Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐபிஎல் மேட்ச்சும் வானத்தைப் போல படமும் ஒண்ணு... ஏன்?

ன்னதான் இன்டர்நேஷனல் மேட்சில் எலியும் பூனையுமாக இருந்தாலும் ஐபிஎல் என்ற ஒன்று ஆரம்பித்தவுடன் சண்டை போட்ட ஆட்களெல்லாம் நகமும் சதையுமாக இருப்பார்கள். சுருக்கமாகச் சொன்னால் ஐ.பி.எல் ஒரு விக்ரமன் சார் படம்..!

ஒரு வருடத்திற்கு ஒருமுறை இந்த ஐ.பி.எல் மேட்ச் நடக்கும். ஃபாரீன் வீரர்கள் அனைவருமே ஐ.பி.எல் வரப்போகிறது என்று தெரிந்தால் குஷியாகி விடுவார்கள். சுருக்கமாகச் சொன்னால் சொந்த ஊர்களில் நடக்கும் திருவிழா மாதிரிதான் ஐ.பி.எல். ஆட்டம், பாட்டம் கொண்ட்டாட்டம் என எல்லாமே கலந்த கலவையாக இருக்கும். இங்கிருந்து சொந்த ஊர் திருவிழாவுக்குப் போவது போல் வெளிநாடுகளில் இருந்து இங்கு வருவார்கள் ஃபாரீன் ப்ளேயர்ஸ். குறிப்பாக 'க்ரிஸ் கெயில்', 'பொலார்டு', 'ஹெய்டன்' போன்ற வீரர்களுக்கெல்லாம் ரொம்பவே குஷியாகிவிடும். இன்டர்நேஷனல் மேட்சில் என்னதான் அடித்து மல்லுக்கட்டினாலும் இங்கு வந்து விளையாடும் வீரர்களை அரவணைப்பதில் இந்தியர்களை விட்டால் வேறு யாராக இருக்க முடியும்? அதே சமயம் நம்ம டீம் ஆட்களுக்குள்ளே அடித்துக்கொள்வதும் இந்த ஐ.பி.எல்-லில்தான். 

ஐபிஎல்

ஒட்டுமொத்த ஐ.பி.எல்-லும் 'விக்ரமன்' இயக்கிய 'வானத்தைப் போல' படம் மாதிரிதான். ஃபைனல் மேட்ச் வந்துவிட்டால் கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் கொட்டும். ஏனென்றால் இது போன்று தருணங்களைப் பார்ப்பதற்கு இன்னும் ஓர் ஆண்டாகுமே! இந்த லிஸ்டில் க்ரிஸ் கெயில்தான் ரொம்பவே குசும்புக்காரர். நடு கிரவுண்டில் தண்டால் எடுப்பது. யுவராஜை விளையாட்டாக அடிக்க பேட்டை ஓங்கி கிரவுண்ட் முழுவதும் துரத்துவது என இவர் பண்ணாத லூட்டிகளே கிடையாது. இவர் இந்தச் சேட்டையெல்லாம் செய்யும்போது ரசிக்கும் முதல் ஆள் நம் ஆளாகத்தான் இருக்கும். குறிப்பாக இவருக்கும் பொலார்டுக்கும் ஆகவே ஆகாது. ஆனா ரெண்டு பேரும் ஒரே டீம் பாஸ், நம்புங்க. இவர் அவரை வம்பிழுப்பது அவர் இவரை வம்பிழுப்பது என இவர்களுக்குள் ஜாலியாகவே இருக்கும். 

அதுவும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் டீமில் சேட்டைக்கு பஞ்சமே இருக்காது. 2011 ஐ.பி.எல் மேட்சில் சென்னை ஜெயித்து, கிரவுண்டை வலம் வரும்போது இந்தப் பக்கம் சென்னைக்கே பெயர் போன தப்பாட்டத்தை அடித்துக் கொண்டிருந்தனர். அந்தப் பக்கமாக வந்த 'பிராவோ', 'பொலின்ஜர்' இருவரும் செம குத்தாட்டம் போட்டதை யாராலுமே மறக்க முடியாது. இதே மாதிரி மியூஸிக்கைக் கேட்டதும் கன்ட்ரோல் செய்ய முடியாமல் ஆடியவர்கள் லிஸ்டில் கெயிலும் இணைந்தார். மேட்ச் ஆரம்பிக்கவிருக்கும் நேரத்தில் பாட்டுப் போடுவது வழக்கம். அப்போது 'கங்னம் ஸ்டைல்' பாடல் இசைக்கத் தொடங்கியது. அதைக் கேட்டு குஷியில் 'க்ரிஸ் கெயில்' ஆடத் தொடங்கிவிட்டார். அவர் ஆடியது 15 செகண்ட்ஸ்தான். ஆனால் அதைப் பார்த்து பார்த்து இன்று முழுவதும் சிரித்துக்கொண்டே இருக்கலாம். 

ஐபிஎல்

ஒருபக்கம் விளையாடும் வீரர்கள்தான் இப்படிச் செய்கிறார்கள் என்று பார்த்தால் அம்பயர்கள் செய்யும் லூட்டிகள் அதற்கும் மேல். 'கொல்கத்தா' அணியைச் சேர்ந்த 'அஷோக் டிண்டா' 'டெல்லி' அணியைச் சேர்ந்த 'சேவாக்கை' நோக்கி பந்து வீசினார். பேட்டில் பட்டதா என்று தெரியவில்லை. அது கீப்பரின் கையில் தஞ்சம் புகுந்தது. தொண்டை கிழியும் அளவிற்கு அம்பயரைப் பார்த்து விக்கெட்டுக்கு அப்பீல் செய்தார் 'டிண்டா'. கையை மேலே உயர்த்த வருவது போல் பாக்கெட்டுக்குள் கையினைவிட்டு சர்காஸம் செய்துவிட்டார் அம்பயர் 'ரூடி'. 

இந்த வருட ஐ.பி.எல்-லில்கூட இது போன்ற நிகழ்வு நடந்தது. 'ஹைதராபாத்' அணியைச் சேர்ந்த 'வார்னர்', 'தம்பி' வீசிய பந்தினை அடித்துவிட்டு சிங்கிள் ஓடினார். ஆனால் ஓடி வரும் அவசரத்தில் தம்பியின் ஷூ பறக்க அதை ஓடும் வழியிலேயே எடுத்து தம்பியின் கையில் கொடுத்துவிட்டு ரன்னை கம்ப்ளீட் செய்தார். ஒருபக்கம் காமெடியாக இருந்தாலும் மறுபக்கம் இதைப் பார்க்கும்போது நெகிழ்ச்சியாகவும் உள்ளது. 

ஐபிஎல்

இது போன்ற நிகழ்வுகளை எக்கச்சக்கமாக பட்டியலிடலாம். நான் சொல்லவந்த நோக்கமோ விளையாட்டில் போட்டி போடுவதைத தாண்டி இது மாதிரி விஷயங்களை பார்க்கும்போது மனதிற்கும் ஒரு சந்தோஷத்தைக் கொடுக்கிறது. தொடர்ந்து இதே மாதிரி நடக்க வேண்டும்; சி.எஸ்.கே களத்தில் இறங்க வேண்டுமென்று கூறி விடைபெறுகிறேன்.!

 

- தார்மிக் லீ  

Photo Courtesy:BCCI

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement