Published:Updated:

பாகிஸ்தான் ஐஎஸ்ஐ ஏஜென்ட் உத்தரப்பிரதேசத்தில் கைது!

ராகினி ஆத்ம வெண்டி மு.
பாகிஸ்தான் ஐஎஸ்ஐ ஏஜென்ட் உத்தரப்பிரதேசத்தில் கைது!
பாகிஸ்தான் ஐஎஸ்ஐ ஏஜென்ட் உத்தரப்பிரதேசத்தில் கைது!

உத்தரப்பிரதேச தீவிரவாத எதிர்ப்பு போலீஸாரால் சந்தேகத்துக்குரிய பாகிஸ்தான் உளவுப்பிரிவான ஐஎஸ்ஐ.,யின் ஏஜென்ட் இன்று உத்தரப்பிரதேச மாநிலம் ஃபைசாபாத்தில் கைது செய்யப்பட்டார்.

பாகிஸ்தான் ஐஎஸ்ஐ ஏஜென்ட் உத்தரப்பிரதேசத்தில் கைது!

உ.பி.,யில் உளவாளிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகக் கிடைத்த தகவலால் உத்தரப்பிரதேச தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில் சந்தேகத்துக்குரிய ஐஎஸ்ஐ ஏஜென்ட் பிடிபட்டுள்ளார் என போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும், ஒரு உளவாளியை கண்டறிந்துள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர். 

கைது செய்யப்பட்ட உளவாளி அஃப்தாப் அலி என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அஃப்தாப் அலி, பாகிஸ்தான் உயர் ஆணையத்திடம் தொடர்பில் இருந்ததாகவும், அவர் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பின் கீழ் பயிற்சி பெற்றவர் என்றும் உ.பி போலீஸார் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும், கடந்த மாதமே பாகிஸ்தான் உளவாளிகள் உ.பி-யில் தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபடலாம் என உளவுப்படை எச்சரித்ததாகக் கூறப்படும் வேளையில் இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பாகிஸ்தான் உளவுப்பிரிவினர் அயோத்தியா, வாரணாசி, தாஜ்மஹால், பிருந்தாவனம் ஆகிய இடங்களில் தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட இருந்ததாகப் போலீஸார் கூறினர்.

தற்போது, ஒரு உளவாளி மட்டுமே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதால் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெறலாம் என சந்தேகித்து உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.