Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரசகுல்லாவால் நின்றுபோன திருமணம்! இது உ.பி கலாட்டா

 வரதட்சணைப் பிரச்னை, மணமகன் அல்லது மணமகள் திருமண நாளுக்கு முன் ஓடிவிட்டார்கள் என்றால் திருமணம் நின்றுவிடும். ஆனால் உத்தரப்பிரதேசத்தில், ரசகுல்லாவால் ஏற்பட்ட  சண்டை ஒரு திருமணத்தை நிறுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் குர்மபூரில், ஒரு திருமணம் நடைபெறுவதாக இருந்தது. மணமகள் வீட்டில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது. கொஞ்சம் டிலே ஆனதால், 'டின்னரை சீக்கரம் போடுங்கப்பா' என்று மணமகனின் தந்தை கூறியுள்ளார். இதனால், அவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டுவந்தது. 

 

Rasagulla

டின்னர் மெனுவில் ரசகுல்லாவும் இருந்தது. பஃபே முறை என்பதால், மணமகளின் உறவினர் ஒருவர் ரசகுல்லா ஸ்டாலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தார். ஒரு நபருக்கு ஒரு ரசகுல்லா என்பது மணமகளின் உறவினருக்குக் கொடுக்கப்பட்டிருந்த உத்தரவு. ஆனால், மணமகனின் உறவினர் ஒருவர், இரண்டு ரசகுல்லாவை அவராகவே எடுத்துக்கொண்டாராம்.

அங்குதான் பிரச்னை ஆரம்பித்தது. இந்தப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்து, அந்த இடமே கிட்டத்தட்ட போர்க்களமாக மாறியது. இதையெல்லாம், பால்கனியில் நின்று அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தார் மணமகள். தன் தந்தையையும் குடும்பத்தையும் அவமானப்படுத்தியது அவருக்குப் பிடிக்கவில்லை.அதனால், 'இந்தத் திருமணம் வேண்டாம்' என்று அந்தப் பெண் முடிவெடுத்தார். இதையடுத்து, மணமகளின் தந்தை இதுகுறித்து போலீஸில் புகார் அளித்துள்ளார். விசாரணை நடந்துவருகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement