Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அ.தி.மு.கவின் இரு அணிகளும் ஒன்று சேர்ந்தால்...? இதெல்லாம்தான் நடக்கும்!

மெரினாவில் ஒரு பின்னிரவு நேரம் தொடங்கிய படபட பிரிவுப் படலம் இரண்டு மாதங்களுக்குப் பின் அதே மாதிரியான ஒரு பின்னிரவுப் பொழுதில் முடிவிற்கு வந்துவிட்டது. 'கண்கள் கடல் போல பொங்குகின்றன, இதயங்கள் ஐஸ்க்ரீம் போல உருகுகின்றன' என கலைஞர் ஸ்டைலில் அறிக்கை சீக்கிரமே வரலாம். சரி, இப்படி தலை சுற்றவைத்து, டேபிள் சேரை எல்லாம் உடைத்து கடைசியில் விக்ரமன் படம் போல 'லாலாலா' பாடி இந்த இரு அணிகளும் சேர்ந்தால் என்னவெல்லாம் நடக்கும். இதெல்லாம்தான் நடக்கும்.

அதிமுக

* இனி மெரினாதான் இவர்களின் தலைமைச்செயலகம் ஆகும். ஒவ்வொரு முக்கிய முடிவின்போதும் கூட்டமாய் கிளம்பிச் சென்று அங்கே தியானத்தில் உட்கார்ந்து மீடியாக்களுக்கு கன்டென்ட் தருவார்கள். மோடிதான் பன்னீரை இயக்குகிறார் எனக் குரல்கள் கேட்பதால் தியானத்தோடு சேர்த்து யோகாவும் கடற்கரையில் அரங்கேறலாம். மோடியே வெள்ளை சட்டை, துண்டு சகிதம் வரலாம். யார் கண்டது?

* தன்னுடைய முதல் தேர்தலுக்கே தூங்கி எழுந்து மேக்கப் போட்டு மெதுவாக மிட்நைட்டில்தான் பிரசாரம் செய்தார் தீபா. இரண்டு தரப்பும் சேர்ந்துவிட்டால் இனி எழுந்திருக்கவும் தேவை இல்லை. எந்நேரமும் சம்மர் வெக்கேஷன் சென்ற பால்வாடிக் குழந்தை போல தூங்கிக்கொண்டே இருக்கலாம். மக்களும் அவரின் பிரசாரம், பேச்சு போன்றவற்றில் இருந்து தப்பித்துவிடுவார்கள். 

அதிமுக

* தீபாவுக்கே டெபாசிட் கிடைப்பது கஷ்டம் என்பதுதான் நிலைமை. ஆனால் அவரின் கணவர் மாதவன் என்ன நம்பிக்கையில் தனிக்கட்சித் தொடங்கினார் என்ற லாஜிக் மூளையை கிரானைட் குவாரி போல குடைந்தாலும் மாட்டுவேனா என்கிறது. இதில் விழப்போகும் பத்து ஓட்டுகளில் யாருக்கு பங்கு அதிகம் என்ற பஞ்சாயத்து வேறு. அ.தி.மு.க இணைவதன் மூலம் இந்தக் குடும்பமும் இணைந்தால் தமிழர்களுக்கான தலைவலியில் ஒன்று குறைந்துவிடும்.

* சிறையில் இருக்கும் சின்னம்மா நள்ளிரவு பிரஸ்மீட்டில் அபிநயத்தோடு சொன்னதே ஓ.பி.எஸ் எதிர்க்கட்சி தலைவரைப் 'பார்த்துக்கொண்டும்' 'சிரித்துக்கொண்டும்' இருந்தார் என்பதுதான். இனி அவர் சீனில் இருக்கவே மாட்டார் என்பதால் சண்டை, அமளிதுமளி எல்லாம் குறைந்து சட்டசபை சாந்த சபையாக இருக்கும். இனி கேப்டனே வந்தாலும் சிரித்து சிரித்துதான் கன்னம் சிவக்கும்.

அதிமுக

* வடிவேலு 'தலைநகரம்' படத்தில், 'இலவு காத்த கிளி... இலவு காத்த கிளினு ஒண்ணு இருந்துச்சாம்' என்பாரே! அது யாருக்குப் பொருந்துமோ இல்லையோ ஸ்டாலினுக்குப் பொருந்தும். ஆட்சி கலைந்தால் அமோக வாய்ப்பு என ரெடியாய் இருந்த ஸ்டாலினுக்கு இது கொஞ்சம் ஏமாற்றம்தான். 'என்னது இன்னமும் நாலு வருஷமா?' என முதலில் அதிர்ந்தாலும் அப்புறம் சகஜமாகியிருப்பார். பின்ன, அதுவே பழகிரும்ல!

* நார்மல் நாட்களில் பி.ஜே.பி தலைவர்களை அந்தக் கட்சித் தொண்டர்களே கண்டுகொள்ள மாட்டார்கள். தமிழக அரசியல் பரபரப்பு காரணமாக மீடியா அவர்களிடம் மைக்கை நீட்ட, ஆளாளுக்கு ஒன்றைப் பிடுங்கி வைத்துக்கொண்டு கருத்து சொல்லிக்கொண்......டே இருந்தார்கள். அதுவும் தமிழிசை எல்லாம் தனியாக டி.வி ஷோவே நடத்தினார். இனி அந்த பிரஸ்மீட்களில் இருந்து மீடியாவுக்கும் மக்களுக்கும் விடுதலை விடுதலை விடுதலை.

* இந்த இரண்டு மாதங்களில் பிறந்த குழந்தைகூட பிரேக்கிங் நியூஸ் மியூஸிக் கேட்டு டி.வி-யை திரும்பிப் பார்க்கத் தொடங்கியிருக்கும். 'நாளை மதியம் மூன்று மணிக்கு ஒரு பிரேக்கிங் நியூஸ் வரும்' என இன்று சாயங்காலம் பிரேக்கிங் நியூஸ் போட்டுச் சொல்லும் சேட்டை எல்லாம் நடந்தது. இனி அந்தப் பரபரப்பு, படபடப்பு எதுவுமே இருக்காது.

* இரண்டு அணிகளும் அடித்து உருண்டாலும் சரி, 'முஸ்தபா முஸ்தபா' பாடினாலும் சரி, தமிழ்நாட்டில் ஜென் நிலையில் இருக்கும் ஒரே இடம் ஜெயா டி.வி ஆபீஸ்தான். அதனால் அங்கே எந்த ரியாக்‌ஷனும் இருக்காது. 'ரச வடை வைப்பது எப்படி?' என்ற சமையல் குறிப்பும் பழைய பாட்டு கேட்பது எப்படி என்ற பயிற்சிக் கூட்டமும்தான் நடக்கும். நீங்க வேற லெவல்ய்யா!
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close