Published:Updated:

நானே கேள்வி... நானே பதில்

இரு வேடங்களில் கலக்கும்...

##~##

''பணத்தை கோடி கோடியாகச் சம்பாதித்துக்கொண்டே இருப்பவர்களுக்கு, 'போதும் என்ற மனம்’ எப்போது வரும்?''

''இது தொடர்பாக ஓஷோ இப்படிக் குறிப்பிடுகிறார்... 'பலருக்கு பணம் அவர்களின் அறியாமையை மூடி மறைக்க உதவுகிறது. பணத்தைக்கொண்டு இன்று படிப்பையும் பட்டங்களையும் பெற்றுவிடலாம். அவர்களுக்காக யாராவது புத்தகம் எழுதுவார்கள்; யாராவது உழைப்பார்கள். அவர்கள் நிழலில் கௌரவம் தேடிக்கொள்ளலாம். பணத்துக்கு ஒரு குணம் உண்டு. அதைச் சேர்க்க ஆரம்பிப்பவர்கள் சேர்த்துக்கொண்டே இருப்பார்கள். பிறகு, எப்படி அதை நிறுத்துவது என்பதைக்கூட அவர்கள் மறந்து போய்விடுவார்கள்!’ ''

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

- அனார்கலி, தஞ்சாவூர்.

''மனித மனம், துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து மீட்டும் அளவுக்கு பக்குவப்பட்டதா?''

''கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுடைய நாடகக் குழுவினர் சென்ற வேன், தலைக்குப்புற விழுந்து விபத்துக்குள்ளானது. அந்த இடத்துக்குச் சென்ற சிலர் 'என்ன நடந்தது?’ என்று துருவித் துருவிக் கேட்டனர். அதற்கு என்.எஸ்.கே. சொன்னார், 'உங்களைப் போல சிலர், 'வேனோட வலது பக்கம், மேல் பக்கம், இடது பக்கம் எல்லாம் பார்த்துருக்கோம். அடிப்பக்கத்தைப் பார்த்தது இல்லை’னு சொன்னாங்க. அதுக்காகத்தான் கவுத்திப்போட்டிருக்கோம். சீக்கிரமாப் பார்த்துக்கிடுங்க’ என்றாராம்.''

 - அ.பேச்சியப்பன், ராஜபாளையம்.

நானே கேள்வி... நானே பதில்

''பிறந்த நாளின்போது கேக் வெட்டுவது ஏன்?''

'' 'மேலை நாட்டுப் பழக்கமான கேக் வெட்டுவதில் ஒரு சமதர்மச் சித்தாந்தம் அடங்கியிருக்கிறது. மனைவி, மக்கள், நண்பர்களோடு வீட்டுப் பணியாளர்கள், கார் டிரைவர், தோட்டக்காரர்கள், அலுவலகச் சிப்பந்திகள்... என அனைவரையும் அழைத்து, வெட்டிய கேக் துண்டுகளை எல்லோருக்கும் பகிர்ந்து கொடுப்பார்கள். தமக்குச் சேர்ந்த புகழ், பொருள் யாவற்றையும் பிறருடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதே இதன் உள்ளர்த்தம். ஆனால், நம்மவர்களோ போட்டோ, வீடியோவுக்கு போஸ் கொடுக்க கேக் வெட்டிவிட்டு, அதைப் பத்திரமாக வீட்டுக்கு எடுத்துச்செல்வது வேடிக்கை; வேதனை.’ - இது எம்.ஆர்.ராதா சொன்னது!''

- மல்லிகா அன்பழகன், சென்னை.

நானே கேள்வி... நானே பதில்
நானே கேள்வி... நானே பதில்

''பாசத் தலைவனுக்கு நடந்த பாராட்டு விழாவிலும், பாசத் தலைவிக்கு நடந்த பாராட்டு விழாவிலும் - திரையுலகத்தினர் நடந்துகொண்ட விதம் பற்றி...?''

''இங்கே எல்லாருக்கும் டபுள் ரோல்தான்!''

- புதூர் பாலா, நாமக்கல்.

 ''இறைவன், ஏன் இறைவனாக இருக்கிறான்?''

''ஒரு குட்டிக் கதை. கடவுளோடு பேசிக்கொண்டிருந்த மனிதன் அவரிடம் ஒரு கேள்வி கேட்டான். 'சாமி உங்களுக்கு ஒரு கோடி வருஷம்ங்கிறது எவ்வளவு நேரம்?’ அதற்கு கடவுள் சிரித்துக்கொண்டே, 'ஒரு கோடி வருஷம்ங்கிறது எனக்கு ஒரு நிமிஷம்’ என்றாராம். இதைக் கேட்டு சந்தோஷமடைந்த மனிதன், 'அப்ப ஒரு கோடி ரூபாய்ங்கிறது சாமி?’ என்று கேட்க, 'ஒரு ரூபாய் போல’ என்றாராம் கடவுள். உடனே கடவுளை மடக்க நினைத்த மனிதன், 'சாமி எனக்கு ஒரு ரூபாய் கொடுங்களேன்’ என்றானாம் ரொம்ப அடக்கமாக. கடவுள் மென்மையாகச் சிரித்துக்கொண்டே, 'ஒரு நிமிஷம் பொறு!’ என்றாராம். அதனால் அவர் இறைவன்!''

- சந்திராசிவபாலன், திருச்சி.

நானே கேள்வி... நானே பதில்

 '' 'எந்தத் தலைவரையும் பார்த்து காங்கிரஸ் பயப்படாது’ என்று சோனியா காந்தி கூறியுள்ளாரே?''

'' 'காங்கிரஸ் இனி பயன்படாது’ என்று மக்கள் எடுத்த முடிவு பற்றி சோனியா காந்தியிடம் பயப்படாமல் சொல்ல யாரும் இல்லையா?''

- டி.செல்வன், நெல்லையப்பபுரம்.

''அதிர்ஷ்டம் ஒரு முறைதான் கதவைத் தட்டும் என்கிறார்களே... அப்படியா?''

''அதிர்ஷ்டம் எப்போதும் கதவைத் தட்டியபடியேதான் இருக்கிறது. மனம் போடும் குழப்பக் கூச்சல்களில், அந்தச் சத்தம் நமது காதுகளில் விழுவது இல்லை. அதுதான் உண்மை!''

- கே.சரஸ்வதி, ஈரோடு.

ல்லோரும் எழுதலாம்! கேள்வியும் பதிலும் உங்களுடையதே. தபாலில் அனுப்பலாம் அல்லது செல்போனில் QA (space) விட்டு உங்கள் கேள்வி-பதிலை 562636 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். செய்யுங்கள்!