Published:Updated:

பெண் இன்ஸ்பெக்டர் மர்மமான முறையில் தற்கொலை!

கார்த்திக் துரைமகாராஜன்.சி
பாலமுருகன். தெ
பெண் இன்ஸ்பெக்டர் மர்மமான முறையில் தற்கொலை!
பெண் இன்ஸ்பெக்டர் மர்மமான முறையில் தற்கொலை!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த காவல்துறை ஆய்வாளர் அமுதசெல்வி இன்று திடீரென்று தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

பெண் இன்ஸ்பெக்டர் மர்மமான முறையில் தற்கொலை!


சிவகங்கை மாவட்டம், மானாமதுரை கன்னார் தெருவைச் சேர்ந்தவர் அமுதசெல்வி. இவர் திருச்சி ரயில்வே காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். சமீபத்தில் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டார். பணியில் சேராத அவர் 16.5.2017 வரை மருத்துவ விடுப்பு எடுத்து இருந்தார். இதற்கு முன்பு பரமக்குடி, ராமேஸ்வரம், ராமநாதபுரம் போன்ற பகுதிகளில் துணை ஆய்வாளராக பணியாற்றிவர். அவருடைய கணவர் பாண்டியராஜன். அவர் இந்திய ராணுவத்தில் இருந்து 2014-ம் ஆண்டு ஓய்வு பெற்று தற்போது திருச்செந்தூர் அருகேயுள்ள அரசுத்துறை நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

அவருடைய அப்பாவும் காவல்துறையில் பணியாற்றிவர். இவருடைய தங்கச்சி ஜான்சிராணி காவல்துறை துணை ஆய்வாளராக இருந்தபோதே பரமக்குடி அருகேயுள்ள குமாரக்குறிச்சியைச் சேர்ந்த தலைமை காவலரை காதலித்தார். இதுதொடர்பாக அவருடன் அமுதசெல்விக்கு மனக்கசப்பு இருந்து வந்தது. இந்நிலையில், மானாமதுரை வீட்டில் இருந்த அமுதசெல்வி திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது உடல் தற்போது சிவகங்கை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அமுதசெல்வி வீட்டில் டி.எஸ்.பி சங்கர் சோதனை மேற்கொண்டார். வீட்டில் இருந்து கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தக் கடிதத்தில், 'எனக்கு ஆஸ்துமா பிரச்னை இருக்கிறது. கையில் துணி இல்லாமல் செல்லமுடியவில்லை. மற்றவர்கள் முன்னால் பேசுவது நெருடலாக இருக்கிறது. இதுபோன்ற பிரச்னைகள் காரணமாக தற்கொலை செய்துகொள்கிறேன். என் சாவுக்கு யாரும் காரணமில்லை' என்று எழுதியுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இதுகுறித்து உறுதியான தகவல்கள் தெரியவில்லை. இந்த வழக்கு குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.