வெளியிடப்பட்ட நேரம்: 11:49 (04/04/2017)

கடைசி தொடர்பு:11:49 (04/04/2017)

தோனிக்கு முன்னாடியே சச்சின்! - சரவெடி ஷாட்ஸ் via gifs

சச்சினோட பிறந்தநாள் அன்னைக்கு மட்டும்தான் சச்சின் பத்திப்பேசணுமா என்ன கிரிக்கெட்னாவே சச்சினைப் பத்தி பேசுறதுதானே பாஸ் உலக வழக்கம். அதுவும் ஏப்ரல் மாசம் ஸ்டார்ட் ஆகிடுச்சுனாலே அவரோட பர்த்டே செலப்ரேசன் ஸ்டார்ட் ஆயிடுச்சுன்னுதான் அர்த்தம். சரி அவரோட சில ஷாட்ஸ்களைலாம் ஒரு ரீவைண்ட் பண்ணிப்பார்க்கலாமா மக்களே...

சச்சின்

தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சுன்னு சொல்லுவாங்கள்ல அந்தமாதிரியான இந்த ஷாட்டுக்குப்பேருதான் 'ஊப்பர்கட்'. தலைக்கு நேரா வர பந்தை அப்படியே தலைக்கு மேலே திருப்பி விட்டா கேம் ஓவர். அந்தமாதிரியான ஷாட்தான் இது. பிரட்லீ  போடுற பாலை சச்சின் எப்படி புரட்டிவிடுறார் பாருங்க.

இது கவர் ட்ரைவ். கோலி இப்போ இந்தமாதிரியான ஷாட் அடிக்கிறதுலதான் கில்லியாக இருக்குறார்னு ஊருக்குள்ள பேசிக்கிறாங்க.கிரிக்கெட்லயே கொஞ்சம் அழகான ஷாட்னு சொல்லலாம். ஒரு நல்ல தொழில்முறை ஆட்டக்காரர்னா கண்டிப்பா அவரோட கவர் ட்ரைவ் ஷாட்களைத்தான்  நோட் பண்ணுவாங்கங்கிறது கிரிக்கெட் வல்லுநர்கள் சொல்லுற தகவல்.                                                       

மாங்கு மாங்குனு ஓடி வர பிளேயருக்கு நேர் எதிராகவே அடிக்கிறதுக்குப்பேருதான் ஸ்ட்ரைட் ட்ரைவ். ஸ்டம்புல அடிக்காம எதிர்ல நிக்கிற பிளேயர் மேல படாம அம்பயரையும் டச் பண்ணாம கொஞ்சம் அழுத்தி அடிச்சா, அதிகபட்சம் அது எல்லாமே நாலு ரன்களாக வந்துரும்ங்கிறது உறுதி. ஆனா பலபேருக்கு இந்த ஷாட் வராது. பட் சச்சினுக்கு இது அத்துப்படி. இந்த ஷாட்டில் இன்னொரு முக்கியமான விசயம் பந்துவீசுற ஆளுக்கு நேராகவே அடிச்சு ஆடும்போது அது பவுலர்களுக்கு சோர்வைக்கொடுக்கிறதோட அவங்களோட கான்ஃபிடண்ட் லெவலையும் குறைச்சிடும்ங்கிறது வெரிஃபைடு தகவல் மக்களே.

ஹெலிகாப்டர்னா இப்பத்தான் நீயா நானா ஞாபகத்துக்கு வருது அதுக்கு முன்னாடிலாம் தோனிதான் ஞாபகத்துக்கு வருவாரு ஏன்னா அவருதான் இதை அடிக்கடி அடிச்சிக்கிட்டு இருக்குறாரு. ஆனா அதுக்கு முன்னாடியே சிலபேர் அந்தமாதிரியான ஷாட்டை ஆடிருக்காங்க. அதுல சச்சினும் ஒருத்தர்ங்கிறதுதான் விசயம். எப்போவோ சச்சின் ஆடுன ஹெலிகாப்டர் ஷாட்டைப்பாருங்க.

லிஸ்ட்டுல அடுத்தது 'ஸ்கொயர்கட்' ஷாட் . தமிழ் வர்ணனையில சொல்லணும்னா இது ஒரு அற்புதமான ஷாட்னு சொல்லலாம். வர்ற பந்தை அப்படியே ஸ்கொயர்லெக் திசையில் வெட்டி ஆடுனா மிசன் கம்ப்ளிட்டேடு. ஷேவாக் இந்தமாதிரியான ஷாட் ஆடுறதுல கைதேர்ந்தவர்னு சொல்லலாம். ரொம்ப கவனமாக ஆடவேண்டிய ஷாட் இது. ஏன்னா, எப்போவாவதுதான் சிக்ஸருக்கு போகும். ஆனா பேட்ல எக்குத்தப்பான இடத்துல பட்டு அடிக்கடி அது கேட்சுக்குப்போயி பிளேயர் பெவிலியனுக்குப் போயிடுவாருங்கிறது கிரிக்கெட் வரலாறு. ஆங்க்க்.

 - ஜெ.வி.பிரவீன்குமார்


டிரெண்டிங் @ விகடன்