேரியில் தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக, இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல்செய்யப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

பின்னர், முதல்வர் நாராயணசாமியால் தாக்கல்செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட் மீது விவாதம் நடைபெறுகிறது. பிறகு, குரல் வாக்கெடுப்புமூலம் சபையின் ஒப்புதல் பெறப்படும். வெள்ளிக்கிழமை சபை நடக்க இருக்கிறது. 

இந்த நிதி ஆண்டிலும், மார்ச் மாதம் முழுமையான பட்ஜெட் தாக்கல்செய்யப்படவில்லை. மூன்று அல்லது நான்கு  மாதங்களுக்காக, அரசு செலவினங்களுக்கு சட்டமன்றத்தில் ஒப்புதல் பெறப்படுகிறது.