Published:Updated:

இந்தியாவின் டாப் கல்லூரி பட்டியல் வெளியீடு! நம்பர் ஒன் ஐஐடி மெட்ராஸ்; நம்பர் 2 லயோலா

இந்தியாவின் தலைசிறந்த 100 கல்வி நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது மத்திய மனித வளத்துறை அமைச்சகம். இப்பட்டியலில் தமிழ்நாட்டின் 22 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவின் டாப் கல்லூரி பட்டியல் வெளியீடு! நம்பர் ஒன் ஐஐடி மெட்ராஸ்; நம்பர் 2  லயோலா

மனித வளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் இன்று இந்தியாவின் தலைசிறந்த கல்லூரிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளார். இதில் டாப் 100-ல் தமிழகத்தின் 22 கல்லூரிகளும், டாப் 20 பொறியியல் கல்லூரிகள் பட்டியலில் 4 தமிழக கல்லூரிகளும் இடம்பெற்றுள்ளன. 

இந்தியாவின் தலைசிறந்த பொறியியல் கல்லூரிகள் பட்டியலில் ஐஐடி மெட்ராஸ் முதலிடம் பிடித்துள்ளது. மேலும் சிறந்த கல்வி நிறுவனத்துக்கான ஒட்டுமொத்த தரவரிசைப் பட்டியலில்  ஐ.ஐ.டி மெட்ராஸ் இரண்டாம் இடமும், அண்ணா பொறியியல் கல்லூரி 13-ம் இடமும் பிடித்துள்ளன. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்துக்கு 17-ம் இடம் கிடைத்துள்ளது.  சிறந்த கல்லூரிக்கான பட்டியலில் சென்னை லயோலா கல்லூரி இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

தனியார் பொறியியல் கல்லூரிகளில் விஐடி இந்திய அளவில் 13-ம் இடமும் தமிழகத்தில் முதலிடமும் பிடித்துள்ளது. 

அடுத்த கட்டுரைக்கு