Election bannerElection banner
Published:Updated:

கத்தரி வெயில் தொடங்கியாச்சு... சென்னை நிலவரம் என்ன?

கத்தரி வெயில் தொடங்கியாச்சு... சென்னை நிலவரம் என்ன?
கத்தரி வெயில் தொடங்கியாச்சு... சென்னை நிலவரம் என்ன?

கத்தரி வெயில் தொடங்கியாச்சு... சென்னை நிலவரம் என்ன?

'கத்தரி வெயில்' என்று கூறப்படும் அக்னி நட்சத்திரம், இன்று தொடங்கியுள்ளது. ஆனால், அடுத்த மூன்று நாள்களுக்கு சென்னையில் வெப்பம் குறைவாகத்தான் இருக்குமாம். 

கத்தரி வெயில் தொடங்கியாச்சு... சென்னை நிலவரம் என்ன?


 

பருவமழை பொய்த்ததால், இந்தியா முழுவதும் இந்த ஆண்டு கடுமையான வறட்சி நிலவுகிறது. குறிப்பாக, தமிழகத்தில் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டன. மழை இல்லாததால் தமிழகத்தில் ஜனவரி மாதம் முதலே கடுமையான வெயில் சுட்டெரித்துவருகிறது.

குறிப்பாக, கடந்த மாதம் முதல் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், வேலூர், ஈரோடு, கரூர் ஆகிய பகுதிகளில் 100 ஃபாரன்ஹீட்டுக்கும் மேலாக வெயில் கொளுத்துகிறது. இதனால், மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.  இந்த நிலையில், கத்தரி வெயில் என்று கூறப்படும் 'அக்னி நட்சத்திரம்' இன்று  தொடங்கியுள்ளது. இந்த அக்னி நட்சத்திரம், வரும் 28-ம் தேதி வரை நீடிக்கும். 

சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன்  நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில், “ கத்தரி தொடங்கினாலும், கடற்கரைப் பகுதிகளில் காற்றின் வேகம் காரணமாக, அடுத்த மூன்று நாள்களுக்கு வெப்பம் குறைவாக இருக்கும். தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்ப நிலை அதிகரித்துக் காணப்படும். மேலும், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில், அடுத்து வரும் நாள்களில் கோடைமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இல்லை' என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு