Published:Updated:

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஆதார் அட்டை கிடையாது!

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஆதார் அட்டை கிடையாது!
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஆதார் அட்டை கிடையாது!

'வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஆதார் அட்டை பெற உரிமையில்லை' என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் சட்டத்தின்படி, இந்தியக் குடியுரிமை பெற்றவர்களுக்கு மட்டுமே ஆதார் அட்டை வழங்கப்படும்' என்று கூறப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 182 நாள்கள் இந்தியாவில் குடியிருப்பவர்களுக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்பட்டு, ஆதார் வழங்கப்படும்.

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஆதார் அட்டை கிடையாது!

இந்தியாவில் இருக்கும் அனைவரும் ஆதார் அட்டை பெற வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. வங்கிக் கணக்கு ஆரம்பிப்பது தொடக்கி, சத்துணவு பெறுவதுவரை ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனிடையே, வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான ஆதார் உரிமம் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. 182 நாள்களாவது இந்தியாவில் குடியிருந்தால் மட்டுமே குடியுரிமை வழங்கப்படுகிறது. இந்தியக் குடியுரிமை பெற்றவர்கள், ஆதார் அட்டை பெற எந்த நிபந்தனையும் தேவையில்லை. 'வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள், ஆதார் அட்டை பெற முடியாது' என்று ஆதார் வழங்கும் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மோடி தலைமையிலான மத்திய அரசு, அனைத்து குடிமக்களையும் ஆதார் அட்டை பெற வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், NRIகளுக்கு ஆதார் உரிமம் இல்லை என அறிவிக்கப்பட்டிருக்கிறது.