Published:Updated:

’இன்னும் ஐந்து ஆண்டுகளில்...’ பதஞ்சலி பாபா ராம்தேவின் சவால்!

’இன்னும் ஐந்து ஆண்டுகளில்...’ பதஞ்சலி பாபா ராம்தேவின் சவால்!
’இன்னும் ஐந்து ஆண்டுகளில்...’ பதஞ்சலி பாபா ராம்தேவின் சவால்!

’இன்னும் ஐந்து ஆண்டுகளில்... பதஞ்சலி தயாரிப்புகள் வெளிநாட்டு நிறுவனங்களை நாட்டைவிட்டே ஓடவைக்கும்’ என, பதஞ்சலி தயாரிப்புகளின் நிறுவனர், பாபா ராம்தேவ் சவால் விடுத்துள்ளார்.

’இன்னும் ஐந்து ஆண்டுகளில்...’ பதஞ்சலி பாபா ராம்தேவின் சவால்!

பன்னாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளே இந்தியச் சந்தைகளை அதிகமாக ஆக்கிரமித்திருக்கிறது எனக் கூறும் பாபா ராம்தேவ், விரைவில் இந்த நிலை மாறும் எனக் கூறியுள்ளார். நேற்று, உத்தரப்பிரதேசத்திலுள்ள சஹாரன்பூர் மாவட்டத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்டவர், பதஞ்சலி பொருள்களின் முன்னேற்றம் குறித்தும் பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‘அடுத்த ஐந்து ஆண்டுகளில் பன்னாட்டு நிறுவனங்களை நாட்டைவிட்டே பதஞ்சலி விரட்டும்’ என உறுதியுடன் சவால் விடுப்பதாகக் கூறினார்.

மேலும், ‘கிழக்கு இந்தியக் கம்பெனி வியாபாரம்மூலம் நாட்டைக் கொள்ளையடித்தது போல, இன்றுவரை பன்னாட்டு நிறுவனங்கள் நம் நாட்டை ஆக்கிரமித்துள்ளன. அவற்றை வெளியேற்ற வேண்டும்’ என்றார். அதுமட்டுமல்லாமல், ‘இனி வரும் காலங்களில் புதிதாக அறிமுகமாகும் தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்குப் பயிற்றுவித்து, உற்பத்தியைப் பெருக்கி, பொருள்களுக்கு ஏற்ற சரியான விலையை அவர்களுக்கு அளித்து ஊக்குவிப்போம்’ என்றும் பதஞ்சலி பாபா ராம்தேவ் தெரிவித்தார்.