வெளியிடப்பட்ட நேரம்: 20:26 (11/04/2017)

கடைசி தொடர்பு:10:13 (12/04/2017)

டெல்லி அப்பளம், மொளகா பஜ்ஜி, மைனர்கள் - இதெல்லாம் இல்லாத திருவிழாவா?

ஒரு வருஷம் படாதபாடுபட்டு படிச்சு முடிச்சதும் நமக்குக் கிடைக்கிற உச்சபட்ச மகிழ்ச்சினா அது விடுமுறை தினத்தை சொந்த ஊரில் செமத்தியா கொண்டாடுறதுதானே. அப்படி நாம் கொண்டாட நமக்காகவே ஊர்க்கோயில் திருவிழாக்கள் வரும். அந்தத் திருவிழாக்களில் நாம பண்ற அக்கப்போர்களைப் பார்ப்போமா...

திருவிழா

* திருவிழாவுக்குக் காப்புக் கட்டின நாளில் இருந்து `உள்ளூர்க்காரர்கள் அசலூருக்குப் போனால் ராத்திரி தங்கக் கூடாது', `வேற யார் வீட்டிலேயும் சாப்பிடக் கூடாது'னு ரூல்ஸ்களையும் லோக்கலைஸ் பண்ணிப் போட்டுத் தாக்குவாய்ங்க. 

* பெரிசுகள் ஒரு ரூட்டில் போனால் ஊரில் இருக்கும் யூத்துகள் இன்னொரு பக்கம் தாறுமாறாக வண்டியைக் கிளப்புவார்கள். புதுச் சட்டை எடுத்து பந்தா காட்டிக்கிட்டே கூட்டத்துக்குள்ள நுழைவாங்க. நிச்சயம் வெளியில வரும்போது பாதிச் சட்டைதான் இருக்கும். திருவிழாக் கூட்டத்துல கிழியாத சட்டையா பாஸு..?

* வளையல் கடைகிட்ட நமக்கு வேலை இல்லைனாலும் பொண்ணுங்களைப் பார்க்கிறதுக்காகவே தவம் கிடப்பாய்ங்க. எல்லாம் நம்ம வளையல் போட்டுவிட ஒரு வாய்ப்பு அமையாதாங்கிற நப்பாசைதான். வேணும்னே திரும்பத் திரும்ப கோயிலைச் சுற்றிச் சுற்றி வர்றது... அப்போதானே மக்கா புதுசு புதுசாப் புள்ளைகளைப் பார்க்க முடியும். திருவிழாவில் தேர்கூட மூணு தடவைதான் சுத்தும். ஆனா நம்ம பயலுக சுத்துறதுல எண்ட் கார்டே கிடையாது.

* பொண்ணு மறைவா கிஃப்ட் கொடுக்கிறதும் பையன் மறைவா கிஃப்ட் கொடுக்கிறதும் அப்பட்டமா நடக்கும். எதுவுமே கொடுக்க முடியாம ஏக்கத்தோட இந்தக் கொடுமையைப் பார்க்கிறதுக்கும் ஒரு குரூப் செயல்படும். சரி, ராட்டினத்துலயாச்சும் ஏறலாம்னு சோலோவா நின்னா அவனவன் லவ்வரோட நிற்பான். ஏன்னா அப்போதான் தெரிஞ்சவங்க கண்ணுல படாம இருப்பாங்களாம். என்னா ஒரு மாஸ்டர் பிளான்..?

* பள்ளிக்கூடத்துல படிச்ச பழைய காலத்து ஃப்ரெண்டுல இருந்து நேத்து பார்த்த ஃப்ரெண்டு வரைக்கும் எல்லோரையும் கண்டிப்பா திருவிழா கூட்டத்துல பார்க்க முடியும். இதுக்கு எதுக்கு வீணா கெட் டு கெதர் வெச்சுக் காசை வேஸ்ட் பண்ணிக்கிட்டு..?

* திருவிழாவை முன்னிட்டு `நாடகம் நடத்துறோம்... கபடி போட்டி வைக்கிறோம்'னு அஞ்சாறு பேர் கூட்டமாகப் பக்கத்து டவுனில் பிரின்ட் அடித்த ரசீது புக்கோடு முக்கியத் தலைக்கட்டுகளைச் சந்தித்து பில்லைப் போடுவாங்க. மைக்செட் கடை, ஷாமியானா பந்தல் எனச் சில எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்ஸ் ஐட்டங்களையும் உபயமாகவே வாங்கிச் சமாளிப்பாங்க. # பின்னே ... திருவிழான்னா இதெல்லாம் இல்லாமலா பாஸு..? 

திருவிழா

* டெல்லி அப்பளம், மிளகாய் பஜ்ஜிலாம் எத்தனை தடவை வாங்கித் தின்னாலும் சலிக்காது. நட்பூஸ்கூட சைட் அடிச்சிக்கிட்டே சாப்பிடுறதும் தனி சுகம்தானே. கறிக்குழம்பைக் கொட்டி நெஞ்சுவரை நிரப்பிட்டு, மத்தியானம் மல்லாக்கப் படுத்துத் தூங்குவதோடு முடிந்துவிடாது அந்தத் திருவிழா.

* திருவிழாவுல மேளச் சத்தத்துல ஆடிக்கிட்டே வர்ற நம்ம பசங்க எப்பவுமே அழகுதான். குட்டிக் குட்டி குழந்தைகள் அள்ளி அணைச்சு வெச்சிருக்கிற பலூனோட மகிழ்ச்சியை அளவிடவே முடியாதுங்க...

* திருவிழாவால லவ்வர் கிடைச்சவங்களும் இருக்காங்க. லவ்வரைப் பிரிஞ்சவங்களும் இருக்காங்க மக்கா. ஸோ... திருவிழாக்கள் ஜாக்கிரதை! 

அப்பாடா... இனிமே நல்லா தூக்கம் வரும். 

 

- வெ. வித்யா காயத்ரி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்