Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கார்பன் கலந்த காற்றிலிருந்து மை எடுக்கலாம்... 'வாவ்' கண்டுபிடிப்பு! #Air-ink

லகின் பாரம்பரியம் மிக்க முக்கியமான பல நகரங்களில் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எதிர்காலத்தில் தண்ணீரைப் போல சுத்தமான காற்றையும் விலை கொடுத்து வாங்கி சுவாசிக்க வேண்டிய நிலைமை வரக்கூடும் என சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

காற்று மாசுபாடு கார்பன்

காற்று மாசுபாட்டைப் பொறுத்தவரை இந்தியத் தலைநகர் டெல்லி கடந்த சில வருடங்களாக முதலிடத்தைப் பிடித்து வருவது சோகமான விஷயம். உலக அதிசயங்களில் ஒன்றான காதலின் நினைவுச் சின்னமாகக் கருதப்படும் தாஜ்மஹால், காற்று மாசுபாடு காரணமாக தனது பொலிவை இழந்து, மஞ்சள் நிறமாகிக் கொண்டுவருவதாக சூழலியலாளர்கள் எச்சரிக்கின்றனர்.

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள ஓர் ஆய்வறிக்கையின்படி, உலகில் அதிகம் மாசடைந்த நாடுகள் பட்டியலில் இந்தியா மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. உலகில் உள்ள 91 நாடுகளில், 1600 நகரங்களில் மேற்கொண்ட ஆய்வில் புதுடெல்லி முதலிடத்தில் உள்ளது. கார்களில் இருந்து வெளியேறும் புகையில் உள்ள கார்பனின் அளவு, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை போன்றவை காற்று மாசுபாட்டுக்கு மிக முக்கியமான காரணங்களாகக் கருதப்படுகின்றன. மாசுபாடு காரணமாக உலகின் பல நகரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வாழத் தகுதியற்றவையாக மாறி வருகின்றன.

கார்களில் இருந்து வெளியேறும் கார்பன் காற்றில் கலக்காமல் இருந்தாலே, ஆஸ்துமா போன்ற பலவகை நோய்களின் தாக்கத்தை பெரிதளவில் குறைக்கலாம். லண்டன் வாழ் இந்திய இளைஞர்களைக் கொண்ட Graviky Labs இதற்கு ஒரு தீர்வைக் கண்டுபிடித்திருக்கிறது. கார் மற்றும் பைக்குகளின் சைலன்ஸர்கள் வழியாக 2.5 மைக்ரோமீட்டர் தடிமன் கொண்ட கார்பன்கள் வெளியேறுகின்றன. இவை மயிரிழையைவிட பல மடங்கு தடிமன் குறைந்தவை. எனவே இது எளிதாகக் காற்றில் கலப்பதோடு, அதை சுவாசிக்கும் மனிதர்களின் நுரையீரலுக்குள் சென்று அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஆனால், 'Kaalink' என்ற கருவி மூலம் நுண்ணிய கார்பனையும் 95 சதவிகிதம் அளவுக்குக் காற்றில் கலக்காமல், சேமிக்க முடியும் என Graviky Labs நிரூபித்திருக்கிறது. இதன் மூலமே காற்று மாசுபாட்டைப் பெரிதளவில் கட்டுப்படுத்த முடியும்.

அனிருத் சர்மா

இவ்வாறு சேமிக்கப்பட்ட கார்பனை மையாகவும் மாற்றி அசத்தியிருக்கிறது இந்தியர்கள் கொண்ட குழு. காற்று மாசுபாட்டிலிருந்து உருவாக்கப்படும் மைக்கு 'Air-Ink' எனப் பெயரிடப்பட்டுள்ளார்கள். இந்த மையானது கார்பனில் இருந்து உருவாக்கப்படுவதால் கறுப்பு நிறத்தில் மட்டுமே இருக்கும். மேலும், வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் பிரிண்டர்களில் இவற்றைப் பயன்படுத்த முடியாது என்றாலும், துணி மற்றும் பைகளில் ஸ்க்ரீன் பிரிண்டிங் செய்ய இதைப் பயன்படுத்தலாம். கார்களின் எஞ்சின் வயதைப் பொறுத்து, Kaalink கருவியில் கார்பன் முழுவதும் நிரம்ப 15 முதல் 20 நாள்கள் ஆகும்.

இந்த மையை விளம்பரப்படுத்தும் விதமாக, உலகின் பல நகரங்களிலும் இதனைப் பயன்படுத்தி வரையப்பட்ட ஓவியங்களை கண்காட்சிக்கு வைக்கவும் ஏற்பாடு செய்து வருகிறார்கள். இந்த தொழில்நுட்பத்துக்கு அங்கிகாரம் கிடைக்கும் பட்சத்தில், காற்றில் கலக்கும் கார்பனின் அளவு பெரிதளவு குறையும் என நம்பிக்கை தெரிவிக்கிறார் இந்தக் கருவியை வடிவமைத்துள்ள அனிருத் சர்மா என்ற இந்திய வம்சாவளி இளைஞர்.

இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கார்பனையும் கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் இது நல்லதொரு தொடக்கமாக இருக்கும் என சூழலியலாளர்களும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

- கருப்பு

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close