தெர்மாகோல் புகழ் செல்லூர் ராஜுவுக்கு ஐடியா கொடுக்க நீங்க ரெடியா..? | Funny Ideas For Sellur Raju

வெளியிடப்பட்ட நேரம்: 16:02 (23/04/2017)

கடைசி தொடர்பு:16:01 (23/04/2017)

தெர்மாகோல் புகழ் செல்லூர் ராஜுவுக்கு ஐடியா கொடுக்க நீங்க ரெடியா..?

மைச்சர் செல்லூர் ராஜுவுக்கு ஐடியா சொல்ல நீங்க ரெடியா..? 

இதோ சில முத்தான சில யோசனைகள்...

 * கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டச் செயலாளராக செல்லூர் ராஜுவை நியமிக்கலாம். அவர், கடல் நீர் ஆவியாவதைத் தடுக்க குடை பிடிக்கும் திட்டத்தைக் கொண்டு வர மாட்டாரா என்ன..?

* நாஸா விஞ்ஞானிகளால் கூட தீர்க்க முடியாத ஓசோனில் விழுந்த ஓட்டையை செல்லோ டேப் வைத்து ஒட்டியோ அல்லது கார்க் வைத்து கட்டியோ அடைத்து விட மாட்டாரா என்ன?

* ராட்சஷ குளிர் கண்ணாடி ஒன்றை வாங்கி சுட்டி டிவி லோகோ போல சூரியனுக்கே மாட்டிவிடும் யோசனையை மட்ட மத்தியானத்தில் கறிக்குழம்பை சாப்பிட்டுவிட்டு தூங்கியபோது அவர் சிந்தனையில் உதிக்க வாய்ப்பிருக்கிறது என்பது நம்மில் எத்தனைப்பேருக்குத் தெரியும்? 

செல்லூர் ராஜு

* என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்... ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்?' என எம்.ஜி.ஆர் பாடிய கருத்தை கச்சிதமாக மனதில் கவ்விக் கொண்ட அமைச்சர் அடுத்து பெட்ரோல் டீசலுக்காக ஏன் வளைகுடா நாடுகளின் முன் கையேந்தி நிற்க வேண்டும் என யோசித்திருக்க்க மாட்டாரா? அதன் விளைவாக இப்போது வங்காள விரிகுடாவுக்குள் இருந்து பைப் போட்டு ஆயில் எடுக்கும் மகோன்னத திட்டத்தையும் மனதில் வைத்திருக்கிறார் செல்லோடேப் ராஜு. 

* தமிழகமே தர்பூஸ் கடையின் முன்னும் கரும்பு ஜூஸ் கடையின் முன்னும் தேவுடு காத்து நிற்கும் இந்த வேளையில் வெயிலின் உக்கிரத்தைத் தணிக்க தடா பார்டரிலிருந்து கன்னியாகுமரி பார்டர் புரோட்டாக்கடைவரை  தமிழகம் முழுவதும் பந்தல் போடும் திட்டத்தையும் யோசனையில் வைத்திருக்கிறாராம். 

* ஆற்றுநீர் கடலில் கலந்தால் தானே உப்பாகும்...அது தப்பாகும்? வாட்டர் பாட்டிலில் பிடித்து வைத்துவிட்டால்..? எப்பூடி செம ஐடியால்ல..?

* அனல்காற்றைத் தடுக்க ஆந்திரா கர்நாடகா, கேரளா எல்லைகளில் ராட்சஷ ஏ/சி மெஷின்களை மூன்று மூலைகளிலும் வைத்து விட்டால் குளிர் காற்று வங்காள விரிகுடாவரை வீசாதா என்ன..? 

செல்லூர் ராஜு

* எல்லோரும் வீட்டிலிருந்து தலை துவட்டாமல் ஈரத்தலையோடு அருகிலுள்ள நீர்த்தேக்கத்துக்கு வந்து, மொத்தமாய் ஈரத்துண்டை கரையோரத்தில் பிழிந்தால் அரை டி.எம்.சி-யாவது ஏறும் என்ற யோசனையையும் வைத்திருக்கிறாராம். 

* `கானல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம்' பற்றி ஸ்வீடனில் இருக்கும் தன் நண்பர் ஒருவரின் மூலம் தெரிந்து கொண்டு அதை செயல்படுத்தப்போகிறாராம்!

* வீட்டில் இருசக்கரம், நான்கு சக்கர வாகனம் இருக்கிறதோ இல்லையோ மூன்று சக்கர வாகனமான குல்ஃபி ஐஸ் வண்டியை அவசியம் வைத்திருக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கலாம். இதன்மூலம் தமிழ்நாட்டே குளிர்ச்சியோடும், மலர்ச்சியோடும் இருக்கும். குல்ஃபியில் பாதாம் பிஸ்தா என கலந்து கட்டித் தந்தால் மக்கள் கவலைகள் மறந்து அ.தி.மு.க ஆட்சியை புகழ்ந்து தள்ளுவார்கள். 

தெர்மாகோல்

* எதுவுமே வேலைக்கு ஆகலையா..? வைகையை அணையையே அப்படியே பெயர்த்து எடுத்து டிப்பர் லாரிகளில் வைத்து காஷ்மீரில் வைத்து விட்டால் ஆவியாவது பூதமாவது? `வை கையில் கை வை'த்தால் ஜில்லுனு இருக்கும் என்பதும் அவர் யோசனை மஞ்சு வான்டுதேன்! ஏன்னா, டிஸ்டன்ஸ் தானே இங்கே பிராப்ளம்! 

- மக்களே... இதுபோன்ற ரணகளமான... முத்தான யோசனைகளோடு இருக்கும் அமைச்சர் செல்லூர் ராஜுவின் முயற்சிக்கு வலு சேர்க்கும் பொருட்டு உங்களுக்குத் தோன்றும் யோசனைகளையும் கமெண்ட்டில் பதிவு செய்தால் அதை அவருக்கு ஃபார்வர்டு செய்கிறோம். நன்றி! 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close