சோஷியல் மீடியால எல்லா நாளும் ஏப்ரல் ஒண்ணு தான்! - முட்டாள்கள் தின ஸ்பெஷல் | A satirical article on fools day

வெளியிடப்பட்ட நேரம்: 18:36 (01/04/2017)

கடைசி தொடர்பு:10:23 (03/04/2017)

சோஷியல் மீடியால எல்லா நாளும் ஏப்ரல் ஒண்ணு தான்! - முட்டாள்கள் தின ஸ்பெஷல்

தினம் தினம் வாட்ஸ் அப், பேஸ்புக்னு எதுலயாவது பல்பு வாங்கிட்டிருக்கும் நமக்கு தனியா இந்த முட்டாள்கள் தினமெல்லாம் தேவைதானா? சின்ன வயசுல நம்ம ஏப்ரல் 1க்கு பண்ற அலப்பறைகளை விட இந்த சோஷியல் மீடியால இவங்க தினமும் பண்ற அலப்பறைதான் அதிகமா இருக்கு. அதோட ஒரு சின்ன தொகுப்பைப் பார்ப்போம்.

சோஷியல் மீடியா

இந்த ஃபார்வேர்ட் மெசேஜ் ஒண்ணே போதும் நம்ம ஏப்ரல் ஒண்ணுல மட்டுமில்ல எல்லா நாளும் அப்படிதான்னு உலகத்துக்கு காட்ட. இந்த மெசேஜை ஃபார்வேர்ட் பண்ணா 500 ரூபாய் ரீசார்ஜ் ஆகும்னு சொல்லிட்டா போதும், உடனே அனுப்பி டெஸ்ட் பண்ணிருவோம். இது மட்டும் இல்ல, இதை ஃபார்வேர்ட் பண்ணலைனா உங்களுக்கு இந்த சனிக்கிழமைக்குள்ள ஏதாவது கெட்டது நடந்துடும்னு மிரட்டல் ஃபார்வேர்ட்கள் வரும். அதையும் நம்மாளுங்க பலபேர் 'எதுக்கு வம்பு, அனுப்பிடுவோம்'னு அனுப்பி வைச்சு மனசை தேத்திக்குவாங்க.

இது எல்லாத்துக்கும் மேல ஃபார்வேர்ட் மெசேஜ்ல வித்தியாசமா பல்பு வாங்குற கோஷ்டிகளும் இருக்கும். அவங்கதான் ரொம்ப பாவம். அவசரமா ரத்தம் வேணும்ங்கிற மாதிரியான அவசர தேவை மெசேஜ்களை பார்த்து பதறி உதவுறதுக்கு அந்த நம்பருக்கு போன் பண்ணுவாங்க. அந்தப் பக்கம் 'பாஸ் அந்த ஆபரேஷன் ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே முடிஞ்சி ஆளு நல்லா ஆகி ஆபீஸ் போய்ட்டாரேனு சொல்லுவாங்க பாருங்க, நம்ம ஃபார்வேர்ட் டெக்னாலஜியின் அபார பலம் அப்போ தான் நமக்குப் புரியும். இனிமேலாவது அந்த மாதிரி மெசேஜ்கள்ல தேதியை சேர்த்து அனுப்புங்கய்யா! நல்லவங்க ஏற்கெனவே கம்மியாத்தான் இருக்காங்க. மேலும் இப்படி பல்பு கொடுத்து கம்மி பண்ணாதீங்க!

இந்த ஃபார்வேர்ட்களின் அடுத்தகட்டம் நியூஸ் ஃபார்வேர்ட்கள் தான். 'அப்பல்லோ ஹாஸ்பிட்டல்லதான் என் அண்ணன் வேலை பார்க்குறார், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பிளான் பண்ண போலீஸ்காரர் என் மாமாதான்' வரை பல ஃபார்வேர்ட் நியூஸ்களை நம்பி பல்பு வாங்கிய மக்கள் பல பேர் இந்தக் கூட்டத்துல இருக்கோம். அது எப்படி என்ன சொன்னாலும் நாம நம்புறோம்னு தெரியல. அவ்வளவு நல்லவங்களா நாம?

அடுத்து முக்கியமா நம்ம சிக்கிறது இந்த ரசிகர்கள் சண்டையில தான். ஒரு ஹீரோவோட ரசிகர்கள் எங்க படம் 300 கோடி வசூல்னு ஒரு டுபாக்கூர் லிங்க்கை ஷேர் பண்ண, எதிர் ஹீரோவின் ரசிகர்கள் எங்க படம் 350 கோடி வசூல்னு போட்டியா ஒரு டுபாக்கூர் லிங்க் போடுவாங்க. இந்த கலாட்டாவுல, 'லிங்க்லாம் போடுறாங்க. கண்டிப்பா புள்ளிவிவரம் உண்மையாதான் இருக்கும்'னு நினைச்சுகிட்டு அதை ஷேர் பண்ணி நம்ம அறிவை உலகத்துக்கு காட்டுவோம். 300 கோடி...? நீ பார்த்த...?

இது மட்டுமா பாஸ்!? சினிமா நியூஸ்னு சொல்லி எத்தனை தடவை நம்மளை முட்டாளாக்கியிருப்பாங்க? பவர்ஸ்டாரின் அடுத்த படம் கிறிஸ்டோபர் நோலன்கூடனு மட்டும்தான் இன்னும் சொல்லலை. மத்தபடி இவரோட படம் அவர்கூட, அவர் படம் இவர் கூடனு என்ன போட்டாலும் ஆவலா நம்பி ஏமாற்றம் அடையத்தான் செய்யுறோம். இப்படி லிஸ்ட் நீண்டுகிட்டேதான் போகுது.

இந்த ஜியோ ஆஃபரை வேற இப்போ எக்ஸ்டெண்ட் பண்ணிருக்காங்களாம். இனி இன்னும் உக்கிரமா ஃபார்வேர்ட் அனுப்புவாங்களே! யாராவது காப்பாத்துங்களேன்! 

-ம.காசி விஸ்வநாதன்
(மாணவ பத்திரிகையாளர்)

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்