Published:Updated:

பிரதமர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் திடீர் நிர்வாணப் போராட்டம்! டெல்லியில் பரபரப்பு

டெல்லியில் 28-வது நாளாகப் போராடிவரும் தமிழக விவசாயிகள், நிர்வாணப் போராட்டம் நடத்திவருகின்றனர். டெல்லி ஜந்தர் மந்தரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் இன்று பிரதமர் அலுவலகம் முன்பு திடீரென நிர்வாணமாகப் போராடினர். அவர்களை,  டெல்லி போலீஸார் கைதுசெய்து வேனில் ஏற்றிச்சென்றனர். 

பிரதமர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் திடீர் நிர்வாணப் போராட்டம்! டெல்லியில் பரபரப்பு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடந்த 14-ம் தேதி, டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில், சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில்  காலவரையற்ற போராட்டம் தொடங்கப்பட்டது. காவிரி மேலாண்மை அமைப்பது, விவசாயிகள் வாங்கிய வங்கிக் கடன்களைத் தள்ளுபடிசெய்தல், நதிகள் இணைப்பு, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, வித்தியாசமான போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். 

பிரதமர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் திடீர் நிர்வாணப் போராட்டம்! டெல்லியில் பரபரப்பு

மண்டை ஓடு, மண் சட்டி, தூக்குக் கயிறு, எலிக் கறி, பாம்புக் கறி உள்ளிட்டவற்றைவைத்து  நூதன முறையில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தங்களை நேரில் சந்தித்து கோரிக்கைகளைக் கேட்கவில்லை என்று குற்றம் சாட்டிய விவசாயிகள், நிர்வாணப் போராட்டம் நடத்தினர். டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகம் முன்பு ஆடைகளைக் களைந்து, போராட்டத்தைத் தொடர்ந்தனர். டெல்லிக் காவல்துறை, அவர்களைக் கைதுசெய்து அழைத்துச் சென்றது. 

பிரதமர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் திடீர் நிர்வாணப் போராட்டம்! டெல்லியில் பரபரப்பு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism