Election bannerElection banner
Published:Updated:

பத்திரப்பதிவு தடை நீங்குகிறது? அங்கீகரிக்கப்படாத வீட்டுமனை வரையறைக்கு தமிழக அரசு ஒப்புதல்!

பத்திரப்பதிவு தடை நீங்குகிறது? அங்கீகரிக்கப்படாத வீட்டுமனை வரையறைக்கு தமிழக அரசு ஒப்புதல்!
பத்திரப்பதிவு தடை நீங்குகிறது? அங்கீகரிக்கப்படாத வீட்டுமனை வரையறைக்கு தமிழக அரசு ஒப்புதல்!

பத்திரப்பதிவு தடை நீங்குகிறது? அங்கீகரிக்கப்படாத வீட்டுமனை வரையறைக்கு தமிழக அரசு ஒப்புதல்!

பத்திரப்பதிவு தடை நீங்குகிறது? அங்கீகரிக்கப்படாத வீட்டுமனை வரையறைக்கு தமிழக அரசு ஒப்புதல்!

அங்கீகாரமில்லாத நிலங்களைப் பத்திரப்பதிவுசெய்யக் கொண்டுவரப்பட்ட புதிய விதிகளுக்கு, அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தமிழக அரசு வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

விளைநிலங்களை வீட்டுமனைகளாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து, யானை ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அங்கீகாரமில்லாத விளை நிலங்களைப் பத்திரப்பதிவுசெய்யத் தடை விதித்தது.

இந்தத் தடையை எதிர்த்து ரியல் எஸ்டேட்ஸ் அதிபர்கள், உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடுசெய்தனர். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், 2016 அக்டோபர் 20-ஆம் தேதிக்கு முன் பதிவு செய்யப்பட்ட மனைகளைப் பத்திரப்பதிவுசெய்ய அனுமதி அளித்தது.

இந்தத் தடை நீக்கத்தை எதிர்த்து, உயர்நீதிமன்றத்தில் ராஜேந்திரன் முறையீடுசெய்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 'பத்திரப்பதிவுக்கு விதிக்கப்பட்ட தடையைத் தளர்த்தியது தற்காலிகமே' என்று தெரிவித்துள்ளதோடு, மார்ச் 28-ஆம் தேதி அளிக்கப்பட்ட தற்காலிக உத்தரவு இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது என்று கூறியிருந்தது.

இந்த நிலையில், வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மறு உத்தரவு வரும் வரை பத்திரப்பதிவுசெய்ய இடைக்காலத் தடை தொடரும் என்றதோடு, திட்ட அறிக்கையைத் தாக்கல்செய்ய, தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, உயர்நீதிமன்றத்தில் இன்று, அங்கீகாரமில்லாத நிலங்களைப் பத்திரப்பதிவுசெய்ய கொண்டுவரப்பட்ட புதிய விதிகளுக்கு, அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அய்யாதுரை தெரிவித்தார். 'திட்டத்தை முழு வடிவில் அரசாணையாகத் தாக்கல்செய்ய ஒருநாள் அவகாசம் தேவை' என்று அரசு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார்.

இதனிடையே, பத்திரப்பதிவுத்துறை இயக்குநர் ஹன்ஸ்ராஜ் வர்மா உயர்நீதிமன்றத்தில் இன்று அறிக்கை ஒன்றைத் தாக்கல்செய்தார். அதில், தடைக்காலத்தில் 9,760 அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகள் பத்திரப்பதிவாகியுள்ளன. செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் மார்ச் 28-ஆம் தேதி வரை வீட்டுமனைகள் பத்திரப்பதிவுசெய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் ஒன்பது மண்டலங்களில் அங்கீகரிக்கப்படாத மனைகள் பத்திரப்பதிவுசெய்யப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசு நாளை தாக்கல்செய்ய உள்ள புதிய விதிகளால், பத்திரப்பதிவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீங்கும் என்று தெரிகிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு