Election bannerElection banner
Published:Updated:

ஒரு வருடத்தில் இதெல்லாம் சாத்தியம் தானா?

ஒரு வருடத்தில் இதெல்லாம் சாத்தியம் தானா?
ஒரு வருடத்தில் இதெல்லாம் சாத்தியம் தானா?

ஒரு வருடத்தில் இதெல்லாம் சாத்தியம் தானா?

மத்திய மாநில அரசுகள், மலிவான விலையில் தடையற்ற மின்சாரம் வழங்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக, மத்திய  மின்துறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

ஒரு வருடத்தில் இதெல்லாம் சாத்தியம் தானா?


 

பிரதமர் நரேந்திர மோடி நிர்ணயித்த இலக்கின்படி மே-1, 2018-ஆம் ஆண்டுக்குள், மின்சார வசதி இல்லாத 18,452 இந்திய கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருவதாக, பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். 

ஒரு வருடத்தில் இதெல்லாம் சாத்தியம் தானா?

நேற்று, டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பியூஸ் கோயல், ' 2018-ஆம் ஆண்டு மே-1-ஆம் தேதிக்குள், மின்சாரம் இல்லாத 18,452 கிராமங்களுக்கு மின்சார வசதி அளிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது பிரதமரின் வாக்குறுதி. தற்போதைய நிலவரப்படி (மே 3, 2017) 13,377 கிராமங்கள் மின்சாரமயமாக்கப்பட்டுள்ளன. இன்னும் ஒரு வருடத்தில், மின்சார வசதி இல்லாத கிராமமே இருக்காது. கிராமங்களில் மின்சார வசதி வழங்கப்பட்ட பின்னர், மலிவு விலையில் மின்சாரம் வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். முக்கியமாக, தொழில் நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் மின்சாரம் வழங்க, மாநில அரசுடன் இணைந்து மத்திய அரசு முயற்சிகள் மேற்கொள்ளும்' என்றார். 

'அனைத்து கிராமங்களிலும் மின்சாரம், மலிவு விலையில் மின்சாரம், தடையற்ற மின்சாரம் என்று பியூஸ் கோயல் கூறியுள்ளது சாத்தியமற்றது' என்று எதிர்கட்சிகள் கூறிவருகின்றன. 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு