Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஃபேஸ்புக்கில் பெண்களுக்கு மோசமாக கமென்ட் செய்தால் ஷார்ஜாவில் இதுதான் தண்டனை!

கூகுளில் ‘ராணா..’ என்று டைப் செய்தால், ராணா அயூப்புக்குப் பிறகுதான் நடிகர் ராணா டகுபதியின் பெயரே வரும். அந்தளவு இந்தியாவின் மிகப் பிரபலமான பெண் பத்திரிகையாளர் ராணா அயூப். ராணா என்றால் அரசியல்வாதிகளுக்கு லேசாக வயிற்றில் புளி கரைக்கும். புகழ் பெற்ற டெஹல்கா நிறுவனத்தில் 2007-ல் ராணா அயூப் பணியில் சேர்ந்த பிறகு, நிறைய அரசியல்வாதிகளுக்கு கிலி ஏற்பட்டது. டெஹல்காவில் ஃபேக் என்கவுன்ட்டர்கள் சம்பந்தமாக இரவு பகல் இன்வெஸ்டிகேட் செய்து, அப்போதைய உள்துறை அமைச்சராக இருந்த பிஜேபி தலைவர் அமித்ஷாவைக் கைது செய்ததற்குப் பின்புலமாக இருந்ததே ராணாதான். 

Rana Ayyub சவுதி

டெஹல்காவில் இருந்து விலகிய பிறகு, ராணா அயூப் வெளியிட்ட ‘குஜராத் ஃபைல்ஸ்’ என்ற புத்தகம், நிஜமாகவே குற்றமுள்ள அரசியல்வாதிகளைக் குறுகுறுக்க வைத்தது. கமலின் ‘விஸ்வரூபம்’ பிரச்னைகளைப்போல், ராணாவின் ‘குஜராத் ஃபைல்ஸ்’ புத்தகமும் அரசியல்வாதிகளின் ஏகப்பட்ட முட்டுக்கட்டைகளைத் தாண்டி ஜெயித்த பிறகுதான் வெளிவந்தது. ‘ராணா பேட்டி’ என்றால் பிரதமர் மோடியே லேசாக அலெர்ட் ஆகித்தான் பதில் சொல்வாராம். சரி; விஷயத்துக்கு வருவோம்.

சோஷியல் மீடியாக்களிலும் ராணா அயூப் செம ஃபெமிலியர். ஃபேஸ்புக், ட்விட்டரில் எப்போதுமே ஆக்டிவ்வாக இருக்கும் ராணாவுக்கு ‘பின்ஸிலால்’ என்ற பெயரில் அந்த ரிக்வெஸ்ட் வந்தது. சோஷியல் மீடியாக்களில் ஏகப்பட்ட நட்பு வட்டத்தைக் கொண்டவர் என்ற அடிப்படையில் ரிக்வெஸ்ட்டை ஏற்றுக் கொண்டவருக்கு, பின்னாளில்தான் அந்தத் தலைவலி ஆரம்பித்தது.

‘மானே, தேனே’ போன்று ஏகப்பட்ட ஜொள்ளள்கள் ராணாவின் இன்பாக்ஸில் வந்து விழுவது சகஜம். ஆனால், பின்ஸிலாலின் கமென்ட்கள், எழுதவே முடியாத அளவு... ‘பீப்’ ஒலிகூட போட்டு மறைக்க முடியாத அளவு இருந்தன. 

‘‘ஆன்லைனிலேயே அதிகமாக செக்ஸ் தொந்தரவுகளுக்கு ஆளானவள் நானாகத்தான் இருப்பேன். மேலும், எனக்கு இருக்கும் பணிகளுக்கு நடுவில் முதலில் நான் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. குனியக் குனிய, குட்டல்கள் தொடரும் என்பது நிரூபணமானது. என்னை மிகவும் கீழ்த்தரமாகவும், படுக்கைக்கு அழைத்தும் அவனுடைய கமென்ட்கள் இருந்தன. நிறைய பேர் என்னிடம் இதைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்து விட்டார்கள்’’ என்று சொல்லும் ராணா அயூப், அதற்கப்புறம்தான் அதிரடியில் இறங்கினார்.

அதாவது, கேரளாவைச் சேர்ந்த பின்ஸிலால் பாலச்சந்திரன் எனும் அந்த நபர் ஷார்ஜாவில் உள்ள ஒரு பெயின்ட் நிறுவனத்தில் பணிபுகிறார் என்பதைத் தெரிந்துகொண்டார் ராணா. அங்குள்ள தனது பத்திரிகை நண்பர்கள் மூலம் ‘கல்ஃப் நியூஸ்’, 'ஃபெமினா' போன்ற பத்திரிகைகளில், ‘‘ஐக்கிய அரபு அமீரக சட்டத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்தியப் பெண்கள் ஒன்றும் சோடை போனவர்கள் அல்ல. எனக்கு ஏற்பட்டிருக்கும் இந்த அவமானத்துக்கு அமீரக அரசு கண்டிப்பாய் நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்’’ என்று காட்டமாக பேட்டிகள் தட்டிவிட, பரபரப்பானது அமீரக அரசு.

திடீரென ஒரு நாள் ராணாவுக்கு போன். ‘‘நான் பின்ஸிலால் பணிபுரியும் நிறுவனத்தில் இருந்து பேசுகிறேன். அவரைப் பணியிலிருந்து நீக்கிவிட்டோம். நடந்த செயலுக்கு மன்னிப்புக் கோருகிறோம்!’’ என்றது எதிர்முனை.

மற்றொரு போன்: ‘‘நாங்கள் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தில் இருந்து பேசுகிறோம். உங்களுக்கு ஏற்பட்ட அவமானத்துக்காக அரசு வருந்துகிறது. சம்பந்தப்பட்ட அந்த நபரின் விசாவையும் பாஸ்போர்ட்டையும் பறிமுதல் செய்துவிட்டோம். இனிமேல் அவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள எந்த நிறுவனத்திலும் வேலை பார்ப்பதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது!’’ என்றது இன்னொரு முனை.

நல்லவேளையாக, பின்ஸிலால் குஜராத்தைச் சேர்ந்தவர் இல்லை. ஏனென்றால், தனது பாதுகாப்புக்காக எப்போது வேண்டுமானாலும் துப்பாக்கி பயன்படுத்திக் கொள்ளலாம் என போன வருடம்தான் ராணாவுக்கு அனுமதி கிடைத்ததாம்.

பெண்களை கமென்ட் செய்தாலே நாட்டை விட்டுத் துரத்துகிறார்கள். அப்படியென்றால், நம் ஊர் மாதிரி பெண்களைக் கை நீட்டி வெறித்தனத்தைக் காட்டினால்?

- தமிழ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close