Published:Updated:

ஒடிசாவில் புதைக்கப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை

ஒடிசாவில் புதைக்கப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை
ஒடிசாவில் புதைக்கப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை

ஒடிசா மாநிலம் ஜெய்ப்பூரில், பிறந்து ஆறு மணி நேரமே ஆன குழந்தை புதைக்கப்பட்டுள்ளது.

ஒடிசாவில் புதைக்கப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை

புதைக்கப்பட்ட குழந்தையின் கால்களைக் கண்ட கிராம மக்கள், குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து, குழந்தை நலமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. குழந்தையைப் புதைத்த தந்தையை, காவல்துறை கைது செய்துள்ளது. கைதுசெய்யப்பட்ட ரமேஷ் சந்திரா, ஓட்டுநராகப் பணியாற்றிவருகிறார். இவருக்கு,  இதற்கு முன் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். 'மூன்றாவதாகவும் பெண் குழந்தை பிறந்ததால், என்ன செய்வதென்று தெரியாமல் புதைத்துவிட்டேன்' என்று அவர் கூறியுள்ளார். பொதுமக்களால் மீட்கப்பட்ட பின்னர், குழந்தைக்கு 'தாரித்திரி' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. தாரித்திரி என்றால், சமஸ்கிருதத்தில் பூமி எனப் பொருள்படும். பூமித்தாயின் மடியிலிருந்து எடுக்கப்பட்ட குழந்தை என்பதால், இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளதாம்.