Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘எதை விதைத்தோமோ அது நன்றாக கருகியது!’ - இப்படியும் சொல்வார் ரவிசங்கர்ஜி

‘வாழும் கலை'யின் விற்பன்னர் ஆன்மீக‌ குருவான ஶ்ரீஶ்ரீ ரவிசங்கர்ஜி சொன்ன ஒரு ஸ்டேட்மெண்ட் தான் இப்போது இணைய உலகின் சென்சேஷனல் டாக்! அண்மையில் மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியில் இருக்கும் 512 கிராமங்களுக்கு தன் டீமோடு பாதயாத்திரை விசிட் அடித்த ரவிசங்கர்ஜி, 'ஆன்மீகத்தில் ஈடுபாடு இல்லாததால் தான் இந்தப் பகுதி விவசாயிகள் தற்கொலையில் ஈடுபடுகிறார்கள்' என்று போகிற போக்கில் பொக்ரான் குண்டை வீசிவிட்டுப் போயிருக்கிறார். இப்படியே போனால் அடுத்து என்னவெல்லாம் சொல்வாரோ..? ஒரு சிறு கற்பனை!

ரவிசங்கர்ஜி

* `வயலும் வாழ்வும்' நிக‌ழ்ச்சிக்கு 'வயலும் வாழும் கலையும்' என பெயர் மாற்றி பொதிகை டிவி உள்ளிட்ட அரசு சேனல்களில் இலவச ஆன்மீக வகுப்பை ஆரம்பித்து வைப்பார். 'கொஞ்சம் பாக்டம்பாஸ் 2020 யூரியாவோடு கொஞ்சம் ஜெய்குருதேவ் மந்திரத்தைக் கலக்கி அதோடு நிறைய பக்தியைக் கலந்தால் அமோக மகசூல் கிடைக்கும்' என நிகழ்ச்சியில் கலந்து கொள்வோர் ஹஸ்கி வாய்ஸில் சொல்வார்கள்.    

* காலையில் எழுந்ததும் வயல்காட்டுப் பக்கம் ஒதுங்கும் வழக்கம் கொண்ட இந்தியர்களுக்குத் தடை போடச் சொல்வார். வயல் என்பது நம் பூமாதேவி. எனவே வயல்காட்டில் காலைக் கடன்களைக் கழிப்பது என்பது பாவச் செயலாகக் கருதப்படும். மீறிக் கழிப்பவர்களை 'டாய்லெட் ஸ்குவாட்' என்ற படையை வைத்து விரட்டி அடிக்கலாம். மக்களும், 'இருக்கவே இருக்கு ...எங்க ரயில்வே ட்ராக் ஓரம்' என்று ஓரஞ்சாரமாக ஒதுங்குவார்கள். அதற்கும் கருடபுராணத்தில் இருந்து மேற்கோள் காட்டி ஏதாவது கிளப்பிவிட்டாலும் கிளப்பிவிடுவார்.

* ஏறும் மேடையெல்லாம், `யாராக‌ இருந்தாலும் மரணத்திற்குப் பின் இறுதியில் தீயில் வெந்து அனைவரும் பிடி சாம்பலாக ஆவர் என்னும் தத்துவத்தை உணர்த்தும் திருநீறை உரத்தோடு கலந்து வயலில் இடவேண்டும்'என்று சொல்வார். `வீரிய விளைச்சல் இதன் மூலம் சாத்தியம்!' என்று சொல்லவும் வாய்ப்புகள் அதிகம்.
 
* தினமும் வயல்வெளியின் நான்கு மூலைகளிலும் தனுராசனம், சிரசாசனம் என பலவகை யோகாக்களை செய்து பாசிட்டிவ் வைப்ரேஷனை உண்டாக்குவதன் மூலம் பசுஞ்செடிகள் தழைத்தோங்கும் என சயின்டிஸ்ட்டுகள் மூலம் ஆதார பூர்வமாக நிரூபிக்கப் போராடுவார்.

* அந்தப்பகுதி விவசாயிகள் அனைவரையும் 'ஸ்பிரிச்சுவல் ஃபார்மர்ஸ்' என்று அறிவித்து விடுவார். எல்லோரும் வெள்ளை அங்கி, நீள் தாடி, மயிலிறகு என குருதேவ் போலவே மாறி விடுவார்கள். தும்மினாலும்கூட 'ஜெய் குருதேவ்' என்று சொல்லும் அளவுக்கு மாறி விடுவார்கள்.

* வருண பகவானை வரவழைக்க, ஒவ்வொரு வயல்களிலும் யாகங்கள் வளர்க்கச் சொல்வார். தன் வயலில் மட்டும் மழை பொழிய வேண்டுமென்றால் `ஸ்பெஷல் பேக்கேஜ் யாகம்', ஊருக்கு மட்டும் என்றால் `சூப்பர் டீலக்ஸ் பேக்கேஜ்' யாகம் என பல வெரைட்டிகளில் யாகம் வளர்த்து மகசூல் பெருக்கிக் காட்டுவார். 

* `விதர்பா' என்ற பெயரே `விட்ருப்பா' என்பதைப்போல ஒரு நெகட்டிவ் வைப்ரேஷன் மோடில் இருப்பதால் `ஶ்ரீஶ்ரீ ரவிச‌ங்கர்ப்பா' என்று பெயர் மாற்றி அந்தப் பிராந்தியத்தையே பசுமைக் காடாக உருவாக்கிக் காட்டுவார்.

* அந்தப் பகுதி விவசாயிகள் எல்லோரையும் ஆன்மீகத்தில் கில்லியாக மாற்றிக் காட்டுவதன் மூலம் எல்லோரையுமே வாழ்க்கைக் குறித்து பாஸிட்டிவ் எண்ணங்களோடு மாற்றிவிடுவார். இதனால் பயிர் கருகினாலும், 'எதை விதைத்தோமோ அது நன்றாக கருகியது. எதை விதைப்போமோ அதுவும் நன்றாகவே கருகும்!' என புன்முறுவலோடு அடுத்த வேலையைப்பார்க்க மும்பை, புனே என கூலாக ஜாகை மாற்றிக் கிளம்பி விடுவார்கள் இந்த `ஸ்பிரிச்சுவல் ஃபார்மர்ஸ்' எனப்படும் ஆன்மீக‌ விவசாயிகள்!

* ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்ட விவசாயிகளுக்கு ஶ்ரீஶ்ரீ, ஶ்ரீலஶ்ரீ, ஶ்ரீஶ்ரீஶ்ரீ என பட்டங்கள் கொடுத்து மேடையேற்றி விடுவார். நீண்ட ஜடாமுடியோடு அலையும் விவசாயிகளுக்கு சிறப்பு வகுப்புகள் எடுத்து `ஆர்ட் ஆஃப் லிவ்விங் லெஜண்ட்' என்ற பட்டம் கொடுப்பார். அதை தங்கள் வீடுகளில் மாட்டிக் கொள்வதன் மூலம் சோகம் மறந்து கவலை மறந்து விவசாயிகள் அனைவரும் ஆரோக்யா விளம்பரத்தில் வரும் குடும்பம் போல செம செழிப்பாக வாழ்வார்கள். நாங்க, மாடு, இயற்கை... இதுக்கு மேல வேறென்னங்க வேணும். 
‍   
 * விவசாயிகள் அனைவருக்கும் கர்நாடக, மகாராஷ்டிரா, ஆந்திரா சங்கீதப் பயிற்சி அளிப்பார். 'முகாரி' போன்ற சோகரகம் பாடாமல், சுத்தஸாவேரி, கெளரிமனோஹரி, கல்யாணி, கீரவாணி போன்ற பாஸிட்டிவ் வைப்ரேஷன் உள்ள ராகங்களைக் கற்றுக் கொடுத்து எல்லோரையும் கவலை மறந்து பாட வைப்பார். இதன் மூலம் தற்கொலை எண்ணம் துளியும் அவர்களுக்கு எக்காலத்துக்கும் வராது என்பார். 

இதைத்தான் கவுண்டர் மகான் அன்றே சர்க்காஸமாய் சொன்னார். 'அப்புறம் ஏன் பல்லு வெளக்குறே? திருப்புகழைப்பாடிட்டு போக வேண்டியதுதானே?' என்று!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close