Published:Updated:

நானே கேள்வி... நானே பதில்!

மீன்... மீன்... ஜாமீன்!

நானே கேள்வி... நானே பதில்!

'' 'நாங்கள் இப்போது மத்திய மந்திரி பதவி எதுவும் கேட்கவில்லை’ என்று கருணாநிதியே சொல்லிவிட்டாரே?''

''ஆமாம். அவர் இப்போது கேட்பது எல்லாம், ஜாமீன் மட்டும்தானே!''

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

- அ.பேச்சியப்பன், ராஜபாளையம்.

''தமிழக அரசு மது பானங்களின் விலைகளை உயர்த்தியதுபற்றி?''

''சில நாட்களுக்கு முன்பு டீசல் விலை உயர்ந்தபோது, 'டீசல் விலை உயர்வைத் திரும்பப் பெறாவிட்டால், சரக்குக் கட்டணம் உயரும்’ - என்று ஜெயலலிதா சொல்லி இருந்தாரே, அதுகூடத் தெரியாத டியூப் லைட்டா சார் நீங்கள்?''

- அ.மனோ, காஞ்சிபுரம்.

##~##

'' 'கொடுமை கொடுமைனு கோயிலுக்குப் போனா...’ என்ற பழமொழிக்கு உதாரணம்?''

''புதுவையில் நடந்த அந்தச் சம்பவம். அமெரிக்க மாணவி ஒருவர் இந்தியக் கலாசாரம் பற்றிப் படிப்பதற்காக பாண்டிச்சேரி வந்து தங்கிப் படித்திருக்கிறார். ஒருநாள் செல்போனை சார்ஜ் செய்வதைப்போல அவர் அறைக்கு வந்த விடுதிக் காவலாளி ரஹ்மான், அந்த மாணவியிடம் தவறாக நடக்க முயன்றிருக்கிறார். நொந்துபோன அந்த அமெரிக்க மாணவி, 'இந்தியாவே

வேண்டாம்’ என்று அமெரிக்கா திரும்பிச் செல்ல முடிவு செய்தார். சென்னை விமான நிலையத் துக்குச் செல்ல ஒரு வாடகை கார் வந்தது. அந்த காரை ஓட்டிய சந்தானகுமார் என்ற இளைஞர், கார் பழுது என்று ஆங்காங்கே நிறுத்தி, அந்த மாணவியிடம் தவறாக நடக்க முயற்சி செய்தார். இதனால் தாமதமாகி அவரால் விமானத்தைப் பிடிக்க முடியவில்லை. இறுதியில் புதுவை காவல் துறையில் புகார் கொடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். அந்த அமெரிக்க மாணவி, 'இந்தியக் கலாசாரம்’பற்றி என்ன கற்றிருப்பார், சொல்லுங்கள்?''

- சி.பூவேந்தன், சென்னை-52.

''சாமியார்கள் குறித்த சர்ச்சைகள் குறைவதே இல்லையே?''

''நகுலனின் இரண்டு கவிதைகள் நினைவுக்கு வருகின்றன.

'பூசாரி
வெளிச்சம் போட்டுக் காட்டினாலும்
படைத்தவன்
இன்னும் இருளில்தான்
இருக்கிறான்!’
பூசாரியின் பொன்மொழி
'விற்க
விற்றபின்
அதற்குத் தக
நிற்க!’ ''

- இந்தப் பூசாரி என்றால் வெறுமனே கோயில் பூசாரி மட்டும் இல்லை. அரசியல் பூசாரி, கல்விப் பூசாரி, அதிகாரப் பூசாரிகள் என்று எல்லா தரகர்களையும் அர்த்தப்படுத்திக்கொள்ளலாம். நீங்கள் கேட்கும் சாமியார் களில் பலர் ஆன்மிகப் பூசாரிகளாகவும் ஆன்மிகத் தரகர்களாகவும் இருக்கின்றனர்!''

- கே.தீபன், திருப்பூர்.

நானே கேள்வி... நானே பதில்!