வெளியிடப்பட்ட நேரம்: 04:00 (06/05/2017)

கடைசி தொடர்பு:08:58 (06/05/2017)

மே 12-ல் வருகிறது 'சரவணன் இருக்க பயமேன்'.

 

 

'வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன்' படத்தின் மூலம் ரசிகர்களுக்குக் கிச்சுக்கிச்சு மூட்டிய இயக்குநர் எழில், அடுத்ததாக இயக்கியுள்ள படம் 'சரவணன் இருக்க பயமேன்'. 'கெத்து', 'மனிதன்' ஆகிய திரைப்படங்களின் வெற்றிக்குப் பிறகு, இந்தத் திரைப்படத்தின் வாயிலாக கமர்ஷியல் ஃபார்முலாவுக்குத் திரும்பியுள்ளார், உதயநிதி ஸ்டாலின்.

இதில் அவருக்கு ரெஜினா, ஸ்ருஷ்டி டாங்கே என இரு கதாநாயகிகள். சூரி, சாம்ஸ், மன்சூர் அலிகான், ரோபோ சங்கர், லிவிங்ஸ்டன் எனப் பெரிய ஸ்டார் கேங்குடன் பலர் நடிக்க, இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார் டி.இமான். முதல்முறையாக சூரி-உதயநிதி கூட்டணியில் உள்ள காமெடி, எந்தளவுக்கு எடுபடும் என்ற எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கிறது.

 

 

இந்தப் படத்தைத் தொடர்ந்து, தளபதி பிரபு இயக்கத்தில் 'பொதுவாக என் மனசு தங்கம்', கொளரவ் மற்றும் பிரபு சாலமன் ஆகியோரின் இயக்கத்தில் தலா ஒரு படம் என பிஸியாகவே நடித்துவருகிறார் உதயநிதி ஸ்டாலின். இவரைப் போலவே, அதிக படங்களைக் கைவசம் வைத்திருக்கும் ரெஜினாவும் செம பிஸி நடிகைதான்.

அதில், `நெஞ்சம் மறப்பதில்லை’, `ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ ஆகிய படங்கள் ரிலீஸுக்கு ரெடி. இது தவிர தமிழில், ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’, ‘ராஜதந்திரம் 2’ மற்றும் தெலுங்கில் ‘நக்‌ஷத்ரம்’ என ஓய்வு இல்லாமல் நடித்துவருகிறார் ரெஜினா.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க