வெளியிடப்பட்ட நேரம்: 22:15 (12/04/2017)

கடைசி தொடர்பு:22:15 (12/04/2017)

அமெரிக்க அதிபர் ட்ரம்பை முந்திய பிரதமர் மோடி!

சோஷியல் மீடியாவான இன்ஸ்டாகிராமில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முந்தியுள்ளார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப்க்கு இன்ஸ்டாகிராமில் 64 லட்சம் ஃபாலோயர்கள் உள்ளனர். மோடியை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 69 லட்சமாக உயர்ந்துள்ளது. இதையடுத்து, ஃபாலோயர்கள் அடிப்படையில் ட்ரம்பை பின்னுக்குத் தள்ளியிருக்கிறார் மோடி. இன்ஸ்டாகிராமில் அதிகம் பின்தொடரப்படும் உலகத் தலைவர் என்ற பெருமையை மோடி தட்டிச் சென்றுள்ளார்.

மோடி

'டைம்' இதழ் நடத்திய 2016-ம் ஆண்டின் 'Person of the Year' எனப்படும் தலைசிறந்த நபருக்கான வாசகர் கருத்துக்கணிப்பில், ட்ரம்பை பின்னுக்குத் தள்ளி மோடி முன்னிலை வகித்தார். ஆனால், அமெரிக்க அதிபராக ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதால், அவரையே 2016-ம் ஆண்டின் தலைசிறந்த நபராக 'டைம்' இதழ் தேர்ந்தெடுத்தது குறிப்பிடத்தக்கது.