கோடை சுற்றுலா செல்லுமுன், இதைப் படித்துவிட்டுச் செல்லுங்கள்! #TravelTips | Follow these tips to make sure your travel is awesome

வெளியிடப்பட்ட நேரம்: 07:13 (30/04/2017)

கடைசி தொடர்பு:07:11 (30/04/2017)

கோடை சுற்றுலா செல்லுமுன், இதைப் படித்துவிட்டுச் செல்லுங்கள்! #TravelTips

கோடை விடுமுறையைக் குதூகலத்துடன் கொண்டாடக் கிளம்பிவிட்டீர்களா..?

முதல்முறையாகப் பயணம் செய்பவராக இருந்தாலும் சரி, நூறாவது முறையாகப் பயணம் செய்பவராக இருந்தாலும் சரி, பயணத்தின்போது எடுத்துச் செல்லவேண்டியவை எவை, அதற்கு முன்பு வீட்டில் சரிபார்க்கவேண்டியவை எவை என்பதைத் தெளிவாக நினைவில்கொண்டு அனைத்தையும் செய்துவிட்டுச் செல்வது சிறிது கடினம்தான். இந்த வேலையைச் சுலபமாக்கவே இந்த  அல்ட்டிமேட் செக் லிஸ்ட்...

தேவையான ஆவணங்கள்:

-பாஸ்போர்ட்/ விசா
-அரசு அங்கீகாரம்பெற்ற அடையாள அட்டை
-மாணவச் சலுகைகளைப் பெறுகிறீர்கள் என்றால், மாணவ அடையாள அட்டை
-ஹோட்டல் முன்பதிவு செய்திருக்கிறீர்கள் என்றால், அதற்குரிய ஆவணங்கள்
-பணம் / கிரெடிட் கார்டுகள்
-மருத்துவக் காப்பீடு ஆவணங்கள்
-பயணக் காப்பீடு ஆவணங்கள்
-போக்குவரத்து முன்பதிவு ஆவணங்கள்
-அவசர உதவி எண்கள் கொண்ட அட்டை
-பயணச்சீட்டுகள்
 

பயணம்

இவை தவிர உங்கள் பாஸ்போர்ட் மற்றும் அடையாள அட்டைகள் காலாவதியாகாமல் இருக்கின்றனவா என்பதை சரிபார்ப்பது மிகவும் அவசியம். உங்கள் வங்கியிடம் நீங்கள் வெளியூர் செல்கிறீர்கள் என்பதை முன்பே தெரிவித்துவிட்டுச் சென்றால், தேவையானபோது உங்கள் வங்கிக்கணக்கை அவர்கள் முடக்க உதவுவார்கள். மேல் கூறப்பட்ட அனைத்து ஆவணங்களையும் உங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பிக்கொள்ளுங்கள். தேவையானபோது கையில் இல்லை என்றாலும், பிரின்ட் எடுத்துப் பயன்படுத்தலாம். இதைத் தவிர அவரவர் செல்லும் ஊருக்கு ஏற்றார்போல தேவைப்படும் ஆவணங்களை எடுத்துச்செல்ல வேண்டும்.

கைப்பையில் இருக்கவேண்டிய அத்தியாவசிய பொருள்கள்:

மொபைல் போன், சார்ஜர், ஹெட்போன்ஸ், ஐபேட், டேப்லட்

அவற்றிற்குத் தேவையான சார்ஜர் 

கேமரா, சார்ஜர், மெமரி கார்டு.

நீங்கள் எடுத்துச் செல்லும் ஹெட்போன்ஸ் `நாய்ஸ் கேன்சலேஷன்' வசதிகொண்டவையாக இருந்தால் சிறப்பு
 

பயணத்துக்கான அவசிய பொருள்கள்:

Air Pillow,  போர்வை, இயர் பிளெக்ஸ், (காது அடைத்தால் உபயோகிக்க) புத்தகங்கள்

 பயணத்தைப் பற்றி எழுதிவைக்க ஒரு நோட்டுப்புத்தகம், பேனா,

பயணத்தில் பயன்படுத்தும் முகவரிகள் 

தொலைபேசி எண்கள், விசிடிங் கார்டுகள். (சில இடங்களில் தேவைப்படும் என நினைத்தால்)

 

பயணம்

உடல்நலம்:

கை சுத்திகரிப்பு செய்ய திரவம், மருத்துவரின் சீட்டு (சில நாடுகளில் மருந்து வாங்க இது அவசியம்)
மருந்துகள் மற்றும் முதலுதவிக்குத் தேவையான பொருள்கள். 

உங்கள் பிரதான பையைத் தேர்ந்தெடுத்தல்:

பயணம் செய்வது எந்த ஊராக இருந்தாலும், எந்த நாடாக இருந்தாலும், உங்களின் பிரதான பை அனைத்துக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும். கனம் குறைந்த பையைத் தேர்வுசெய்யுங்கள். கனம் குறைவாக இருந்தாலும் நிறைய பொருள்களை தாங்கும் அளவுக்கு இருக்க வேண்டும். உருட்டிச் செல்ல சக்கரங்கள்கொண்ட பையைத் தேர்வுசெய்வது அவசியம்.

 

உங்கள் பிரதான பையில் இருக்க வேண்டியவை,

சட்டைகள்/ பேன்ட்டுகள் 
மாற்று செருப்பு, ஷூ 
ஸ்வெட்டர்/ கம்பளி 
டி ஷர்ட்டுகள்/ ட்ராக் பேன்ட்டுகள் 
பெல்ட்/ சூரிய ஒளி கண்ணாடி 
உள்ளாடைகள் 
நகை / அணிகலன்கள் 

உங்கள் பொருள்களை அடுக்குதல் 

பல ஊர்களுக்குச் செல்லும்போது பல  பொருள்களை  அடுக்கும்  தேவை ஏற்படும். அப்போதுதான்  உங்களின் ‘ஆர்கனைசிங் ஸ்கில்’ வெளிப்பட வேண்டும். சிறிய பையில் நிறையப் பொருள்களை அடக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அடுக்கும்போது  தேவைக்கு ஏற்றார்போல அடுக்க வேண்டும். எந்தப் பயணமாக இருந்தாலும் முதலில் ரயில் அல்லது பேருந்து மூலம்தான் பயணிக்கவேண்டியிருக்கும். அதற்குத் தேவையான பொருள்கள் எளிதில் எடுக்கும் வகையில் இருக்க வேண்டும். மேலும், பேக்கிங் ஆர்கனைஸர்கள்' என்று கூறப்படும் சிறு சிறு பெட்டிகளைப் பயன்படுத்தி தேவையான பொருள்களை சரியான முறையில் அடுக்கலாம். ஆடை அலங்காரப் பொருள்களை கைக்கு எட்டும் தூரத்தில் வைக்க வேண்டும். தேவையில்லாத பொருள்களைச் சேர்த்து இடத்தை வீணாக்க கூடாது. அதே சமயம் முக்கியமானவற்றை விட்டுவிடவும் கூடாது.

உங்களுக்கு தேவைப்படும் பொருள்கள்  

பற்பசை/ பல் துலக்கி/ மவுத் வாஷ் 
கண்டிஷனர்/ ஷாம்பு 
ஒப்பனைக்குத் தேவையான பொருள்கள் 
சூரிய திரை 
உதட்டுத் தைலம் 
பெண்ணிய சுகாதார பொருள்கள் 
முகம் பார்க்கும் கண்ணாடி 
க்ஷேவ் செய்ய தேவையானவை 
டிஷூ பேப்பர் 
நகம் வெட்ட நெயில் கட்டர் 
          
பயணப் பாதுகாப்புக்குத் தேவையானவை 

நாம் செல்லும் ஊரோ நாடோ எவ்வளவு பாதுகாப்பானது என்பது பற்றிய தகவல் நமக்கு சரியாக வந்து சேர்வது கடினம். எனவே, அனைத்துவிதமான பாதுகாப்புடன் செல்வது அவசியம். விலை உயர்ந்த பொருள்களை உங்கள் அருகிலேயே வைத்துக்கொள்ளுங்கள். பயணத்துக்குத் தேர்ந்தெடுக்கும் பேருந்து, கார் ஆகியவை பாதுகாப்பானதா என்பதை, தெரிந்தவர்களிடம் கேட்டு அறிந்துகொள்வது அவசியம். 

வீட்டில் செய்துவிட்டுச் செல்லவேண்டியவை 

தபால்காரர் மற்றும் செய்தித்தாள் போடுபவரிடம் கூறிவிட்டுச் செல்ல வேண்டும்        
செல்லப்பிராணிகள், தோட்டம் பராமரிப்பு 
நிலுவைகளை எல்லாம் கட்டிவிட்டுச் செல்ல வேண்டும் 
குழந்தைகளின் பள்ளிகளில் தெரிவித்தல் 
குளிர்சாதனப்பெட்டியைத் தயார் செய்தல் 
வீட்டின் அனைத்து மின் சாதனங்களையும் அணைக்க வேண்டும் 
குழாய்களைச் சரியாக அடைக்க வேண்டும் 
வீட்டின் பிரதான மின் இணைப்பை அணைப்பது 
விலை உயர்ந்த பொருள்களைப் பாதுகாப்பாக வைத்தல் 
சாவியைப் பாதுகாப்பாக வைத்தல் 
சமையல் எரிவாயுவை அணைத்தல் 

அருகிலுள்ள காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டியதும் அவசியம்.  

இது போன்ற பல டிப்ஸ்கள் உள்ளன.... 

இந்த கட்டுரையை புக்மார்க் செய்துகொள்ளுங்கள். அடுத்த பயணத்தின்போது அவசியம்  தேவைப்படும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்