'2018ல நாங்கதாம்ல!’ - ஒரு சி.எஸ்.கே வெறியனின் டைரிக்குறிப்பு | We will return soon in 2018. A letter by CSK fan

வெளியிடப்பட்ட நேரம்: 14:53 (06/04/2017)

கடைசி தொடர்பு:14:52 (06/04/2017)

'2018ல நாங்கதாம்ல!’ - ஒரு சி.எஸ்.கே வெறியனின் டைரிக்குறிப்பு

சென்னை சூப்பர் கிங்ஸ் பெயரைச் கேட்டவுடனேயே சும்மா அதிருதுல்ல... நாடி, நரம்பு, ரத்தம், சதை என எல்லாத்துலேயும் சென்னை சூப்பர் கிங்ஸ் வெறி ஏறிப்போன ரசிகர்களுக்கு இந்தக் கட்டுரை சமர்ப்பணம். தோனியின் தலைமையில் 2008-ல் இருந்து இந்த சிங்கங்களின் பயணம் தொடங்கியது. சி.எஸ்.கே-வின் சில ஸ்வீட் மெமரிஸ் இதோ! 

சென்னை

* முதல் ஐபிஎல் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தனது முதல் ஆட்டத்தையே சென்னை அணி வெற்றியில்தான் தொடங்கி வைத்தது. பின் விளையாடிய ஆட்டங்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி வாய்ப்பினை தக்கவைத்துக்கொண்டே வந்தது. அந்தச் சமயத்தில் லீவ் விட்ட ஸ்கூல் குழந்தை போல் இன்டர்நேசனல் மேட்சின் காரணத்தால் 'மைக்கெல் ஹசி', 'மேத்யூ ஹெய்டன்', 'ஜேக்கப் ஓரம்' ஆகிய ஸ்டார் ப்ளேயர்கள் பாதியிலேயே போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதையடுத்து தொடர்ந்து மூன்று மேட்சில் தோற்றுப் போனது சென்னை. அதிலிருந்து பதினாறாவது நாள் வந்தாங்க ஃபார்முக்கு. முன்பு தோற்கடித்த அதே 'டெல்லி டேர் டெவில்ஸ்' அணியை 'ஃப்ளெம்மிங்', 'மார்கல்', 'வித்யுத் சிவராமகிருஷ்ணன்' தயவால் 188 ரன்களை சேஸ் செய்து வெற்றியைக் கைப்பற்றினார்கள். பின் பஞ்சாப்பிற்கு எதிரான ஆட்டத்தில் 'லட்சுமிபதி பாலாஜி'  ஹாட்ரிக் விக்கெட் எடுத்ததோடு இல்லாமல் 24 ரன்களை கொடுத்து 4 விக்கெட்டுகளையும் பெற்றார். பின் மடமடவென பாயின்ட்ஸ் டேபிளில் மேலே உயர இறுதியில் ராஜஸ்தான் அணியுடன் ஃபைனல் மேட்சில் சென்னை 163 ரன்களுக்கு 5 விக்கெட் இழப்பிற்குக் கௌரவ ஸ்கோரை அடித்தது. பின் பேட்டிங் பிடித்த ராஜஸ்தான் அணி பொறுப்பாக ஆடி ஃபைனல் மேட்சை வென்றது. 2008 கப் சென்னைக்கு ஜஸ்ட் மிஸ்ஸாகிவிட்டது. அந்த சீஸனில்தான் ஹெய்டன் மங்கூஸ் பேட்டை ஃபேமஸ் ஆக்கிவிட்டார். 

ஹெய்டன்

* இது 2009 ஐபிஎல். மும்பைக்கு எதிரான முதல் ஆட்டத்தில் சென்னை 19 ரன்களில் வெற்றி வாய்ப்பினை தவறவிட்டது. அதன்பின் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 92 ரன்கள் வித்தியாசத்தில் தெறி வெற்றிப் பெற்றது சென்னை. அதற்கு பிறகு விளையாடிய 3 ஆட்டங்களில் தொடர்ந்து தோல்வியைத் தழுவியது சென்னை அணி. என்னடா இது சூப்பர் கிங்க்ஸுக்கு வந்த சோதனை?னு நெனச்சு மீசையை முறுக்கிவிட்டு களத்தில் துவம்சம் செய்தனர். சுரேஷ் ரெய்னாவின் 98 ரன்கள், ஜகாத்தியின் 4 விக்கெட்டுகள், ஹெய்டனின்  89 ரன்கள், பத்ரிநாத்தின் அசைக்க முடியாத 50 ரன்கள் தொடர்ந்து 5 வெற்றிகளைப் பெற உதவியது. இந்த வெற்றிப் பயணமானது பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் முடிவிற்கு வந்தது. முதல் ஆட்டத்தில் 93 ரன்கள் வென்றதையடுத்து பழி தீர்த்துக்கொண்டது பெங்களூரு அணி. அதன்பின் வெற்றி தோல்வி என மாறி மாறி சந்தித்த சென்னை அணி செமி ஃபைனலுக்குள் நுழைந்தது. முதல் மேட்சில் பெங்களூருவை தோற்கடித்ததையடுத்து செமி ஃபைனலிலும் தாக்கி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி ஃபைனலுக்குள் நுழைந்தது பெங்களூர் அணி. ஹெய்டன் 12 இன்னிங்க்ஸ்களில் 572 ரன்களைப் பெற்று ஆரஞ்ச் தொப்பியைத் தக்கவைத்துக்கொண்டார். 

* 2010 ஐ.பி.எல். டெக்கான் சார்ஜர்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியுடன் ஆரம்பித்த சென்னை அணி அடுத்த மேட்சில் சிறப்பாக ஆடி கொல்கத்தாவை அவர்கள் ஹோம் கிரவுண்டிலே துவம்சம் செய்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய 'தோனி' 33 பந்துகளுக்கு 66 ரன்களைப் பெற்று சென்னையை வெற்றியடையச் செய்தார். அடுத்ததாக டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் 'ஹெய்டன்' அவரது பங்கிற்கு 43 பந்துகளில் 93 ரன்கள் அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது சென்னை. அதன்பின் இடம்பெற்ற மேட்ச்களில் ட்ரா, 3 தோல்விகள் எனப் போய்க்கொண்டிருந்த நேரத்தில் அடுத்தடுத்த இரண்டு ஆட்டங்களிலும் தன் முரட்டுத்தனமான ஆட்டத்தின் மூலம் சென்னை அணியை வெற்றியடையச் செய்தார் முரளி விஜய். முதல் மேட்சில் 78 ரன்களிலும் ரெண்டாவது மேட்சில் அதிரடியாக ஆட்டத்தை வெளிப்படுத்தி 127 ரன்களைப் பெற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 54-வது மேட்ச்தான் மறக்க முடியாத மேட்சாக அமைந்தது. பஞ்சாப்பிற்கான எதிரான ஆட்டத்தில் ஜெயிப்பவர் செமி ஃபைனலுக்கு முன்னேறும் முக்கியமான கட்டம். அதகள ஆட்டத்தை வெளிப்படுத்திய பஞ்சாப் அணி, 193 ரன்களை சென்னை அணியின் இலக்காக நிர்ணயித்தது. அதை நோக்கி ஓடத்தொடங்கிய சென்னை அணியும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த கடைசி ஓவரில் 16 ரன்கள் பெற வேண்டுமென்ற இக்கட்டான சூழ்நிலையில் இருந்தது. பேட்டிங் சைடில் தோனி இருந்த ஒரே ஆறுதல். பந்தை 'இர்ஃபான் பதான்' வீச அதை பாரபட்சம் பார்க்காமல் பவுண்டரிக்கு விரட்டியடித்தோடு, கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து செமி ஃபைனலில் நுழைந்த வெறியில் ஹெல்மெட்டால் அடித்துக்கொண்டது இன்னும் கண் முன் நிற்கின்றது. கூல் கேப்டனை அப்படி யாரும் பார்த்திருக்க முடியாது. சென்னை ரசிகர்களால் மறக்க முடியாத தருணமென்றால் அதுதான். செமியில் டெக்கானை வீழ்த்தி மும்பை அணியை ஃபைனலில் சந்தித்தது சென்னை அணி. ஒவ்வொரு நிமிடமும் விறுவிறுப்பின் உச்சத்தையடைய... முடிவில் ஃபைனலை வென்று சாம்பியன்ஸ் பட்டத்தைப் பெற்றது சென்னை அணி. இதில் சிறப்பு என்னவென்றால் அதே வருடத்தின் சாம்பியன்ஸ் லீக்கையும் வென்று ரெண்டு கோப்பையுடன் வலம் வந்தது சென்னை அணி. 

சென்னை

* அதற்கு அடுத்த வருடம்... சென்னை அணிக்கு ஒரு சின்ன கெட்டப் பழக்கம் எல்லா வருடமுமே இருக்கும். அது அந்த வருடமும் தொடர்ந்தது. ஆரம்பத்திலேயே வெற்றி பெற்று ரசிகர்களின் ப்ரஷரைக் குறைக்கும் பழக்கமே கிடையாது. கடைசி நேரத்தில் வேகமாக எக்ஸாம் எழுதும் ஸ்கூல் ஸ்டூடன்ட் மாதிரி முக்கியமான கட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே ஃபைனலுக்கு நுழையமுடியும் என்ற தருவாயில்தான் வெற்றியை நோக்கி ஓடும் சூப்பர் கிங்ஸ். அதே போல் தொடர்ந்து தோல்விகளை சந்தித்த சென்னை அணி கடைசி 10 மேட்ச்களில், 8 மேட்ச்களில் வென்று நடுவில் இரண்டு மேட்சில் மட்டும் தோற்று ஃபைனலில் பெங்களூர் அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக சாம்பியன்ஸ் பட்டத்தை வென்று கோப்பையை தக்கவைத்துக்கொண்டது சென்னை அணி. எவ்வளவு வெற்றி? ஒரே கஷ்டமப்பா..!

அதன் பின்னர் மூன்றுமுறை ஃபைனலுக்கும், ஒருமுறை செமி ஃபைனலுக்கும் சென்றது. எவ்வளவு பாஸ் சொல்றது ஒண்ணா? ரெண்டா? இதுவரை சென்னை அணி லீக்கிலேயே வெளியேறினதாக சரித்திரமே இல்லை!

கடைசியா ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்றேன்..!

'கிட்ஸ் வில் சப்போர்ட் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு'

'மென் வில் சப்போர்ட் மும்பை இந்தியன்ஸ்'

'லெஜென்ட்ஸ் வில் வெயிட் ஃபார் 2018 ஐ.பி.எல்'

திரும்ப வருவேன்னு சொல்லு!

- தார்மிக் லீ


டிரெண்டிங் @ விகடன்