வெளியிடப்பட்ட நேரம்: 10:45 (22/04/2017)

கடைசி தொடர்பு:10:41 (22/04/2017)

ஃபேஸ்புக்குல அடுத்த 15 நாளைக்கு இதெல்லாம் பார்த்தே ஆகணும்!

அப்பப்போ ட்ரெண்டிங்கில் இருக்குற நியூஸை வச்சு கம்பு சுத்துறதுதான் சோசியல்மீடியா மக்களின் வழக்கமான வேலை. சிலநேரம் டாபிக்கே ஏதும்கிடைக்கலையேன்னு இருக்கும் போதுதான் காலண்டர் கைகொடுக்கும். டெம்ப்ளேட்டாகவே சிக்குற எதையாவது வச்சு பேச ஆரம்பிச்சுருவாங்க. அந்தமாதிரி அடுத்த 15 நாளைக்கு சோசியல் மீடியாவுல இந்த டாபிக்குகளைலாம் பாத்து ஸ்க்ரோல் பண்ணித்தான் நீங்க போவீங்க. அதெல்லாம் என்னன்னனு பாக்கலாமா...

ஃபேஸ்புக்

மொட்டைமாடியில் தண்ணி வையுங்கள்...

வெயில்காலம் ஆரம்பிச்சுட்டாலே இந்த போஸ்ட்டும் எல்லார் பேஜ்லேயும் சுத்த ஆரம்பிச்சிடும். அதாவது வெயில் அதிகமா இருக்குறதால பறவைகள் தண்ணிக்காக அலையுமாம். அதனால் மொட்டைமாடியில ஒரு கிண்ணத்துல தண்ணி வச்சீங்கன்னா அது குடிச்சு தாகத்தைப் போக்கிக்கும்னு ஃபார்வடு மெசேஜஸ் பறக்கும். சரி நல்ல விசயம் தான்; ஆனா சொல்லுற எத்தனை பேர் சரியாக அதை ஃபாலோ பண்றாங்கங்கிறதுதான் கேள்வி.

 

அஜீத்


தலடாவ்வ்வ்வ்...


உழைப்பாளர்தினம்கிறது காலம்காலமா தான் கொண்டாடிக்கிட்டு இருக்குறாங்க. ஆனா மே 1ந்தேதியில எங்க தல அஜீத் பொறந்ததாலதான் உழைப்பாளர்தினம்னே பேர் வந்ததுங்கிற ரேஞ்சுல வாயில வந்ததைலாம் அள்ளிவிடுவாங்க சில அஜீத் ஃபேன்ஸ். அதுலேயும் சிலபேர் அஜீத் பிறந்த நாளைக்காத்தான் லீவே விடுறாங்கங்கிறது நம்மில் எத்தனை பேருக்குத்தெரியும்கிறமாதிரிலாம் பேசுவாங்க. தனியாக சினிமாவுல ஜெயிச்சவர் எங்க தல னு அஜீத் ரசிகர்கள் பொங்க ஓ... அதுவரைக்கும் வெயிட்டிங் மோடுல இருக்குற விஜய் ரசிகர்கள் அப்படின்னா  எடிட்டிங், லைட்டிங், டைரக்சன் எல்லாமே அவரேதான் பாத்துக்கிட்டாரான்னு பதிலுக்கு  டயலாக் பேச ஒரே ரணகளமாக இருக்கும் இந்த மே 1.

இயற்கை குளிர்பானங்கள்...

வெளிநாட்டுக் குளிர்பானங்களை ஏன் குடிக்கவேண்டும் தமிழன் கண்டுபிடித்து வைத்த எத்தனையோ குளிர்பானங்கள் இருக்கிறதுன்னு இருக்குற சூட்டுல இன்னும் கொஞ்சம் கொளுத்திப்போடுவாங்க. நுங்கு தெரியுமான்னு ஆரம்பிச்சு நன்னாரி தெரியுமா நன்னாரிங்கிற வரைக்கும் ஒவ்வொண்ணா விளக்கம் கொடுப்பாங்க. வெளிநாட்டுக் குளிர்பானங்களைக்குடிக்காதீங்கன்னு எல்லாருமே சொல்லுவாங்க ஆனா யார்தான் அப்போ ஃபாரீன் குளிர்பானங்களைலாம் குடிக்கிறாங்கன்னுதான் தெரியவே தெரியாது. அதைவிடுங்க, தமிழனின் குளிர்பானங்களைக்குடிப்போம்னு சொல்லிட்டு ரெண்டாவது நாளே ட்ரிங்கிக் ஜிகர்தண்டா வித் ஜிம்மி  ஈட்டிங் ஃபலூடா வித் பப்லு ன்னுலாம் ஸ்டேட்டஸ் போடுவாங்க பாருங்க.. ஸ்ஸ்ஸ்..

சச்சின்

சச்சின் சச்சின்...

அப்புறம் இருக்கவே இருக்குது சச்சின் பொறந்தநாள். பலபேர் பலவிதமா வாழ்த்துவாங்க. அவரோட படம் வேற இந்த வருடம் ரிலீஸ் ஆகுது. பொறந்தநாள்னா சச்சினை வாழ்த்த மட்டும்தான் செய்யணுமான்னு  சில கங்குலி, தோனி ரசிகர்கள் லாம் விமர்சனக் களத்துல இறங்குவாங்க. இவங்க ஒண்ணு சொல்ல அவங்க ஒண்ணு சொல்ல அப்புறம் என்ன சச்சின் ரசிகர்கள் அடி அடின்னு அவங்களைலாம் அடிச்சு துவைச்சு அப்படியே அடுத்த நாள் வந்துடும். அப்புறமா வேற டாபிக்குக்குள்ல ரெண்டு க்ரூப்பும் அதை கன்டினியூ பண்ண ஆரம்பிச்சுடுவாங்க.


அக்‌ஷய திரிதியை...

இதைச்சொல்லலைனா எப்படி அக்ஷயதிரிதியை அன்னைக்கு எந்தப்பொருள் வாங்குனாலும் செல்வம் சேரும் சேமிப்பு பெருகும்னு ஒரு க்ரூப் கிளம்பும் .இது நகைக்கடைக்காரங்க வியாபாரத்துக்காக கிளப்பிவிட்ட வியாபார யுக்தின்னு இன்னொரு க்ரூப் கிளம்பும். அப்புறம் என்ன ஒரே கூத்துதான் கும்மாளம்தான். காலையில கடையில சாமான் வாங்கிட்டு வந்த க்ரூப்பும் அதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறமாதிரி சண்டைபோடும் சாயங்காலம்பர்ச்சேஸ் பண்ணப்போற க்ரூப்பும் காலையில் இருந்து இதைக்கிண்டல் பண்ணுறமாதிரி ஆக்ட் பண்ணும்கிறதுதான் இதுல ஹைலைட். இந்த லிஸ்ட்டுல இன்னும் சில விஷயங்கள் லாம் இருக்குது. அதைலாம் நேரடியா நீங்களே லாகின் பண்ணித்தெரிஞ்சுக்கங்க மக்களே.


- ஜெ.வி.பிரவீன்குமார்


டிரெண்டிங் @ விகடன்