Published:Updated:

ஸ்மிருதி இராணியை பின் தொடர்ந்த மாணவர்கள் கைது

நமது நிருபர்
ஸ்மிருதி இராணியை பின் தொடர்ந்த மாணவர்கள் கைது
ஸ்மிருதி இராணியை பின் தொடர்ந்த மாணவர்கள் கைது

மது போதையில் இருந்த டெல்லி மாணவர்கள் நான்கு பேர், ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணியின் காரை பின் தொடர்ந்து சென்று கேலி செய்ததையடுத்து, கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்மிருதி இராணியை பின் தொடர்ந்த மாணவர்கள் கைது


 

டெல்லியில் இருக்கும் அசோகா ஹோட்டலுக்கு சென்று கொண்டிருந்த ஸ்மிருதி இராணியின்   காரை, நான்கு மாணவர்கள் திடீரென்று பின் தொடர்ந்தனர். அமைச்சரின் காரை நெருங்கிய அவர்கள் தகாத வார்த்தைகள் கூறி கேலி செய்ய தொடங்கி உள்ளனர். இதைனையடுத்து ஸ்மிருதி இராணியின் பாதுகாப்பு அதிகாரி காவல் துறைக்கு தகவல் அளித்தார். தகவல் தெரிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் மாணவர்களை போலீசார் துரத்திப் பிடித்தனர்.

டெல்லியில் அமைந்திருக்கும் பிரெஞ்சு தூதரகத்தின் அருகில் அவர்கள் கைதுசெய்யப்பட்டனர். சாணக்யபுரி காவல் நிலையத்தில் மாணவர்கள் மீது வழக்கு பதியப்பட்டு பின் அவர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்களும் டெல்லி ராம் லால் ஆனந்த் கல்லூரி மாணவர்களாவர். மாணவர்கள் மீது பின் தொடர்தல், தகாத செய்கைகள் மூலம் பெண்களை கேலி செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.