Published:Updated:

சிறப்பு சேமிப்பு திட்டங்களின் முதலீடுகளுக்கு வட்டி விகிதம் குறைப்பு!

SAKTHIVEL MURUGAN G
சிறப்பு சேமிப்பு திட்டங்களின் முதலீடுகளுக்கு வட்டி விகிதம் குறைப்பு!
சிறப்பு சேமிப்பு திட்டங்களின் முதலீடுகளுக்கு வட்டி விகிதம் குறைப்பு!

பொது வைப்பு நிதியான ஃப்ராவிடன்ட் ஃபண்ட் (Public Provident Fund), கிஸான் விகாஸ் பத்திரம் (Kisan Vikas), சுகன்யா சம்ருத்தி கணக்கு (Sukanya Samriddhi) மற்றும் முதியோர்களுக்கான சேமிப்பு திட்டங்களிலும் (Senior Citizens Savings) வட்டி விகிதம் 0.1% குறைக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி விகித குறைப்பு முதல் காலாண்டான ஏப்ரல் முதல் ஜூன் இருக்கும் என்று அறிவித்து இருக்கிறது மத்திய அரசு.

நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் அனைவருக்கும் ஃப்ராவிடன்ட் ஃபண்ட்டில் தொடர்ந்து சேமித்து வருகிறார்கள். மேலும், ஐந்து ஆண்டுகளுக்கான தேசிய சேமிப்பு சான்றிதழ் (National Savings Certificate) மூலம் பணத்தை சேமிக்கிறார்கள். தற்போது இதற்கு 8% வட்டி வழங்கப்படுகிறது. இனி வரும் காலங்களில் 7.9% வழங்கப்படும். கிஸான் விகாஸ் பாத்திரத்திற்கு 7.6% யும், சீனியர் சிட்டிசன் சேவிங்ஸ் ஸ்கீம்மில் 8.4% வட்டி வழங்கப்படும் என்று நிதி அமைச்சகம் அறிவித்து உள்ளது. பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டம் சுகன்யா சம்ருத்தி திட்டம். இந்தத் திட்டத்தில் சேமிப்பவர்களுக்கு 8.5% வட்டி வழங்கப்படுகிறது. இதனை 8.4% ஆகக் குறைத்து இருக்கிறார்கள்.

வங்கியில் சேமிக்கப்படும் பணத்திற்கு 4% ஆண்டு வட்டியாக வழங்கப்படுகிறது. டேர்ம் டெபாசிட்டுகளுக்கு 1 முதல் ஐந்து ஆண்டுகளுக்கு 6.9 முதல் 7.7% வட்டியும் வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுக்கான ரொகரிங் டெபாசிட்க்கு (Five-Year Recurring deposit) மிகவும் குறைந்த அளவாக 7.2% வழங்கப்படுகிறது. அரசு திட்டங்களில் முதலீடு செய்வது என்பது அதிக பாதுகாப்பாகவும், நல்ல வருமானத்தையும் வழங்கும் என்ற நம்பிக்கையில் பலரும் இத்திட்டத்தைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்து வந்தார்கள்.

இனி வரும் காலங்களில் ஒவ்வொரு காலாண்டிலும் சிறு சேமிப்பு திட்டங்களுக்கும், இதர சேமிப்பு திட்டங்களுக்கும் எவ்வளவு வட்டி விகிதத்தை நிர்ணயிக்கப்படும் என்று சொல்லி இருக்கிறது. இதைத்தைவிர, இன்னும் பல மாற்றங்களையும் செய்துள்ளது நிதி அமைச்சகம்.  ஒவ்வொரு காலாண்டிலும் எவ்வளவு வட்டி என்பதை இனி பார்த்து தான் முதலீடு செய்ய வேண்டி இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.


-ஞா. சக்திவேல் முருகன்