Published:Updated:

இயக்குநர் கே.விஸ்வநாத்துக்கு 'தாதா சாகேப் பால்கே' விருது

இயக்குநர் கே.விஸ்வநாத்துக்கு  'தாதா சாகேப் பால்கே' விருது
இயக்குநர் கே.விஸ்வநாத்துக்கு 'தாதா சாகேப் பால்கே' விருது

பிரபல இயக்குநரும், நடிகருமான கே.விஸ்வநாத்துக்கு, 2016-ம் ஆண்டுக்கான 'தாதா சாகேப் பால்கே' விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் கே.விஸ்வநாத்துக்கு  'தாதா சாகேப் பால்கே' விருது

இந்திய திரையுலகின் உயரிய விருதாக கருதப்படுகிறது 'தாதா சாகேப் பால்கே' விருது. 2016-ம் ஆண்டுக்கான இந்த விருதை பழம்பெரும் இயக்குநர் கே.விஸ்வநாத் பெறுகிறார். அவருக்கு வயது 87. தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் என தனது தனித்துவ படங்கள் மூலம் தடம் பதித்தவர் விஸ்வநாத். சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து, சங்கராபரணம் உட்பட பல வெற்றிப் படங்களை இயக்கியவர். 'குருதிப்புனல்', 'யாரடி நீ மோகினி', 'உத்தம வில்லன்' உட்பட பல தமிழ்ப் படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் கே.விஸ்வநாத். 

1965 முதல் சுமார் 50-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார் விஸ்வநாத். பத்மஶ்ரீ விருது, ஐந்து தேசிய விருதுகள், ஃபிலிம் ஃபேர் விருதுகள், 20-க்கும் மேற்பட்ட நந்தி விருதுகளை குவித்துள்ளார் இவர். விஸ்வநாத்தின் இயக்கத்தில் சங்கராபரணம் (1979), சாகர சங்கமம் (1983) ஆகியவை சிறந்த திரைப்படங்களின் வரிசையில் இடம்பெற்றுள்ளது.