வெளியிடப்பட்ட நேரம்: 18:43 (26/04/2017)

கடைசி தொடர்பு:15:59 (25/04/2017)

டிஸ்ப்ளே பிக்சர் தரம் குறைகிறதா? இப்படி அப்லோடு செய்து பாருங்கள்! #FacebookTips

ஃபேஸ்புக்கில் ப்ரொஃபைல் படத்தை மாற்றுவதற்காக அரை நாள் முழுக்க போஸ் கொடுத்து, ஃபில்டர்களில் முக்கியெடுத்து புகைப்படங்களை எடிட் செய்திருப்போம். ஆனால் ஃபேஸ்புக்கில் அவற்றை அப்லோடு செய்தபின், பிக்சல் உடைந்து சுமார் மூஞ்சி குமாராக நாம் தெரிவோம். இப்படி ஆகாமல் ஃபேஸ்புக்கில் தெளிவான தரத்தில் புகைப்படங்களை அப்லோடு செய்ய சில வழிகள் உள்ளன.

 

ஃபேஸ்புக் கம்ப்ரெஸ் :

Tips to upload HD Photos in Facebook

ஃபேஸ்புக்கில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 350 மில்லியன் புகைப்படங்கள் அப்லோடு செய்யப்படுவதாக அந்நிறுவனம் தெரிவிக்கிறது. இவை அனைத்தும் ஒரிஜினல் அளவில் அப்லோடு செய்யப்பட்டால் சர்வரில் லோடு அதிகமாகி, ஃபேஸ்புக் தளமானது செயலிழந்துவிடும். எனவே, ஃபேஸ்புக் ஒவ்வொரு புகைப்படத்தின் அளவையும் குறைத்து, தானாகவே அவற்றை கம்ப்ரெஸ் செய்துகொள்ளும். புகைப்படங்களின் அளவு கம்ப்ரெஸ் செய்யப்படுவதால்தான், எவ்வளவு தெளிவான புகைப்படங்களும், அதிக சைஸ் கொண்ட ஃபைல்களும் கூட தரம் குறைந்தது மாதிரிக் காட்சியளிக்கின்றன.

720, 920 மற்றும் 2048 ஆகிய பிக்சல் அளவுகளில் தான் ஃபேஸ்புக் புகைப்படங்களின் அளவை மாற்றி அப்லோடு செய்கிறது. கவர் ஃபோட்டோவைப் பொறுத்தவரை 851 x 315 என்ற பிக்சல் அளவில் மட்டும்தான் ஃபேஸ்புக் அப்லோடு செய்ய அனுமதிக்கிறது. எனவே, நாம் அப்லோடு செய்ய விரும்பும் புகைப்படங்களை இந்த ஃபார்மட்டிலேயே எடிட் செய்து, 'சேவ்' செய்துகொள்ள வேண்டும். இந்த ஃபார்மட்களில் அப்லோடு செய்யும்போது பொதுவாக புகைப்படங்களின் பிக்சல் உடையாது. எனவே இனி புகைப்படங்களின் அளவை இதற்கேற்ப மாற்றிப் பின் அப்லோடு செய்யுங்கள்.

ஃபேஸ்புக்கில் கவர் ஃபோட்டோவை அப்லோடு செய்யும்போது, 851 x 315 என்ற பிக்சல் அளவில் தான் புகைப்படங்கள் அப்லோடு ஆகும். இதன் அளவானது கிலோ பைட்களில் தான் இருக்கும். அப்லோடு செய்ய விரும்பும் கவர் புகைப்படத்தின் அளவை 100 KB-க்கு அதிகம் இல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். இப்படிச் செய்வதன் மூலம், புகைப்படங்கள் கம்ப்ரெஸ் ஆகாமல் பார்த்துக் கொள்ளலாம்.


பிரவுசர் :

ஃபேஸ்புக் பிரவுசர்

நீங்கள் பிரவுசரில் ஃபேஸ்புக் பயன்படுத்தினால், வழக்கமாக ஸ்டேட்டஸ் எழுதும் இடத்தின் கீழே இருக்கும் 'Photo/Video' ஆப்ஷன் மூலமாகப் புகைப்படங்களை அப்லோடு செய்வதற்குப் பதிலாக, 'Photo/Video Album' ஆப்ஷன் வழியாகப் புகைப்படங்களை அப்லோடு செய்யுங்கள். மேலே உள்ள படத்தில் இருப்பது போன்ற திரை தோன்றும். அதில் More Options என்பதன் கீழ், 'High Quality' என்பதை டிக் செய்து தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இப்போது, புகைப்படங்கள் அப்லோடு ஆக கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்ளும் என்றாலும், நல்ல தரத்தில் புகைப்படங்கள் அப்லோடு ஆகும்.

 

அப்ளிகேஷன் :

ஃபேஸ்புக் அப்ளிகேஷன்

நீங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் ஃபேஸ்புக் அப்ளிகேஷனைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், Menu-வை கிளிக் செய்து, App Settings செல்லுங்கள். அதில் 'Upload HD Photos' என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இனி அப்ளிகேஷன் மூலமாகப் புகைப்படங்களை அப்லோடு செய்யும்போதும், தரம் குறையாமல் புகைப்படங்கள் அப்லோடு ஆகும்.

ஐபோன் ஃபேஸ்புக் அப்ளிகேஷனில் தரமான புகைப்படங்களை அப்லோடு செய்ய, Facebook Account settings சென்று, Videos and photos என்ற மெனுவில், 'Upload HD' என்ற ஆப்ஷனைத் தேர்வு செய்ய வேண்டும்.

ஃபேஸ்புக் மெசெஞ்சர் அப்ளிகேஷன் மூலம் பேமன்ட் செய்யும் வசதியே வந்துவிட்டாலும், அடிப்படை வசதிகளைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க