Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’நான் ஏன் கவர்ச்சியாக இருக்க வேண்டும்!?’ ‘Kodaikanal' சோபியா அஷ்ரஃப் #ICan'tDoSexy #ViralVideo

சோபியா அஷ்ரஃப்

சோபியா அஷ்ரஃப்  - யூடியூப்பில் கலக்கிக்கொண்டிருக்கும் சென்னையைச் சேர்ந்த பெண்! இளைஞர்களை ஈர்க்கும்  நட்பு, காதல், ஃபேஷன் விஷயங்களை  வீடியோ ஆக்காமல்,  சமூகப் பிரச்னைகளையும் அரசியல் நடப்புகளையும், தனது பாடல் வரிகளில்  அழுத்தமாக பதிவு செய்து, பாடி வீடியோவாக வெளியிட்டு அசத்துபவர்.

2010ஆம் ஆண்டு, ஹிந்துஸ்தான்  யூனிலிவர் நிறுவனத்தின்  பாதரச கழிவுகளை கொட்டும் திட்டத்திற்கு எதிராக பாடிய, “கொடைக்கானல் வோண்ட்” வைரல் ஹிட் அடித்தது மட்டுமல்லாமல், அந்தப் பகுதியில் அமைக்கப்படவிருந்த பாதரச திட்டமும்  கைவிடப்பட்டது. அதன்பிறகு, பெண்களின் அழகியல் கோடப்பாடுகளை உடைக்கும்  ‘சிஸ்டா ஃபரம் தி செளத்’ (Sista from the South) என்ற  வீடியோ சேனலாகட்டும், ஜெயலலிதா இறப்புக்குப் பிறகு சசிகலாவுக்கு எதிராக போயஸ் கார்டன் தெருவில்  இறங்கி பாடியதாகட்டும்... சோபியா  தில்லேடி என்பதை சமூகத்துக்கு தன் சிறப்பான கருத்துக்கள் மூலம் புரியவைத்தார்.   

தற்போது, யூடியூப்பில் வைரலாகிக்கொண்டிருக்கிறது சோஃபியாவின் சமீபத்திய ‘ஐ காண்ட் டூ செக்ஸி’ (I can't do sexy) என்கிற டைட்டில் கொண்ட வீடியோ.  பெண்கள்  எப்போதும் கவர்ச்சியாக இருக்க வேண்டும் என்ற நிர்பந்தத்திற்கு ஏன் தள்ளப்படுகிறார்கள்; அனைத்து பெண்களும் கவர்ச்சியாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பன போன்ற பல  விஷயங்களை நுழைத்து, ஒரு காமெடியான, அதே சமயம், துடிப்பான பெண்ணியத்தை பேசும் வீடியோவாக உருவாக்கப்பட்டிருக்கிறது 

“இந்த பாட்டை நான் ஒரு வருஷம் முன்னாடியே எழுதிட்டேன். நான் காலேஜ் படிக்கும் போதே, நிறைய பொண்ணுங்க  தங்களை கவர்ச்சியா, அழகா காட்டிக்கணும்னு நினைச்சு ரொம்ப மெனக்கிடுவாங்க. அது சில சமயம் அவங்களுக்கு பொருத்தமில்லாம இருக்கும். பல பெண்கள் சோஷியல் மீடியாவுல அவங்களோட புரொபைல் படம் போடுறதுக்காக மேக்கப்புகள் போட்டு செல்பி எடுத்து போடுறாங்க. இத்தனை மெனக்கிடல் தேவையானு எனக்குத் தோணும். நாம நாமளா இருந்தா போதாதா? நான் இப்ப வேலை பார்க்கிற ஆபீஸ்ல ஒரு பொண்ணு இருக்காங்க. அவங்களுக்கு ஏத்த மாதிரியான டீஷர்ட்ல வந்து ஆஃபீஸை அதிர வைப்பாங்க. அது அவங்களுக்கு ஃபிட்டாவும் இருக்கும். ஆனா ''நான் மட்டும்தான் இந்த ஆபீஸ்ல வித்தியாசமா டிரஸ் பண்றேன்''னு ஃபீல் பண்ணுவாங்க. அப்படிப்பட்ட எண்ணமே தேவையில்லைங்கிறதுதான் என்னோட கருத்து" என்றவர் தொடர்ந்து...

''இதெல்லாம் பேசுறதுனால நான் பெண்ணியவாதியானு என்னை பலர் கேட்கிறாங்க. பெண்ணியவாதிகள்னா கல்யாணம், குடும்பம், குழந்தை தவிர்க்கிறவங்க என்கிற ஒரு பிம்பம் நம்ம மக்கள் மனசுல இருக்குது. அப்படியில்ல... சமூகத்துல ஆண்களுக்கு இணையா உரிமை வேணும்னு எதிர்பார்த்து அதுக்காக குரல் கொடுக்கிறவங்கதான் பெண்ணியவாதிகள். அனேகமா நம்ம நாட்டுல பெண்ணியம் பத்தியெல்லாம் பேசுற முதல் தலைமுறை நாமளாதான் இருப்போம். அப்படி  இருக்கும்போது  கவர்ச்சி, அழகு பத்தின  பிம்பத்தை கூட நாமதான் தூக்கி எறியணும். 

இதுவரைக்கும் நான் பண்ணின வீடியோ எல்லாம் சீரியஸா இருக்கும். ஆனா இந்த வீடியோவை காமெடி கலந்து சொல்லியிருக்கோம். பெண்களுக்கு ஹியூமர் சென்ஸ் இல்லைனு நினைச்சுட்டு இருக்காங்க. அந்த எண்ணத்தை உடைக்கிறதுக்காகவே ஹியூமர் கலந்து ஐ காண்ட் டூ செக்ஸி வீடியோவை பண்ணினோம். இதுக்கு உறுதுணையா இருந்த பிளஷ் நிறுவனத்துக்குதான் நன்றி சொல்லணும். என்னோட அடுத்த வீடியோவும், பெண்களை மையப்படுத்திதான்  இருக்கும்..ஆனா செம்ம ஜாலியாக இருக்கும்!” என ‘ஹிண்ட்’ கொடுத்து முடிக்கிறார் சோபியா. 

வி ஆர் வெயிட்டிங், சோபி கண்ணு! 

சோபியாவின்  ‘ஐ காண்ட் டூ செக்ஸி’ வீடியோவை பார்க்க: 

...

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement