வெளியிடப்பட்ட நேரம்: 11:22 (24/04/2017)

கடைசி தொடர்பு:06:50 (25/04/2017)

ரஜினி இந்திய ஜனாதிபதியானால், இதெல்லாம்தான் நடக்கும்!

யார் கிளப்பிவிட்டதுன்னு தெரியலை ரஜினிகாந்த் பெயர்  குடியரசுத்தலைவர் பதவிக்கான பரிந்துரை பட்டியல்ல இருக்குதாமேங்கிறதுதான் ஹாட் டாபிக்கா ஓடிக்கிட்டு இருக்குது. சரி ஒருவேளை அப்படி ஆயிட்டார்னா என்னெல்லாம் நடக்கும்னு சும்மா ஒரு ஜாலிக்கோ ஜிம்கானா கற்பனை பண்ணலாமா பாஸு...

* வருங்கால முதல்வர் வருங்கால பிரதமர்னுலாம் கூவிக்கிட்டு இருந்த ரஜினியின் ரத்தத்தின் ரத்தங்கள் எல்லாம் இப்போ குடியரசுத்தலைவரே ஆயிட்டாருங்கிறதால அடுத்த இலக்கு இனி அமெரிக்காதான்னு ஒரு படி மேலே போயி 'வருங்கால ஐ.நா சபை தலைவர் ரஜினிகாந்த்'னு கூவ ஆரம்பிப்பார்கள்.

* டெண்ட் கொட்டகை முதல் அல்ட்ரா மாடர்ன் தியேட்டர் வரைக்கும் பலாபிசேகம் டூ  பீர் அபிசேகம், வால் போஸ்டர்ஸ் டூ பிளக்ஸ் பேனர்னு சீரும் சிறப்புமாகப் பண்ணிக்கிட்டு இருந்த ரசிகர்கள் இனி வரும் ரஜினி படங்களுக்கு ஜனாதிபதி மாளிகை வாசலிலேயே பேனர் வைக்க வாய்ப்புள்ளது.

ரஜினி

* ஐ.நா சபையிலேயே போய் ஐஸ்வர்யா பரதநாட்டியம் ஆடிவிட்டதால் ஜனாதிபதியாக ரஜினி பதவி ஏற்கும் விழாவிலும் அவர் ஆடுவார் என எதிர்பார்க்கலாம். அட்லீஸ்ட் தங்கச்சிக்கு விட்டுக்கொடுத்து செளந்தர்யா கூட இந்தமுறை நாட்டியம் ஆட வாய்ப்பிருக்கிறது மக்களே..

* ரஜினியே ஜனாதிபதி ஆயிட்டா இந்த தனுஷ் ரசிகர்கள் சும்மா இருப்பாங்களா என்ன. 'வருங்கால முதல்வர் தங்க மகன் தனுஷ்'னு அவரது பேனருக்கு பக்கத்துலேயே இவரது பேனரையும் வைத்து பேலன்ஸ் செய்வார்கள்.

* தமிழ்நாட்டுல இருந்தே அடிக்கடி இமயமலைக்குப்போன ரஜினிகாந்த், இப்ப டெல்லிக்கே போவதால் உசிலம்பட்டிக்கு பஸ்ஸுல போயிட்டு வர்றதுமாதிரி இனி அடிக்கடி பக்கத்தில் இருக்கும் இமயமலைக்குச் சென்றுவர அதிகமானவாய்ப்பு இருக்கின்றது.

* பஞ்ச் பேசுவதற்கென்றே தமிழ்சினிமாவுக்கு தாரைவார்த்துக்கொடுக்கப்பட்ட ரஜினி அங்கே மட்டும் சும்மா இருப்பாரா என்ன... 'எத்தனையோ நடிகர்கள் க்ரோர்பதியா இருக்கலாம்; ஆனா சிலபேர்தான் ஜனாதிபதி ஆகலாம்', 'அல்லோபதி.. ஹோமியோபதி.. டெலிபதி.. நான்தான் இப்போ ஜனாதிபதி' நல்லவங்களுக்கு ஆண்டவன் முதல்வர் போஸ்டிங் கொடுப்பான், ரொம்ப நல்லவங்களுக்கு ஜனாதிபதி போஸ்டிங்கே கொடுப்பான்... எச்சச்ச கச்சச்ச கச்சச்சா...' னு வாயில் வந்த எதையாவது பஞ்ச் டயலாக்காக அடித்துப் பால் காய்ச்சலாம்.

* வழக்கமாக ஏதாவது விழா என்றாலே குட்டிக்கதை சொல்லும் ரஜினிகாந்த் இங்கேயும் ஏதாவது குட்டிக்கதைகளை அவிழ்த்துவிடலாம். கதையே கிடைக்கவில்லை என்றாலும் அட்லீஸ்ட் அவரது மருமகன் தனுஷ் நடித்த 'குட்டி' படத்துக் கதையையாவது சொல்லி மேனேஜ் செய்வார்  என எதிர்பார்க்கலாம்.


டிரெண்டிங் @ விகடன்