வெளியிடப்பட்ட நேரம்: 15:10 (31/03/2017)

கடைசி தொடர்பு:15:10 (31/03/2017)

டேங்க் முதல் அட்வென்சர் ஐலேண்ட் வரை... இது நாஸ்டால்ஜி கேம்ஸ்! #NostalgicGames

ப்போது விளையாடும் கேம்ஸ் எல்லாமே டி.வி-யில்தான் விளையாடுகிறோமா? இல்லை நேராகவே விளையாடுகிறோமா? என்ற சந்தேகமெல்லாம் வருகிறது... காரணம் ப்ளே ஸ்டேஷன். ஆனால் 90-களில் விளையாடிய கேம்ஸை எல்லாம் நினைத்துப் பார்த்தால்கூட வேற லெவெல் ஃபீல் கொடுக்கும் பாஸ். கவலைப்படாதீங்க. எடுத்தவுடன் மேரியோ என்றெல்லாம் ஆரம்பித்து மொக்கையைப் போட மாட்டேன்!

 

டேங்க் :

கேம்

இந்த கேமின் ஸ்டார்ட்டிங் மியூஸிக்கிற்குப் பல பேர் ரசிகர்களாக இருப்போம். இதில் மொத்தமாக 50 ஸ்டேஜ்கள் இருக்கின்றன. ஸ்டேஜ் அதிகரிக்கும்போது விளையாட்டு சூடு பிடிக்கத் தொடங்கிவிடும். கேம் என்னவென்றால்? எதிரிகளிடமிருந்து நமது சின்னமான இரட்டை இலையை (இது அரசியல் கேம் அல்ல) காப்பாற்ற வேண்டும். நடுவுல... நடுவுல பல பவர்கள் வந்து நம்ம டேங்கை வழுப்படுத்திவிடும். எதிரிகளையும் துவம்சம் செய்யலாம். இதில் ஸ்பெஷல் என்னவென்றால்... இது 2 ப்ளேயர் கேம். அதுவும் இருவருமே ஒரே சமயத்தில் விளையாடலாம். வெயிட் பண்ண வேண்டிய அக்கப்போர்களெல்லாம் நடக்காது. 

ரோட் ஃபைட்டர் :

கேம்

இந்த கேமையும் யாராலும் மறந்திருக்க முடியாது. இது ஒருவிதமான கார் ரேஸ் கேம். என்ன? இதில் மற்ற கார்களை முந்திச்செல்ல வேண்டுமென்ற அவசியம் இல்லை. இதில் இருக்கும் ஒரே சிக்கல் ஃப்யூல் மட்டுமே. கரைக்ட்டான நேரத்தில் அதைப் பிடிக்கவில்லையென்றால் கார் வெடித்து நொறுங்கிவிடும். பின் முதலில் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். அதுபோக மிக முக்கியமான சிக்கல் இதில் இருக்கிறது. ஒரு சில கார்களைக் குடித்துவிட்டு ஓட்டுவது போல் அங்கும் இங்குமாக டான்ஸ் ஆடிக்கிட்டே நம் ரூட்டில் போய்க்கொண்டிருக்கும். என்ன மக்களே ஞாபகம் வருதா?

பாம்பர் மேன் :

கேம்

இதுவும் நாஸ்டால்ஜி கேமில் முக்கியமான ஒன்று. இந்த கேமில் ஹீரோ செங்கல்லை உடைத்து கதவைக் கண்டுபிடிக்க வேண்டும். இதுதான் கேமின் கதைச் சுருக்கம். ஆனால் நமக்கு தொல்லை கொடுப்பதற்கென்றே அமீபா போல் தோற்றம் கொண்ட பிராணி நம் வாசனையறிந்து பின்னாடியே சுற்றும். இது ஒரு சிக்கல். அடுத்தது என்னவென்றால்? நாம் வைக்கும் பாம் நமக்கே சூனியம் வைக்க வாய்ப்பு இருக்கிறது. தப்பித்தவறி அந்த பாமின் தீப்பொறியில் நாம் சிக்கிவிட்டால் நம் உடல் கருகிவிடும். நடுவில் நமக்கு சில பவர்கள் கிடைக்கும். அதைப் பிடிக்கப் பிடிக்க நம்முடைய பாமின் வேகம் கூடிக்கொண்டே போகும். இதில் கெத்து அந்த அமீபாவை சுவற்றோடு சுவறாக ஒட்டிவைத்து பாம் வைத்தால் அது தனி கெத்துதான். தவறிப்போய் இவனே இவனுக்கு பாம் வைத்தும் விடுவான். அந்த பாமில் மாட்டி நாம் சாகும்போது கேவலமா ஒரு சவுண்ட் வருமே... ஞாபகம் இருக்கா ஃப்ரெண்ட்ஸ்?

பேக் மேன் : 

கேம்

இந்தப் பெயரைச் சொன்னவுடன் எல்லோருக்கும் மைண்டுக்குள் வந்துபோவது அந்த கேமின் பி.ஜி.எம்தான். குறிப்பிட்ட கட்டத்திற்குள் சில ஜெம்ஸ் இருக்கும். அதையெல்லாம் எதிரிகளிடமிருந்து தப்பித்து பிடித்துவிட வேண்டும். இதான் கேம் ரூல்ஸ். இதில் ஸ்பெஷல் என்னவென்றால்? இதில் சில பவர்களும் உண்டு. அந்த சூப்பர் பவரைப் பிடித்தால் எதிரிகளை நாம் கொன்றுவிடலாம். இதுதான் தனி கெத்து. தப்பித்தவறி அந்த பவரின் டைம் முடிந்தபிறகு மாட்டினால் நாம் க்ளோஸ். பவர் இருந்தால் அவன் நமக்கு அடிமை. பவர் முடிந்தால் நம்ம அவனுக்கு அடிமை. 

ஹட்சன்ஸ் அட்வென்சர் ஐலேண்ட் :

கேம்

நமக்குத் தெரிந்த முதல் அட்வென்சர் கேம் இதுவாகத்தான் இருக்க முடியும். இதில் ஒரு சின்ன டவுசர், தலையில் தொப்பி அணிந்துகொண்டு ஒரு குண்டுப்பையன் ஒரு மூலையிலிருந்து இன்னோரு மூலைக்கு நடுவில் வரும் பல இடையூறுகளைச் சமாளித்து செல்வதுதான் கேமின் சுருக்கம். போகும் வழியில் முட்டைகள் கிடைக்கும். அதை சாப்பிட்டுச் சென்றால் எதிரிகளை துவம்சம் செய்யலாம். குறிப்பாக ஒரு சில முட்டைகள் எதிரிகளின் அருகிலலேயே இருக்கும். சில பல யுக்திகளைப் பயன்படுத்தி சரியாகப் பிடிக்க வேண்டும். தவறிவிட்டால் கேம் மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்கும். சியர்ஸ்! 

மீண்டும் இந்த விளையாட்டெல்லாம் வராதா? என்று ஏங்கும் மீசைவைத்த 90's கிட்ஸ் ஏராளம். மேலும் சில எவர்க்ரீன் கேம்ஸுடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்... நன்றி வணக்கம்!

- 90's கிட் தார்மிக் லீ