Published:Updated:

நமீதாவுக்கும் ஆர்த்திக்கும் என்ன வித்தியாசம்?

இர.ப்ரீத்திபடங்கள் : பொன்.காசிராஜன்

##~##

'சீரியல் பார்ட்டிகள் ஒரே இடத்தில் கும்மாளம் அடிக்கப் போறோம்!’- செல்போனில் மினுங்கியது நீலிமா ராணியின் எஸ்.எம்.எஸ். 'ஆஹா, அழவெச்சு அழவெச்சு டயர்ட் ஆக்கறவங்க அப்படி என்னதான் கும்மாளம் அடிப்பாங்க?’ என்று ஆர்வத்துடன் ஆஜர் ஆனோம்.

'' 'எல்லோரும் ஷூட்டிங்கில் பிஸி ஆனதால ரொம்பவே மிஸ் பண்ண மாதிரி தோணுச்சி, அதான் இந்த கெட்-டு-கெதர்'' என்று அறிமுகவுரை ஆற்றிய நீலிமா, ''நான், தீபக், ஆர்த்தி, ஷ்யாம் எல்லாம் ரொம்ப வருஷப் பழக்கம். இப்போ ரீசன்ட் என்ட்ரி ராஜ்குமாரும், ஆடம்ஸும்தான்'' என்று 'முஸ்தபா முஸ்தபா’ முணுமுணுத்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''ஆமாங்க, ஒரே வயசுக்காரங்க ஒண்ணா சேர்ந்து ஜமா கூட்டறது சகஜம்தானுங்களே'' என்ற தீபக்கின் தலையில் வேகமாக விழுந்தது நீலிமாவின் குட்டு. ''அடப்பாவி! நீ சீரியலில் ஹீரோவா நடிச்சிட்டு இருந்தப்ப, நான் குழந்தை நட்சத்திரமா அறிமுகம் ஆனேன். உன்னை அப்பெல்லாம் வாய் நிறைய அங்கிள்னு கூப்பிடுவேனேஏஏ... இப்போ வாய் கூசாம ஒரே வயசுனு புளுகறியேஏஏஏ...'' என்று ராகம் போட்டு இழுத்தார் நீலிமா.

நமீதாவுக்கும் ஆர்த்திக்கும் என்ன வித்தியாசம்?

''ஹே... பப்ளிக் பப்ளிக்! நம்ம சீக்ரெட்ஸை இப்படி ஷேர் பண்ணக் கூடாது'' என்று பம்மிப் பதுங்கினார் தீபக். ''ஹே மச்சான்,   சீரியல்ல ரொமான்ஸ் பிச்சி உதர்றியாமே... கேள்விப்பட்டேன்!'' என்று ஆர்த்தி சொன்னதும், ராஜ்குமாரின் முகத்தில் ஆயிரம் 'பல்ப்’ பளபளப்பு. மைண்ட் வாய்ஸில் 'தம் தன தம் தன தம்’தான்! ''அந்த ரொமான்ஸைப் பார்த்து எங்க பக்கத்து வீட்டு ஆன்ட்டி பத்து நிமிஷம் நான்ஸ்டாப்பா அழுதாங்க தெரியும்ல'' என்று ஆர்த்தி விட்ட கல்லில், ராஜ்குமாரின் பல்பு டமார்ர்ர்ர்!

''சேலம்னாலே மாம்பழமும் மனுஷங்க ளும் ஸ்வீட்தானேப்பா'' என்று வேக வேகமாக வெள்ளைக்கொடி ஆட்டினார் ஷ்யாம். ''ஒரே ஊர்க்காரன்னு சப்போர்ட் பண்றியாக்கும்? அவன் ரொமான்ஸுக்காவது பக்கத்து வீட்டு ஆன்ட்டிதான் அழுதாங்க. ஆனா, சென்னை வந்த ஹிலாரி கிளின்டன் தாஜ் ஹோட்டல் டி.வி-யில உன் சீரியல் ரொமான்ஸ் பார்த்து தேம்பித் தேம்பி அழுதாங்களாம்'' என்று வாரினார் ஆடம்ஸ்.

''ஆமா, இந்த நீலிமா எப்பப் பார்த்தாலும்  எலி மாதிரி மூஞ்ச 'ஊ...’னு வெச்சுக்கிட்டா அங்க எப்படிடா ரொமான்ஸ் வரும்?'' என்று ஷ்யாம் சொன்னதும், ''டேய் ய்ய்ய்...'' என்று டெரர் கோபம் காட்டினார் நீலிமா.

நமீதாவுக்கும் ஆர்த்திக்கும் என்ன வித்தியாசம்?

எல்லோரையும் விதிவிலக்கே இல்லாமல் 'மச்சான்ஸ்’ என்று அழைத்த ஆர்த்தியிடம் ''ஆர்த்தி உனக்கும் நமீதாவுக்கும் ஒரு வித்தியாசம் சொல்லவா? நமீதா பயங்கர அழகா இருப்பாங்க. ஆனா, நீ பயங்கரமா மட்டும்தான் இருக்கே!'' என்று கலாய்த்தார் தீபக். ''கலாய்ச்சுட்டாராமாம்! என் பெயரைத் தேவி கிருபானு மாத்திப் பல வருஷம் ஆகுது. இனிமே, ஆர்த்தினு கூப்பிட்டா, ஷ்யாமைப் பார்சல் பண்ணி உன் வீட்டுக்கு அனுப்பிருவேன்!'' என்றார் செல்லக் கோவத்துடன்.

''ஐயோ சாமி வேணாம்பா... இவன் மொக்கைக்கு என் வீட்டுக்காரியே தேவலை!'' என்று ஜெர்க் ஆனார் தீபக்.  

''அப்படியா? ஒரு வார்த்தை மாறாம அப்படியே உன் ஒய்ஃபுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிட்டேன். மவனே வீட்டுல சங்குதான்'' என்று நீலிமா சொல்ல, தீபக் கண்களில் ரெடிமேட் சீரியல் கண்ணீர்!

''நடிச்சா ராஜ்குமாரோடதான் நடிப்பேன்னு தமிழ் ஹீரோயின்ஸ் எல்லோரும் ஸ்ட்ரைக் பண்றாங்களாமே... நேத்து தலைப்புச் செய்தி ஓடுச்சு!'' என்று அமைதியாக அமர்ந்திருந்த ராஜ்குமாரை வம்புக்கு இழுத்தார் ஆடம்ஸ்.

''ஹலோ... நாங்களும் 'மர்மயோகி’ படத்தில் கமிட்டானோம், தெரியும்ல?'' என்று நாக்கைத் துருத்திய ராஜ்குமாரிடம், ''இப்பதான் புரியுது... அந்தப் படம் ஏன் பாதியில நின்னுபோச்சுனு'' என்று ராஜ்குமாருக்கு ஏகத்துக்கும் பி.பி. எகிறவைத்தார் ஆடம்ஸ்.

அப்போது ஜூஸுடன் என்ட்ரி ஆன நீலிமா, ''ஷாட்ல பதினைந்து டேக் வாங்கும் இந்த ஷ்யாமை வெச்சி நம்ம டைரக்டர் குமரன் சார் படாத கஷ்டத்தையா ஆடம்ஸ் குடுத்துட்டான்?'' என்று ஷ்யாமைப் பார்த்துக் கண்ணடித்தார். ''அன்னிக்கி, உன் ஸீன் ஷூட் பண்ண ரூம்ல ஒரு பொண்ணு ஏற்கெனவே தூக்கு போட்டு செத்திருச் சினு சொன்னதும் பயத்தில் வாங்கினி யேம்மா அடுத்தடுத்த டேக்...'' என்று கிளறினார் ஷ்யாம்.

நமீதாவுக்கும் ஆர்த்திக்கும் என்ன வித்தியாசம்?

கோபமாகச் சிணுங்கிய நீலிமாவிடம், ''பார்க்க விறைப்பா இருக்கே. பில்டிங் ஸ்ட்ராங்... பேஸ் மட்டம் வீக். நாய் சேகர்... நாய் சேகர்!'' என்று ஏகத்துக்கும் எக்கோ கொடுத்தார் ஆர்த்தி.

''அவளாவது நாய் சேகர் ரேஞ்சுதான். ஆனா, மச்சான் உனக்கு உன் வீட்டுப் பூனையைப் பார்த்துதான் 'புஜ்ஜிமா’ன்னு டைரக்டர் சார் பேரே வெச்சாராமே!'' என்று தீபக் கலாய்க்க...

''எங்க அம்மா சொல்வாங்க, எந்த மொக்கை காரியத்தையும் செய்றதுக்கு முன்னாடி ஜூஸ் சாப்பிடணும்னு'' என்று ஒட்டுமொத்த ஜூஸையும் ஒரே ஆளாகக் காலி செய்தார் ஷ்யாம்!