ஈரைப் பேனாக்கி, பேனையே பெருமாளாக்கும் மீம் க்ரியேட்டர் ஸ்பெஷல்! | Different type of memes

வெளியிடப்பட்ட நேரம்: 19:32 (21/04/2017)

கடைசி தொடர்பு:19:33 (21/04/2017)

ஈரைப் பேனாக்கி, பேனையே பெருமாளாக்கும் மீம் க்ரியேட்டர் ஸ்பெஷல்!

எந்த ஒரு விஷயத்தையும் ஒரே போட்டோவில் அழகாகப் புரிய வெச்சு சிரிக்க வைக்கிறதுக்குப் பேர்தான் 'மீம்'. மொதல்லே இந்த மீம்னா என்ன? மீம்ல எவ்வளவு வகைகள் இருக்குன்னு ஒரு அலசு அலசுவோமா?

'வாட் இஸ் கால்டு மீம்?'னு கேள்வி கேட்ட உடனேயே 'இன்ஸ்ட்ருமென்ஸ் தட் ரெக்கார்ட்'னு நண்பன் பட ஸ்டைலில் டெஃபனிஷனெல்லாம் கொடுக்க மாட்டேன் பாஸ் பயப்படாதீங்க... சுருக்கமாவே சொல்லிடறேன். ஒரு போட்டோ, இல்லேன்னா ஒரு வீடியோ எடுத்து அதுல மேலோட்டமாகக் கொஞ்சம் வார்த்தைளைத் தூவினால் சுடச் சுட மீம் ரெடி. அந்த வார்த்தைகளும், போட்டோவும் கொஞ்சம் சிரிக்கிற மாதிரியும் சிந்திக்கிற மாதிரியும் இருக்கிறதுக்குப் பேர்தான் பெர்ஃபெக்ட் மீம். இது வந்த புதுசுல இந்த ஐடியாவுலதான் வந்துச்சு. ஆனா நம்ம ஆளுங்கதான் ஈரைப் பேனாக்கி பேனையே பெருமாளாக்கிடுவாய்ங்களே. நினைச்சுக்கூடப் பார்க்க முடியாத அளவுக்கு இப்போல்லாம் மீம் வர ஆரம்பிச்சுடுச்சு. அது ரசிக்கிற மாதிரியும் இருக்கு. அப்படி இவங்க போடும் மீம்ஸ் வகைகள்தான் இது. 

நார்மல் மீம் :

vadivelu memes

இந்த ரகத்தைச் சேர்ந்த மீமை க்ரியேட் செய்வது ரொம்பவே சிம்பிள். ட்ரெண்டில் இருக்கும் விஷயத்துக்குத் தகுந்த மாதிரி ஒரு போட்டோவை எடுத்துக்கணும். அதுக்கு சூட் ஆகுற மாதிரி கலாய் கவுன்டர்களை எடுத்து கீழே அந்த காமெடியின் டயலாக்குகளைப் போட்டால் போதும். மீம் ரெடி. இந்த ரக மீம்களுக்கெல்லாம் வழிகாட்டி நம்ம காமெடி கிங் வடிவேலுதான். இவர் போட்டோ இல்லாத மீம்களைக் பார்க்கவே முடியாது.   

டெம்ப்ளேட் மீம் :

மீம் க்ரியேட்டர்

வார்த்தைகளில் விளையாடி மீம் போட்ட காலம் போய் வெறும் போட்டோக்களை வைத்தே மீம் வரத் தொடங்கிவிட்டது. மீம் க்ரியேட்டர்களுக்கு போர் அடித்துவிட்டதால் இந்த ஆயுதத்தைப் பயன்படுத்தி மீம் போட்டு வருகின்றனர். டெம்ப்ளேட்டுகள் வேண்டுமென்றால் உடனே யூ-டியூப் தான். வெறும் போட்டோக்களை மட்டும் பயன்படுத்திப் போடும் இந்த ரகத்தைச் சேர்ந்த மீம் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும்.

சிங்க் (Sync) மீம் :

க்ரியேட்டர்

இது தெய்வ லெவல் ரகத்தைச் சேர்ந்தது. இந்த வகை வந்த பிறகுதான்  இப்படியெல்லாம் கூட ஒரு ஆளுக்கு யோசனை வருமா எனப் புல்லரிக்க வைத்தது. மேலே சொன்ன டெம்ப்ளேட் மீம் ஒரு போட்டோவுக்கும் இன்னொரு போட்டோவுக்கும் சம்பந்தம் இருக்கும். ஆனால் இந்த டைப் மீம்களில் வரும் போட்டோக்களுக்கு ஒன்றோடு ஒன்று சம்பந்தமே இருக்காது. இரண்டையும் ஒன்றிணைத்து முதலில் இது என்னவாக இருக்கும்? என்று யோசிக்க வைத்து அப்புறம்தான் சிரிக்கவே வைக்கும். திஸ் இஸ் கால்டு சிங்க் மீம்.

க்ரியேட்டிவிட்டி மீம் :

மீம் க்ரியாட்டர்

மேலே சொன்ன மீம்களை கூட நார்மல் மனுஷனே ஏதாவது டியூசன் போய், ட்ரெயினிங்க் எடுத்து மீம் போட்டு விடலாம். ஆனால் இந்த ரகத்தைச் சேர்ந்த மீமை தயாரிப்பவன் கண்டிப்பாக வேற்று கிரகவாசியாகதான் இருப்பான் (!?). ஏனென்றால் அப்படி ஒரு கான்செப்ட் ஒரு மனிதனின் கனவுகளில் கூட ஏற்படாது. இந்த வகை மீம்களுக்கு பெயர்தான் க்ரியேட்டிவிட்டி மீம். நாடி, நரம்பு, ரத்தம், சதை என எல்லாப் பாகங்களிலும் மீம் வெறி ஊறிப்போன ஒரு ஆளால் மட்டும்தான் அப்படியான மீமை உருவாக்க முடியும். 

360 டிகிரி மீம் :

ஃபேஸ்புக்கில் மார்க் ப்ரோ புதிதாக 360 டிகிரி போட்டோக்களைப் பார்க்கும் வசதியினைக் கொண்டு வந்தார். 'அடேய் ஓடுனா மட்டும் விட்ருவோமா'னு வடிவேலு டயலாக் வர்ற மாதிரி அதுலேயும் சேட்டையை ஆரம்பித்துவிட்டனர் நம்ம மீம் க்ரியேட்டர்ஸ். 360 டிகிரி வடிவப் புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் அப்லோடு செய்து கொள்ளலாம். அதில் வடிவேலுவை மையமாக வைத்துப் போட்ட மீம் ஒரு காலத்தில் பயங்கர வைரலாகி வந்தது. 

இப்படியே போய்க்கிட்டு இருந்தா வேலை தேடும் ஆட்களின் ரெஸ்யூம்களில் எக்ஸ்ட்ரா திறமைகள் பகுதியில் 'மீம் க்ரியேட்டர்ஸ்' என்ற ஒன்றும் சேர்ந்துவிடும் போல. ஆல் தி பெஸ்ட் பாய்ஸ்!


டிரெண்டிங் @ விகடன்