Published:Updated:

சென்னையில் 41 நட்சத்திர விடுதி பார்கள் மூடல்!

சென்னையில் 41 நட்சத்திர விடுதி பார்கள் மூடல்!
சென்னையில் 41 நட்சத்திர விடுதி பார்கள் மூடல்!

நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, சென்னை நெடுஞ்சாலையில் உள்ள 41 நட்சத்திர விடுதிகளில் உள்ள பார்கள் மூடப்பட்டுள்ளன. 

சென்னையில் 41 நட்சத்திர விடுதி பார்கள் மூடல்!

தமிழகம் முழுவதும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு படி நெடுஞ்சாலையில் இருந்து 500 மீட்டருக்குள் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் அடைக்கபட்டுள்ளது. 
தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் செயல்படும் மதுக்கடைகள், பார்கள், பப்புகள் மற்றும் நட்சத்திர விடுதி பார்கள் மூடப்பட வேண்டும் என்று ‘அரைவ் சேப்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்தியாவில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளுக்கு மது போதையே முக்கிய காரணம் என்று அரைவ் சேப் தொண்டு நிறுவனம் மனுவில் குறிப்பிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, மார்ச் 31-ம் தேதிக்குப் பிறகு நெடுஞ்சாலையில் இருந்து 500 மீட்டருக்குள் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் அடைக்கபட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தடை உத்தரவு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. அதன்படி தமிழக நெடுஞ்சாலைகளில் இருந்த 3303 கடைகள் மூடப்பட்டுள்ளன. அதே போல சென்னை நெடுஞ்சாலையில் உள்ள 41 நட்சத்திர விடுதிகளில் இருந்த பார்களும் மூடப்பட்டுள்ளன.