Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆர்.கே.நகர் ராசியை உங்க ஆண்ட்ராய்டில் பார்க்கலாம்! - கலக்கும் கிளி ஜோசியம்

'ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ...'னு கேட்கிறதைத் தாண்டி அதுக்கு அடுத்த லெவலில் மூளையையே மிக்ஸியில் போட்டு அடிச்சு யோசிக்கிறாய்ங்க நம் ஆளுக. அந்தப் பக்கம் என்னடான்னா செவ்வாய்க்கே ஸ்ட்ரைட்டா ராக்கெட் விட்டுக்கிட்டு இருக்கும்போது இன்னொரு பக்கம் ஆண்ட்ராய்டு போன்ல கிளி ஜோசியம் பார்த்து என்டர்டெயின் பண்ணிக்கிட்டு இருக்காய்ங்க. ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்களை அள்ளித்தர்ற கூகுள் ப்ளே ஸ்டோர்ல தட்டிப்பார்த்தா தெறிச்சு விழுற ஆப்ஸ்ல முக்கால்வாசி இந்த கேட்டகிரிலதான் இருக்கு. 'உங்களைத்தான் தேடிக்கிட்டு இருந்தோம் ராசா...' என இந்த மாதிரியான கோக்குமாக்கு அப்ளிகேஷன்களின் டெவலப்பர் சுரேஷ் பாலாஜியைச் சந்தித்தோம். 

கிளி ஜோசியம்

"ஆன்லைன்ல கிளி ஜோசியம் வியாபாரம் பார்க்கிறீங்களாமே..?"

"கிளியைக் கூண்டுப் பெட்டியில் அடைச்சு வீடுவீடாகப் போய் சீட்டெடுக்க வைக்கிற கிளிகளின் பாரம்பர்யத்தை (பார்யா... இதென்ன வரலாறோ..?) அப்படியே டெக்னாலஜியாக டெவலப் செய்து ஆப்பாக உருவாக்கி இருக்கோம். ஆப்பைத் திறந்ததும் உங்களுக்கான சீட்டைக் கிளியே தேர்ந்தெடுத்து உங்களின் எதிர்காலத்தைச் சொல்லும். உங்க பெயரையும், பிறந்த தேதியையும், உங்களுக்குப் பிடிச்ச அதிர்ஷ்ட எண்ணையும் அழுத்தினால் போதும். கிளி வெளியே வந்து சீட்டெடுத்துக் கொடுத்துவிட்டு அதுபாட்டுக்கு உள்ளே போயிடும். அதற்கு அப்புறம் உங்களுக்கு அன்னபூரணி வந்திருக்கிறாரா? அஷ்டலெட்சுமி வந்திருக்கிறாராங்கிறதை எல்லாம் உங்களுக்கு வந்த சீட்டே சொல்லிடும். நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். கண்ணில் பட்டதெல்லாம் விளங்கும்னு நல்லதாகவும் வரும். நீங்கள் போகக்கூடாத திசைகள் கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்குனு சொல்லி மொத்தமாக சூனியத்தை அள்ளி நம் தலையில் போட்டுத் தாளிக்கவும் செய்யும்." (ரொம்ப ஓவராத்தான் போற கிளி..!)

"டெக்னாலஜியில் பட்டையைக் கிளப்பிக்கிட்டுருக்காங்க... இன்னும் ஏங்க ஜோசியம், ஜாதகம்னு ஆப்ஸ்?"

"என்னதான் டெக்னாலஜி வளர்ந்தாலும் உலகம் முழுவதும் இருக்கிற தமிழர்கள் இன்னும் ஜாதகம், ஜோசியம் பார்க்கிற சம்பிரதாயங்களைக் கைவிடலை. அமெரிக்காவில் இருக்கிற தமிழர்களுக்குக் கிளி ஜோசியம் பார்க்கணும்னு ஆசை இருந்தால்கூட அவங்களால அந்த ஆசையை செயல்படுத்த முடியாது. அதுக்காகத்தான் கிளி ஜோசியத்தையே ஆண்ட்ராய்டு அப்ளிகேஷனா மாற்றி எல்லோர் மொபைல் போன் வழியாகவும் அவங்க விரல்நுனியில் வழங்குறோம்."

"கிளி ஜோசியம் மட்டும்தானா இல்லை திருச்செந்தூர்ல மாதிரி எலி ஜோசியம்லாம்கூட இருக்கா..?"

"வேணும்னா அதையும் பண்ணிடலாம் சார். இப்போதைக்கு நாடி ஜோசியத்துக்கு நாங்க ஆப் வெச்சிருக்கோம். நாடி ஜோசியம் பார்க்க வைத்தீஸ்வரன் கோயிலுக்குப் போறதுக்குப் பதிலா உங்க ஆண்ட்ராய்டு போனிலேயே 'நாடி ஜோதிடம்' ஆப்பை இன்ஸ்டால் பண்ணினா இன்ஸ்டன்ட்டா தெரிஞ்சிக்கலாம். பெயர், ஆணா பெண்ணா? பிறந்த இடம், பிறந்த தேதி, உங்களோட அட்ரஸ். இவைகளோட சேர்த்து உங்கள் கட்டைவிரல் ரேகை இருந்தால் போதும். உங்கள் கைரேகையை ஸ்க்ரீனில் பதித்து உங்கள் நாடிபலன்களை உடனுக்குடன் தெரிஞ்சிக்கலாம். சிம்பிள்."

சுரேஷ் பாலாஜி

கிளி ஜோசியம்

"இந்த அப்ளிகேஷன்களுக்கு வரவேற்பு எப்படி இருக்கு..?"

"அப்ளிகேஷன் உருவாக்கிய புதிதில் பயங்கரமான க்ரேஸ் இருந்தது. இதுவரைக்கும் இந்த மாதிரி வித்தியாசமான முயற்சிகளோட 110-க்கும் மேற்பட்ட ஆப்ஸ் உருவாக்கிட்டோம். தகவல்களைத் தமிழிலேயே கொடுக்கிறதால பலரும் ஆர்வத்தோடு ஜோசியம் பார்க்க ஆரம்பிச்சாங்க. இப்பவும் ஒவ்வொரு நாளும் 150 பேர் எங்களோட ஆப்ஸ்களை டவுன்லோடு பண்றாங்க. ஐந்து லட்சம் பேருக்கும் மேலே இதுவரைக்கும் இந்த அப்ளிகேஷனை இன்ஸ்டால் பண்ணியிருக்காங்க."

"அடுத்து எந்த ஐடியாவை வெச்சு ஆப் டெவலப் பண்ணப் போறீங்க..?"

"மதுரையில் இருந்து சுற்று வட்டாரங்களுக்குப் போகும் பஸ்கள், அவை புறப்படும், வந்தடையும் நேரம் எல்லாத்துக்கான டேட்டாபேஸையும் வெச்சு எளியமக்களும் பயன்படுத்துற மாதிரி ஒரு ஆப் டெவலப் பண்ணிக்கிட்டு இருக்கோம். கூடிய விரைவில் அதுவும் பயன்பாட்டுக்கு வரும். இந்த அப்ளிகேஷனை அரசாங்கத்தோடு இணைந்து பணியாற்றவும் தயாரா இருக்கோம். எதிர்காலத்தில் நிச்சயம் இது எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும். தேர்தல் எல்லாம் இப்போ ஹை-டெக் ஆகிடுச்சு. அதுக்கு ஏற்றமாதிரி வாக்காளர்கள் தங்கள் வேட்பாளர்கள் பற்றிய தகவல்களைத் தெரிஞ்சிக்க ஒரு ஆப் உருவாக்கணும்."

இதெல்லாம் நல்லாத்தான் இருக்கு. எப்படி இருந்தாலும்... சிவகாமி கம்யூட்டர் பொய் சொல்லாது. பார்த்து சூதானமா இருங்கப்பூ!

- விக்கி 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement